என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "quarrel"
- திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மேல தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் தஞ்சை கரந்தையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பவர் குடிபோதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.
திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றி வெங்கடேஷ் ஆத்திரமடைந்து கத்தியால் கேசவனின் கையில் குத்தினார்.
இதில் காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கேசவன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
- பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- ஆத்திரமடைந்து பஸ் முன், பின் கண்ணாடிகளை உடைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்லும் அரசு பஸ்சை வைப்பூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது கங்களாஞ்சேரி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த கங்களாஞ்சேரி புளியந்தோப்பு விஜய் (23) என்பவர் பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று டிரைவர் திருநாவுக்கரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி விஜய் ஆத்திரம் அடைந்து செங்கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளை உடைத்தார்.
கண்ணாடி துகள்கள் பட்டு டிரைவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு திருவாரூர் அரச மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
- சாப்பிட்டுவிட்டு செல்லும்போது ஆலத்துரை சேர்ந்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- மங்களூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆலத்தூர் வீரனார் கோவிலில் கடந்த ஜூலை மாதம் கிடாவெட்டி மனை போடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது அவர்களுக்கும் ஆலத்துரை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது மங்களூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆலத்தூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). மணிகண்டன் (22), தேவேந்திரன் (32), கருப்பையன் (19), ராஜதுரை (27), சுரேஷ் (21), சத்தியராஜ் (28), வீரக்குமார் (25), செல்வா என்ற செல்வராஜ் (27), பாரதி (19) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்கள் 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் 10 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
- சுதர்சனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வல்லம்:
தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவானன் என்பவரின் மகள் சுடர்மணி (29) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அனைவரும் தஞ்சை வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுதர்சன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுதர்சனுக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு குடித்து விட்டு வந்த சுதர்சனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதனை பார்த்த சுதர்சன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுடர்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுடர்மணியின் தந்தை நீலவானன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று சுடர்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- குரும்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தில் கறி விருந்து சாப்பிடுவதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சேதப்படுத்திய குருகாட்டூரை சார்ந்த பணிமயராஜ், வெங்கடேசன் மற்றும் முக்காணி சேர்ந்த அரிபுத்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
குரும்பூர்:
குரும்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தில் கறி விருந்து சாப்பிடுவதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தகராறில் ஈடுபட்ட ஒரு சிலர் சுப்ரமணியபுரம் மாணிக்கம் மனைவி ராமலட்சுமி (வயது 75) என்பவரின் வீட்டிற்கு சென்று, உனது பேரனை வெளியே அனுப்பி வை என கூறி அவரின் வீட்டை சேதப்படுத்தி உள்ளனர்.
தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சேதப்படுத்திய குருகாட்டூரை சார்ந்த பணிமயராஜ், வெங்கடேசன் மற்றும் முக்காணி சேர்ந்த அரிபுத்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
- மந்தை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- அப்போது திடீரென அங்கிருந்த அசோக்குமார் (25) என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவில் உள்ள மந்தை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சம்பவத்தன்று, சாமி ஊர்வலத்தின்போது வாலிபர்கள் நடனமாடிக் கொண்டு சென்றனர்.
அப்போது நாராயண–நகரை சேர்ந்த கிஷோர்குமார் (வயது 19) என்பவரும் நடனமாடினார். இதற்கு அங்கிருந்த வாலிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை அடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர்குமார், அவரது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றார்.
அப்போது திடீரென அங்கிருந்த அசோக்குமார் (25) என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த அசோக்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி கிேஷார்குமார், மணிகண்டன், வினோத்குமார் ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். அதேபோல் கிேஷார்குமார் கொடுத்த புகாரின்பேரில் அசோக்குமார் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிேஷார்குமார் மீது கோவில் காமிரா உடைத்த வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்