என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public exam"

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
    • திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.

    இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவச் செல்வங்களைச் சந்தித்து பதற்றம் இல்லாமல், மன உறுதியோடும் மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ளுமாறு அவர் நம்பிக்கையூட்டினார்.

    • இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்தது.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.

    இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
    • மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.

    இதற்காக மாநிலம் முழுக்க 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

    காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 25) நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது.

    • கடந்த 6ம் தேதி முதல் அசாமில் 11ம் வகுப்பு தேர்வு தொடங்கியது.
    • அசாமில் 11 ஆம் வகுப்பு கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு தொடர்பாக புகார்கள் எழுந்தது.

    அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6ம் தேதி முதல் அசாமில் தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது.

    இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, மார்ச் 24- 29 வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்வதாக அசாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார்.

    முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
    • மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.

    புதுடெல்லி:

    பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

    இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். வரும் 27-ம் தேதி காணொலி மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உதவிக் குறிப்புகளை பிரதமர் மோடி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.

    நிகழ்ச்சியின்போது போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2,000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சகம் பரிசு வழங்க உள்ளது.

    • அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும்
    • மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதற்கான பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்படுவதால் அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான பல்வேறு கடிதங்கள், அறிவுறுத்தல்கள் எல்லாம் மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட இருக்கின்றன. இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
    • 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள் நேற்று வெளியாகி உள்ளன.

    அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 பேர் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது.

    நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் 198 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 19 ஆயிரத்து 877 பேரும், பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 810 பேரும் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை சம்மந்தப்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் மேல்நிலைக்கல்வி மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாள்கள் ஏற்கனவே அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளில் டாப் ஷீட்டுடன் விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிவடைந்து தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியது மார்ச் 9-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று செய்முறை பயிற்சிகளை மேற்கொண்டனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 95 ஆயிரம் மாணவ-மாணவிகள் செய்முறைத் தேர்வெழுதினார்கள்.

    இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு எந்த குளறுபடியுமின்றி செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து வரும் 9-ந் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிப்பதுடன், தேர்வுத்துறை சலுகை அறிவித்த மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.

    எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது உள்பட ஒருசில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.

    • தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
    • மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் முறையாக நடத்த அரசு தேர்வுத்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

    12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (13-ந்தேதி) பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வை 16.25 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 3,225 மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

    மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய வசதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கழிவறை, தூய்மை பணி, போதுமான அளவு பணியாளர்கள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போன்றவற்றை ரகசியமாக கொண்டு வர தேவையான அளவு வாகனங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை விரிவாக மேற்கொள்ள வேண்டும்.

    மையங்களில் வினாத்தாளை பாதுகாப்பாக வைக்கவும், விடைத்தாள்களை திருத்தம் செய்ய பாதுகாப்பு மையங்களில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கவும் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

    • எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப்போகிறது.
    • தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது. உயர்த்தி விடுவது.

    சென்னை:

    12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

    சென்னையில் மட்டும் தலா 180 மையங்களில் 88 ஆயிரத்து 104 மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேர் எழுத இருக்கின்றனர்

    பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

    என்ன பரீட்சை டென்ஷனில் இருக்கிறீர்களா... ஒரு டென்ஷனும் வேண்டாம்... எந்த பயமும் வேண்டாம். இது வெறும் இன்னொரு பரீட்சை. அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும்.

    எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு அப்ரோச் பண்ணுங்க.

    உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கை, மன உறுதி தான்... அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள்.

    தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது. உயர்த்தி விடுவது. எந்தவித தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

    தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள்... புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவா முழுமையா எழுதுங்கள்.

    நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோரும், ஆசிரியர்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்.

    முதல்வராய் மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவனாய் வாழ்த்துகிறேன். ஆல் தி பெஸ்ட்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.
    • பொதுத்தேர்வுகளின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தை குறைப்பதாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 7 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 8 லட்சத்து 51,303 பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுத்தேர்வுகளின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×