search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public roadblocks"

    • அரசின் இலவச வீடு கேட்டு நடந்தது
    • போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்

    கலவை:

    ஆற்காடு அருகே வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது33).

    இவர் அரசின் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இவரது வீடு 2 நாட்களுக்கு முன்பு இடிந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் வேப்பூர் மெயின் ரோட்டில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு வந்த ஆற்காடு போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊசிக்கல் மேடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும் மேலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைத்து அந்த தண்ணீரை தக்காளி செடிக்கு விடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைப் குடிநீர் குழாய் உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்ப ள்ளி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . கிராமத்தின் அருகே ஜக்கம் பாளையம் குட்டிய கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இப்பகுதியில் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் 30 ஆயிரம் லிட்டர் ஆக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 27 நாட்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.ஊராட்சி தலைவர் மோகன வள்ளி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய அதிகாரிகளிடம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை அடுத்து ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    • 100 நாள் வேலையில் நிலுவை சம்பளம் வழங்கவில்லை
    • பொதுமக்கள் சாலை மறியல்


    துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சி சங்கம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வார காலமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேலை வழங்கப்படாமலும், ஏற்கனவே செய்யப்பட்ட வேலைக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்யப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சங்கம்பட்டி கிராம பொதுமக்கள் சங்கம்பட்டி - எரகுடி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துறையூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தற்சமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் மழையின் காரணமாக சேறாக இருப்பதால், புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் எனவும், சம்பள பணம் இந்த வாரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சங்கம்பட்டி- எரகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    • போலீசாரிடம் வாக்குவாதம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே சுடுகாட்டுப் பாதை பிரச்சனையை தீர்க்கக் கோரியும், இது தொடர்பான பிரச்சனையில் முதியவரை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கடந்த பல ஆண்டுகளாக தனியார் விவசாய நிலம் வழியாக பிணங்களை அந்த கிராம பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கிய மற்றொரு நபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிணங்களை எடுத்துச் செல்லும் பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தோண்டினாராம். இதனால் அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பான பிரச்சினையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(65) என்பவரை அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் வெட்டினராம்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சுடுகாட்டுப் பாதை பிரச்சினையை தீர்க்கக் கோரியும், சீனிவாசனை கத்தியால் வெட்டிய நபர்களை கைது செய்யக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, ஏற்கனவே புகார் கொடுத்த போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சீனிவாசனை வெட்டும் அளவுக்கு பிரச்சினை வளர்ந்திருக்காது என்று கோபமாக தெரிவித்த பொதுமக்கள் சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை போலீசார் தடுக்கவே அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி கார்த்திக் பொதுமக்களை சமரசப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் 100 நாள் திட்ட சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றதலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு வந்த அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் 100 நாள் திட்டபணி யாளர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை சரிவர வழங்க வில்லை என்று கூறினர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து அவ்வூர் வழியாக செல்லும் வேலூர் - ஆரணி மெயின்ரோடு மேட்டுக்குடி கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீ சன், வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இனிவரும் காலங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதை யில் திருப்பி விடப்பட்டது.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன.
    • இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. அவற்றில், குடியிருக்கும் மக்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் குடிநீர் இணைப்பு மூலமும், பொது குழாய்கள் மூலமும், தினமும் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், குடிநீர் விநியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், டீக்கடை, ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் உள்ளிட்டோர் குடிநீர் தேவைக்காக காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பஞ்சாயத்து நிர்வாகத்தினர், குடிநீர் இணைப்பில் உள்ள மோட்டார் பழுத டைந்துவிட்டதால் அதை சரி செய்த பிறகுதான் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று காரணம் கூறியதாக தெரிகிறது.

    இதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, சென்னாக்கல்புதூர் கிராம மக்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டிற்கு வந்தனர். அவர்கள் மோகனூர் - பரமத்தி நெடுஞ்சாலையில் உட்கார்ந்து திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இருபுற மும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பஸ்களில் இருந்து பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தடையின்றி குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். அதையடுத்து, ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்து நின்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

    இது குறித்து, மணப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் இந்துமதி கூறும்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், மோட்டார் ரூம் அருகே தண்ணீர் வருவதில்லை. மேலும் மோட்டாரும் பழுதாகிவிட்டது. அவற்றை விரைந்து சரி செய்து, மணலை அப்புறப்படுத்தி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

    • பஸ்களை சிறை பிடித்தனர்
    • தாசில்தார் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனிடையே அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் இடிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்றைய தினம் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீர்வளத்துறை சார்பில் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-பொன்னியம்மன் கோயில் சாலை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் சாலை செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தி 10, நாட்கள் அவகாசம் அளிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேரம் சாலை மறியலை அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் நேற்று இரவு இதே கோரிக்கை முன்வைத்து நல்லதம்பி எம்எல்ஏ வீடு மற்றும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டும வீடுகளை இடிக்க கூடாது என கோரிக்கைகளை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • குடியிருப்பில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்தது.
    • இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள கருக்கால்வாடி கிராமம் புகையிலைகாரன் தெருவில் உள்ள குடியிருப்பில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனிடையே, மழைநீர் வெளியேற உரிய பாதுகாப்பு மற்றும் சாக்கடை வசதி செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தாரமங்கலம் - இரும்பாலை பிரதான சாலையில் பவர் கேட் அருகே சாலையில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் நேரம் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடந்த 2010 -ம் ஆண்டு வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • கடந்த மாதம் 10 -ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சில வீடுகள் மட்டும் அகற்றப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் கபிலர்மலை சாலையில் சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது.இந்த வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது .கடந்த 2010 -ம் ஆண்டு வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் எந்த ஒரு வீடும் அகற்றப்படாத நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு நிறைவேற்ற கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து கடந்த மாதம் 10 -ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சில வீடுகள் மட்டும் அகற்றப்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குறிப்பிட்ட வீடுகளை மட்டும் இடித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மீண்டும் ஆக்கிரமிப்பு வீடுகளில் சில வீடுகளை மட்டும் இடித்தனர்.இந்நிலையில் அனைத்து வீடுகளையும் இடிக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்படி வீடுகளை இடிக்கவில்லை என மீண்டும் மனு தாக்கல் செய்ததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறக்கத்தினர் .

    அதன் காரணமாக இன்று காலை ஜேடர்பாளையம்- கபிலர் மலை சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து வீடுகளையும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் ஒரு வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் ஏ.டி.எஸ்.பி. (மதுவிலக்கு) மணிமாறன் தலைமையில் போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் என ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×