search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raiders"

    • ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள்.
    • கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் குண்டர்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலால் சமீபகாலமாக அதிக குற்றங்கள் நடந்தன. ஏராளமான ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

    அடாவடியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் போலீசார் நேற்று குற்றவாளிகளை கைது நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

    இதில் போதைப்பொருள் வியாபாரிகள், குண்டர்கள், பழைய குற்றவாளிகள், வாரண்டு பிறப்பிக்கப்பட்ட வர்கள் என நேற்று ஒரே நாளில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்க ளில் பலரது வீடுகளில் போலீசார் சோதனையும் நடத்தினர். இதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

    300 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்ற னர். அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தலைமறைவு குற்ற வாளிகள், போதை பொருள் விற்பனை கும்பல், ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். கடந்த ஆண்டு இதே போன்று நடத்தப்பட்ட போலீஸ் ஆபரேசனில் 2ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள 54 ரவுடிகளை கைது செய்தனர்.
    • குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ் செல்வன் தலைமையில் ரவுடிகளை கைது செய்யும் பணி தொடங்கியது.

    இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தற்போது வரை 54 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

    அவர்களில் குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    11 பேர் மீது நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த அதிரடி நடவ டிக்கை தீபாவளி வரை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு
    • தி.மு.க. நபர்களின் நட்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை துளைத்து விட்டு குற்றப்பின்னணி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா ளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி இன்று வில்லியனூர் வசந்த நகரில் நடைபெற்றது.

    மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செய லாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார்.

    மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் பிரதீப்குமார், பொதுக் குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில ஜெ. பேரவை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலக் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியிலும் கிளை வாரியாக அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.

    மேலும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இளைஞர் மற்றும் இளம் பெண்களை அ.தி.மு.க.வில் அதிக அளவில் சேர்த்து வருகிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் ஆன்மீக கோவில் நகரம் வில்லிய னூர் என மக்கள் அழைப்பார்கள்.

    இந்த தொகுதியில் பல்வேறு கட்சியின் சார்பில் தேர்ந்தெ டுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஆன்மீக வாதிகளாக இருந்து தொகுதியின் அமைதிக்கு துணையாக செயல்பட்டார்கள்.

    நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் உருளை யன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றிபெற்ற தி.மு.க.

    எம்.எல்.ஏ. சிவா மக்கள் விரோத செயலால் தான் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என பயந்து சிறுபான்மை வாக்கு களை குறி வைத்து இந்த தொகுதி யில் நின்று வெற்றி பெற்றார்.

    அவர் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே உருளை யன்பேட்டை தொகுதியில் என்னென்ன சட்ட விரோத செயல்கள் நடை பெற்றதோ அவை அனைத்தையும் தற்போது இந்த தொகுதியில் தங்கு தடையின்றி நடை பெற்று வருகிறது.

    கோவில் நகரமான இந்த தொகுதி முழுக்க முழுக்க குற்றவாளிகளின் கூடார மாக மாற்றப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு தி.மு.க. பிரமுகர்களுக்கு விஷ சாராயம் இங்குள்ள திமுக பிரமுகரால் கடத்தப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். போலி மதுபானம் உற்பத்தி, போலி மதுபான கடத்தல், நடமாடும் வேன்கள் மூலம் போலி மதுபானம் உற்பத்தி செய்தல் தினசரி தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்திற்கு கஞ்சா, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கேந்திரமாக இப்பகுதி மாற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. நபர்களின் நட்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை துளைத்து விட்டு குற்றப்பின்னணி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்த தொகுதியை சுற்றிலும் தடை யில்லாமல் அரசியல் பின்புலம் உள்ள வர்களால் மணல் கடத்தல் நடத்தப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவில் இங்குள்ள காவல்துறையினரின் செயல்பாடு உள்ளது.

    இவ்வாறு பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, முன்னாள் மாநில மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.

    கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.

    புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.

    விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.

    சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.

    இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 

    • மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தம் மீது பல்வேறு கொலை வழக்குகள் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது.
    • வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் கோப்புகளை தயாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கடந்த மார்ச் 26-ம் தேதி வெடிகுண்டு வீசியும் அறிவாளர்கள் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தனியார் பேக்கரி கடையில் நின்றிருந்த அவரை பிரபல ரவுடி நித்தியானந்தம் தலைமையிலான கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவத்தை வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கோர்ட்டில் சரண்யடைந்த நித்தியானந்தம் கொம்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த சங்கர் என்கிற சிவசங்கர், கோர்க்காடு ஏரிக்கரை வீதி கார்த்தி என்கிற கார்த்திகேயன் (வயது 23), அரியாங்குப்பம் தீர்த்தக்குளம் வீதி மாஞ்சாலை சேது என்கிற விக்னேஷ் (வயது 26), கடலூர் கிளிஞ்சிகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரதாப் (வயது 24), கோர்க்காடு அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜா (வயது 23), தனத்துமேடு காமராஜர் வீதியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 25) மற்றும் ஏழு பேர் இன மொத்த 14 பேர் இந்த வழக்கில் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது செந்தில்குமரன் கொலை வழக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகளால் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்தில்குமரன் கொலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தம் மீது பல்வேறு கொலை வழக்குகள் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது.

    இதேபோல் சிறையில் உள்ள நித்தியானந்தத்தின் கூட்டாளிகள் பலர் மீதும் கொடிய குற்றங்கள் புரிந்ததற்கான காவல்துறை பதிவுகள் உள்ளது. இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் கோப்புகளை தயாரித்து வருகின்றனர்.

    • வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.

    • பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் முருகன் கோவில் தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ், கார்த்தி, சக்திவேல் உள்பட 4 பேர் பட்டாக்கத்தியை காட்டி அந்த வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசினர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் வந்த வாலிபரை கும்பல் மறித்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பொது இடத்தில் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். 4 பேரும் ஆயுதங்களை வைத்திருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை தட்டி கேட்க வில்லை.

    பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 4 ரவுடிகளை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • கொள்ளையடிக்க பதுங்கியிருந்தபோது அவர்கள் பிடிபட்டனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில மாதங்களாக நகை, பணம் பறிப்பு, கொள்ளை, கொலை போன்றவை அதிக அளவில் நடந்து வருகிறது. குற்றங்களில் பெரும்பாலும் சிறுவர்கள் ஈடுபடுவது கவலைக்குரியதாக உள்ளது.

    மதுைர நகரில் குற்றங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டு ள்ளார். இதையடுத்து சமூக விரோதசெயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், முகமது இத்ரீஸ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படைபோலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் ேராந்து சுற்றி வந்த னர். எல்லீஸ் நகர் மேம்பால கீழ்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுங்கி இருந்த 10 பேர் திடீரென போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து உஷாரான போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். அவர்களை பரிசோதித்தபோது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்வைத்திருப்பது தெரியவந்தது.

    5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள், மேலவாசல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ராஜா மகன் ஜெயராஜ் பாலா (வயது 23), திடீர் நகர் சந்தனவேல் மகன் மண்ட மகேந்திரன் (18), ஹீரா நகர் சுந்தரம் மகன் பேய் மணிகண்டன் (19), சுப்ரமணியன் மகன் பெருமாள் (19), மேலவாசல் பேச்சிமுத்து (39) என்பது தெரிய வந்தது. இவர்கள் எல்லீஸ் நகர், அரசரடி, மகபூப்பாளையம், பை-பாஸ் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் பேலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய மேலும் 5 பேரை ஆரப்பாளையம் வைைக தென்கரை பகுதியில் தனிப்படை போலீசார் சுற்ற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர்கள் திடீர் நகர் தக்காளி பாபு (42), வண்டியூர், பாண்டியன் நகர், திலகர் தெரு முருகன் மகன் அஞ்சான் சிவா (20), திடீர் நகர் காளிதாஸ் என்ற பல்லு காளி (28), மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ஜோ திருமலை (25), ஹீரா நகர் சக்தி மகன் ஊமையன் செல்வராஜ் (19). என்பது தெரியவந்தது. இவர்களும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களை சேர்த்து ெமாத்தம் 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×