search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raft"

    • தெப்ப திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி நடைபெற உள்ளது.
    • குழாய் வழியாக நேத்திர புஷ்கரணி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக நேத்திர புஷ்கரணி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் யாரும் குளத்தில் இறங்காமல் இருக்க கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் உலா வந்தார்.
    • 12-ம் திருவிழா விடையாற்றி உற்சவம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

    பேராவூரணி:

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடனும் இரவு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.

    வண்ண மயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது.

    11- ம்நாள் திருவிழா காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் உலா வந்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று 12 -ம் திருவிழா விடையாற்றி உற்சவம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோயில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
    • தெப்ப உற்சவம் நாளை 16-ந் தேதி இரவு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தை யொட்டி 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

    தொடர்ந்து தெப்பம் அலங்கரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தெப்ப உற்சவமானது நாளை (மார்ச்.16) இரவு 7 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனையொட்டி நடை பெற்ற வெள்ளோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட தெப்பத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் தெப்பத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்தில் 3 முறை வலம் வந்து முருகப்பெருமான்-தெய்வானை அருள்பாலித்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி-அம்பாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதல் மற்றும் வைர தேரோட்டம் நடைபெற்றது.


    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான்.

     


    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் சன்னதி யில் சுப்பிர மணியசுவாமி, தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி னார். பின்னர் சன்னதி தெரு வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் எழுந்தருளினர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத் தேரில்(மிதவை)தெய்வானை யுடன், சுப்பிரமணியசுவாமி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியளவில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இன்று இரவு மின் ஒளியில் தெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    அப்போது வான வேடி க்கைகளும் இசை கச்சேரி களும் நடை பெறும். பின்னர் மேளதாளங்கள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வருவார். அப்போது சன்னதி தெருவில் உள்ள சொக்க நாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    ×