search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் அருகே குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    மோகனூர் அருகே குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன.
    • இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. அவற்றில், குடியிருக்கும் மக்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் குடிநீர் இணைப்பு மூலமும், பொது குழாய்கள் மூலமும், தினமும் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், குடிநீர் விநியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், டீக்கடை, ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் உள்ளிட்டோர் குடிநீர் தேவைக்காக காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பஞ்சாயத்து நிர்வாகத்தினர், குடிநீர் இணைப்பில் உள்ள மோட்டார் பழுத டைந்துவிட்டதால் அதை சரி செய்த பிறகுதான் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று காரணம் கூறியதாக தெரிகிறது.

    இதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, சென்னாக்கல்புதூர் கிராம மக்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டிற்கு வந்தனர். அவர்கள் மோகனூர் - பரமத்தி நெடுஞ்சாலையில் உட்கார்ந்து திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இருபுற மும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பஸ்களில் இருந்து பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தடையின்றி குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். அதையடுத்து, ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்து நின்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

    இது குறித்து, மணப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் இந்துமதி கூறும்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், மோட்டார் ரூம் அருகே தண்ணீர் வருவதில்லை. மேலும் மோட்டாரும் பழுதாகிவிட்டது. அவற்றை விரைந்து சரி செய்து, மணலை அப்புறப்படுத்தி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

    Next Story
    ×