search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "qualifiers"

    • கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
    • இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொள்கிறது.

    இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்த குவைத் அணி அதற்கு பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.

    இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    39 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக கோல்கள் (94 கோல்) அடித்தவர் ஆவார். போட்டி குறித்து அவர் கூறுகையில் 'இது என்னை பற்றியோ எனது கடைசி ஆட்டத்தை பற்றியோ கிடையாது. எனது ஓய்வு குறித்து நான் மீண்டும், மீண்டும் பேச விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது முதன்மையான நோக்கம். அது எளிதாக இருக்க போவதில்லை. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 3-வது சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம். நான் ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் அடுத்த சுற்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் நேரில் சென்று ஊக்கப்படுத்துவேன்' என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், 'எனது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும்.

    150 கோடி இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். அதனை நிறைவேற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அது இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குவைத் 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களை வரவேற்கும் விதமாகவும், ராஜஸ்தான் அணி கேப்டர் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்த என்பதாலும் தமிழ்நாடு - கேரள மக்களை இணைக்கும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலுடன் எடிட் செய்து அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டது. இதை நெட்டிசன்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை Tag செய்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

    • உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன.

    ஹராரே:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன. அந்த அணிகள் தகுதி சுற்றில் விளையாடுகிறது.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.

    இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக் கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். நாளைய தொடக்க ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நேபா ளம், வெஸ்ட்இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    • விருதுநகரில் மாணவர்கள் விளையாட்டு மையங்களில் சேர தகுதி போட்டிகள் 24-ந்தேதி நடக்கிறது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயி லும் மாணவ-மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல் வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தரும புரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதேபோல் மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி கள் சென்னை, ஜவஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம், மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவ- மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

    மேற்காணும் விளை யாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெ றும்.

    முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடக்கிறது.

    • முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் இன்று நடந்த 2-வது தகுதிச்சுற்றில் நெல்லை ராயல் கிங்சும், லைகா கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் 26 பந்தில் 7 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். பாபா அபராஜித் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 33 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 24 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா, ரஷியாவின் எவ்ஜினியாவிடம் 3-6, 6-7(2-7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்பதித்த இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் ரஷியாவின் எவ்ஜினியா ரோடினாவை நேற்று எதிர்கொண்டார். இதில் ரெய்னா 3-6, 6-7(2-7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடங்கள் நடந்தது. 
    ×