என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜேடர்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு
- கடந்த 2010 -ம் ஆண்டு வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிநீதிமன்றம் உத்தரவிட்டது.
- கடந்த மாதம் 10 -ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சில வீடுகள் மட்டும் அகற்றப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் கபிலர்மலை சாலையில் சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது.இந்த வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது .கடந்த 2010 -ம் ஆண்டு வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் எந்த ஒரு வீடும் அகற்றப்படாத நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு நிறைவேற்ற கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து கடந்த மாதம் 10 -ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சில வீடுகள் மட்டும் அகற்றப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குறிப்பிட்ட வீடுகளை மட்டும் இடித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மீண்டும் ஆக்கிரமிப்பு வீடுகளில் சில வீடுகளை மட்டும் இடித்தனர்.இந்நிலையில் அனைத்து வீடுகளையும் இடிக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்படி வீடுகளை இடிக்கவில்லை என மீண்டும் மனு தாக்கல் செய்ததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறக்கத்தினர் .
அதன் காரணமாக இன்று காலை ஜேடர்பாளையம்- கபிலர் மலை சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து வீடுகளையும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் ஒரு வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் ஏ.டி.எஸ்.பி. (மதுவிலக்கு) மணிமாறன் தலைமையில் போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் என ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்