என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliyangudi"

    • பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் இனிப்புகள், பூக்கள் வழங்கி வரவேற்றார்.
    • மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்ப பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் இனிப்புகள். பூக்கள் வழங்கி வரவேற்றார்.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்சிக்கு தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை கைலாசம் வரவேற்றார். ஆசிரியை நீலாம்பிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

    அதனை தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்று பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும் நகர்மன்றத் தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் ரூ. 1000 பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் பாத்திமா, 9-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கரநாராயணன், ஆசிரியர்கள் முகம்மது, கண்ணன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியை கள், அலுவலர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வ லர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    திடீர் சாவு

    தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவி த்தொகை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை ஆர்.டி.ஓ. மேற்கொண்டார். மேலும் தங்கச்சாமியின் குடும்பத்தி னருக்கு அரசு நிவாரண தொகை கிடைக்க செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கச்சாமி உடலை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர்.

    இதற்கிடையே இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள தங்கச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.
    • பூஜையில் மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடிமாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    சிறப்பு பாலாபிஷேகம்

    தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிமாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 18 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • புற்றுக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆவணி மாத பவுர்ணமி பூஜை நடை பெற்றது.

    பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பவுர்ணமி நாளில் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டி வழிபாடு

    மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆவணி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழி வாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர் சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபி ஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிர மணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    108 திருவிளக்கு பூஜை

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப் பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    புளியங்குடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.
    புளியங்குடி:

    புளியங்குடி கால்நடை மருத்துவமனையில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆதரவற்ற பெண்கள் ஒருவருக்கு 5 ஆடுகள் வீதம் 100 பேருக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்சிக்கு சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் விஜயாசவுந்திர பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி திட்ட விளக்க உரையாற்றினார். 

    சிந்தாமணி கால்நடை மருத்துவர் கருப்பையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை கலந்து கொண்டு 100 பெண் பயனாளி களுக்கு ஆடுகளை வழங்கி னார். 

    இதில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரக்மான், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் எராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    • புளியங்குடி உள்ள முப்பெரும் தேவியர் கோவிலில் தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.
    • அம்மன்களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.

    கோவிலில் உள்ள அம்மன் குருநாதர் சக்தியம்மா (ஆண்) பெண் உருவத்தில் சேலை அணிந்து அருள் வாக்கு கொடுப்பதால், வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் சேலை எடுத்து கொடுப்பார்கள்.இதனை பவானி அம்மன் நேரடியாக பெற்றுக் கொள்வதாக ஐதீகம். இதனால் பக்தர்கள் இந்த நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

    30-ம்ஆண்டு ஐப்பசி மாதம் மகா பெரும் பூஜை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மன் களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 8 மணி கோவில் குருநாதர் சக்தியம்மா இந்நாளில் மட்டும் முழு பெண் உருவத்தில் இருந்து, ஒரு கையில் அக்னி சட்டியுடன் கொடுக்கும் அருள் வாக்கு நிகழ்வு நடந்தது. இந்த அருள் வாக்கு ஒரு வருடத்திற்கு உரிய பலனை நமக்கு கொடுக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படும் ஐதீகம்.

    பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தை வரம், திருமணத்தடை, வியாபார முடக்கம், தீராத நோய் நொடி, துன்பங்களை சரியாகும் என்பது நம்பிக்கை. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 10 மணி நேரம் அருள்வாக்கு தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 முதல் மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கல்கத்தா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மணிச்செல்வி, அபிலேஷ் இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

    புளியங்குடி:

    திருவேங்கடத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது20), சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள் முகேஷ்குமார் (வயது 20), முகமது ரியாஸ் (20). இவர்கள் 3 பேரும் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்றனர்.

    அப்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் மணிச்செல்வி (50), அவரது மகன் அபிலேஷ் (18) இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    புளியங்குடி பிரதானசாலையில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் 5 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • அம்மனுக்கு தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.
    • முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந் தோறும் (புரட்டாசி மாதம்) நடை பெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற் பொழிவாற்றினார். 6.30 மணியளவில் முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும், குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெ ட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடை பெற்றது. அதன் பிறகு முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் படித்து திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
    • பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைத்துதரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் ராஜ்குமார்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், வெண்ணிக்காலாடி நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகி கடலரசன் நன்றி கூறினார்.

    • புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு குழு ஒன்றை அமைக்கவும், சங்கத்திற்கான நிரந்தர வங்கி கணக்கு தொடங்கவும், கடந்த ஆண்டு புளியங்குடியில் மரக்கடை தீ எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இழப்பீடு வழங்க நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடவும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    • செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    புளியங்குடி:

    சென்னையில் நடைபெறும் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.

    புளியங்குடி கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகள் செஸ் தம்பி லோகோவை 200 கிலோ கோலப் பொடியில் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்தினர்.

    மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஓவியம் வரைந்த மாணவிகளையும், செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும் பள்ளி சேர்மன் சுபாஷ் கண்ணா, நிர்வாக இயக்குனர் பார்கவி கண்ணா, பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் ஆகியோர் பாராட்டினர்.

    • புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய டி.எஸ்.பி.யாக குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த அசோக் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். இவரது மனைவி தனுஷியா தென்காசியில் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணி புரிகிறார்.

    புதிதாக பொறுப்பேற்று கொண்ட டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×