search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Fort"

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி.
    • அடுத்த முறை நாமே கொடி ஏற்றுவோம் என லாலு பிரசாத் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், இந்த சுதந்திர தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கை மறக்க முடியாது என்றார்.

    அவரிடம், அடுத்த சுதந்திர தினம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வரும் என்பதால் அடுத்த ஆண்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவாரா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு லாலு பிரசாத், இல்லை... பிரதமர் மோடி இந்த தடவை கடைசி முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார். அடுத்த முறை நாங்கள்தான் (எதிர்க்கட்சிகள்) அங்கு கொடி ஏற்றுவோம் என தெரிவித்தார்.

    • செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது
    • பாதுகாப்பில் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள், டெல்லி போலீசார்

    நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில் முப்படை அணிவகுப்பை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்க விடப்படும். விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் டெல்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    சுதந்திர தினத்தன்று டெல்லி விமான நிலையத்தில் திட்டமிடப்படாத விமானங்கள் புறப்படுவதற்கும் தரை இறங்குவதற்கும் சில மணி நேரம் தடைவிதிக்கப்படும். எனினும் வழக்கமாக செல்லும் விமானங்கள் புறப்பட எந்த பாதிப்பும் இருக்காது.

    இந்திய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் ராணுவ விமானப் படையின் ஹெலிகாப்டர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இது தவிர, கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகள் பயணம் செய்யும் மாநில ஹெலிகாப்டர்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெல்லியில் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் பாராகிளைடிங் தடை செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    செங்கோட்டையின் வாயில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தற்காலிக கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பகின்றன. செங்கோட்டைப் பகுதியைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தொலைநோக்கியுடன் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனிடையே பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறுநாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாடு சுதந்திர தின முக்கிய கருப்பொருளாக உள்ளது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவம் மற்றும் போலீசார் முக்கிய இடங்களில் ரோந்து சென்று வருகிறார்கள். ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

    டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க எல்லையில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிரதமருக்கான இடத்தில் அதிகாரி ஒருவர் நின்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். முப்படை வீரர்கள் மிடுக்குடன் அணி வகுத்துச் சென்றனர். இதையொட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.  

    • கன்னாவின் பாட்டனார் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்
    • பல்வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்களை இந்த குழு சந்திக்கிறது

    இம்மாதம் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றுவார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த ஒரு குழு வருகிறது.

    இந்திய மற்றும் இந்திய அமெரிக்கர்களின் நலனுக்கான அமெரிக்கா பாராளுமன்ற அமைப்பின் தலைவர்களான அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் ஆகிய இருவர் இக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

    இவர்களுடன் டெபோரா ராஸ், கேட் கம்மாக், ஸ்ரீ தானேதார், ரிச் மெக்கார்மிக், எட் கேஸ் மற்றும் ஜாஸ்மின் க்ராக்கெட் ஆகியோர் இணைந்து வருகின்றனர்.

    இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் வர்த்தக, தொழில்நுட்ப, அரசாங்க, மற்றும் திரைத்துறை பிரமுகர்களை மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் சந்திக்க இருக்கிறார்கள். மேலும், புது டெல்லியில் உள்ள ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கும் செல்கிறார்கள்.

    "இப்பயணத்தில் இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் பல பிரமுகர்களை சந்திக்க இருக்கிறோம். இந்தியாவிற்கு இந்த குழுவினருடன் வருவதும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் ஒரு பெருமைக்குரிய செயல். என் பாட்டனார் அமர்நாத் வித்யாலங்கர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பயணம். இந்திய-அமெரிக்க உறவில் இது ஒரு மைல்கல்" என இந்த வருகை குறித்து ரோ கன்னா கருத்து தெரிவித்தார்.

    இந்தியாவின் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால் இரு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்து உள்ளார். #PMModi #AzadHindFauj
    புதுடெல்லி:

    சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943-ம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக நிறுவிய ஆசாத் ஹிந்த் அரசின் 75-ம் ஆண்டு விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்தது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தினர் பயன்படுத்திய தொப்பி அணிவிக்கப்பட்டது.

    விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், பெயரை குறிப்பிடாமல் பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.



    அவர் பேசுகையில், எந்த நாட்டின் மண்ணையும் அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது என்றும், ஆனால் நமது இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால், அவர்களுக்கு இரு மடங்கு பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு ஆதரவாக நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் யாராவது செயல்பட்டாலோ, நமது அரசியலமைப்பை சீர்குலைக்க முயன்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் உறுதியுடன் கூறினார்.

    மோடி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் கொள்கைகள் வெள்ளையர்களின் நடைமுறைகளையே பின்பற்றியது. அதன் விளைவாக கல்வித்துறை மிகவும் பாதிக்கப்பட்டது.

    வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல்களின்படி நடந்து கொண்டிருந்தால் நாடு இன்னும் நல்ல நிலைமைக்கு சென்றிருக்கும். அதனால்தான் எனது அரசு கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    சுதந்திரத்துக்கு பிறகு, ஒரு குடும்பத்தின் பங்களிப்பு பற்றி மட்டுமே பேசப்பட்டது. சுதந்திரத்துக்காக போராடிய பட்டேல், அம்பேத்கர், நேதாஜி போன்ற தலைவர்களின் தியாகங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டன. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளும் மறைக்கப்பட்டன.

    வெள்ளையர்கள் உரிய அங்கீகாரம் அளிக்காததால் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நேதாஜி மிகவும் முக்கியத்துவம் அளித்தார். இப்போது எனது அரசும் வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின்போது சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ந்தேதி இந்த விருது வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நேதாஜியுடன் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய லலித் ராம் உள்ளிட்ட தியாகிகள் சிலரை மோடி கவுரவித்தார்.

    டெல்லி சாணக்கியபுரியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் நினைவுத் தூண் மற்றும் போலீஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் போலீஸ் நினைவு தின நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

    அப்போது மோடி பேசியதாவது:-

    இந்த நினைவிடம் போலீசாரின் வீரம், பலம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நாட்டுக்காக போலீசார் செய்த தியாகங்கள் மறக்க முடியாதவை. அவர்களுக்கு எனது வீரவணக்கம்.

    தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நாட்டுக்கு ஆற்றி வரும் சேவை மிகவும் போற்றத்தக்கது.

    காஷ்மீரில், சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் படை வீரர்களின் பணிகளும் நினைவில் கொள்ளவேண்டிய தினம் இதுவாகும். அதுமட்டுமல்ல நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் படை வீரர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது. அவர்களால்தான் தற்போது நாட்டில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இளைஞர்களும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர்.

    உங்களின் விழிப்பான செயல்பாடுகளால் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் தோல்வி காண்கின்றனர். நாடு அமைதியாக இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள்தான்(படை வீரர்கள்) காரணம்.

    முந்தைய அரசு இந்த நினைவிடத்தை அமைக்க அனுமதிக்கவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அத்வானியால் இந்த நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போலீஸ் நினைவிடம் கட்டும் பணிகளை நிறுத்தி விட்டது. முந்தைய அரசு (காங்கிரஸ்) நமது பாதுகாப்பு படைகளின் வீரத்தையும், தியாகத்தையும் மதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் போலீஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
    டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகளை சிறப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #MilitantsArrest
    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவினர் இன்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினர்.

    அவர்கள் நாசவேலையில் ஈடுபட்டனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்தாகவும், ஐ.எஸ்.ஜே.கே என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

    டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #MilitantsArrest
    ×