search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduced"

    • கடை வாடகையை 50 மடங்கு அதிகப்படுத்தி வருவாய்த்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • இதுகுறித்து சின்ன மணிகூண்டு வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சின்னமணி கூண்டு வியாபாரிகளுக்கு கடை வாடகையை 50 மடங்கு அதிகப்படுத்தி வருவாய்த்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து சின்ன மணிகூண்டு வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. வியாபாரிகளை அழைத்து சென்று வருவாய்த்துறை அதிகாரி பிரபாகரனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் ஏற்கனவே சின்னமணிகூண்டு வியாபாரிகள் வியாபா ரமின்றி கஷ்டநிலையில் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடை வாடகையை 50 மடங்கு உயர்த்தி உள்ள தால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை முற்றிலும் தவிர்த்து பழைய கட்டணத்தையே வசூலிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • இக்கட்டான நிலையில் தொழில் நடத்த முடியாமலும், அண்டை மாநிலங்களுடன் தொழிலில் போட்டி போட முடியாத சூழலும் உருவாகி உள்ளது.

    மங்கலம்:

    மின்சாரத்துக்கான டிமாண்ட் கட்டணம் 3 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று விசைத்தறி தொழில் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து விசைத்தறிகள் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஞ்சு விலை கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் அதிகரித்து வரும் மின் கட்டணத்தால் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மின்கட்டண உயா்வை தொடா்ந்து டிமாண்ட் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறைந்த அழுத்த மின் மாற்றிக்கான கட்டணம் ரூ.35லிருந்து, 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.184 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல உயா் அழுத்த மின்மாற்றிக்கான டிமாண்ட் கட்டணம் ரூ.550ல் இருந்து ரூ.562 ஆக அதிகரித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், இந்த டிமாண்ட் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இதனால் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் டிமாண்ட் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

    இந்த இக்கட்டான நிலையில் தொழில் நடத்த முடியாமலும், அண்டை மாநிலங்களுடன் தொழிலில் போட்டி போட முடியாத சூழலும் உருவாகி உள்ளது. எனவே டிமாண்ட் கட்டணத்தை பழையபடி குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது
    • நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதியானது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    சமீப காலத்தில் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

    மாநகர பகுதியில் 16 பேர், வள்ளியூரில் 14 பேர், அம்பையில் 12 பேர், பாளையில் 10 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் புதிதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.
    சென்னை:

    கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதும் வறண்டு விட்டன. பூண்டி, புழல் ஏரிகளில் உள்ள தண்ணீரும் இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இதனால் சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.

    தற்போது பைப்புகளில் வினியோகிக்கப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். போர்வெல்களில் நீரும் இல்லாததால் லாரி, டிராக்டரில் சப்ளை செய்யப்படும் தண்ணீரையே எதிர்பார்த்து காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட வட சென்னை பகுதியில் பைப்புகளில் தண்ணீர் வருவது நின்று விட்டது.

    கொளத்தூர் பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. பெருங்குடி பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் சப்ளையாகிறது. அம்பத்தூரில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் ½ மணி நேரமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    கொட்டிவாக்கத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் 2 மணி நேரம், கோடம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது.

    ராயபுரம், திருவொற்றியூர் பகுதியில் டேங்கர் லாரிகளில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். நங்கநல்லூரில் வாரத்துக்கு ஒருமுறை ¾ மணி நேரம் மட்டும் தண்ணீர் சப்ளையாகிறது.

    முறையாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதி வாரியாக 800 லாரிகள் மூலம் 8 ஆயிரத்து 400 முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ரெட்டேரி ஏரியில் இருந்து அடுத்த மாதம் முதல் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    மேலும் பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரி தண்ணீரையும் குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பி உள்ளனர்.

    நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காகவும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்து வதற்காகவும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. முதல்போக சாகுபடி முடிவடைந்து 2-ம் போக சாகுபடியில் ஈடுபட்டுள்ள பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து இன்று காலை முதல் பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று வரை 467 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 48 கன அடி. இருப்பு 2312 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.03 அடி. வரத்து 87 கன அடி. திறப்பு 860 கன அடி. இருப்பு 2724 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.20 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 95.77 அடி.

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1029 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1005 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 98.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 97.53 அடியாக இருந்தது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் சுமார் 1 அடி குறைந்துள்ளது.

    இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 696 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 337 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று காலை 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாலையில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கால்வாய் பாசனத்திற்கு நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 103.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 103.74 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam


    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    நீர்மட்டம் சரிந்து வருவதால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கடந்த 4 ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த ஆண்டு பருவமழை மற்றும் கஜா புயலின் தாக்கத்தினால் பலத்த மழை பெய்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 69 அடியை எட்டியது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்ட விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 69 அடியில் இருந்து சரியத் தொடங்கிய நீர்மட்டம் தற்போது 58.86 அடியாக உள்ளது. அணைக்கு 982 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 560 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் அது 460 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.50 அடியாக உள்ளது. 531 கன அடிநீர் வருகிறது. 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 54 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.6, வீரபாண்டி 4, வைகை அணை 2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    நீர்மட்டம் குறைந்து வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குறிப்பிடப்படும் படியான மழை பெய்யவில்லை.

    மேலும் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முழு கொள்ளளவை எட்டியிருந்த வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக 64 அடியாக குறைந்தது.

    மேலும் புயல் காரணமாக கடந்த சில நாட்களில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.

    நேற்று 4520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2170 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு 1452 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 64.11 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4434 மி. கன அடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடி. வரத்து 1720 கன அடி. திறப்பு 450 கன அடி. இருப்பு 4504 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 223 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.50 அடி. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 109 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. #VaigaiDam

    தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பினாலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம், சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை தொடர்ந்து இருக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் நோக்கி அவர்கள் பேரணியாக சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.

    அப்போது நடந்த‌ துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வந்தபோதே தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். 22-ந் தேதி போராட்டம் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பே கூடுதலான போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலியாக ஏற்பட்ட பதட்ட நிலையினால் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்ட பகுதிகள் முழுவதும் 41 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.

    இந்தநிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியுள்ளது.

    இதையடுத்து தாளமுத்து நகர் பகுதியில் தங்கியிருந்த திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போதைய சூழலில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 கம்பெனிகள் போலீசார் மட்டுமே பாதுகாப்பில் உள்ளார்கள். அவர்களும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். மேலும் தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டிருந்த 6 வஜ்ரா வாகனங்கள், 4 வருண் வாகனங்கள் உள்ளிட்ட 70 போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களும் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே முழு அமைதி திரும்பினாலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருவதாலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாலும் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இருக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் நேற்று தூத்துக்குடியில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி பகுதியில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று 14 காசு குறைந்து ரூ.80.80க்கு விலை குறைக்கப்பட்டது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.94 ஆகும். நேற்று 14 காசு குறைந்து இது ரூ.80.80 ஆனது.

    இதே போன்று நேற்று முன்தினம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 72.82-க்கு விற்பனையானது. நேற்று இது 10 காசு சரிந்து ரூ.72.72 ஆனது.

    நேற்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது. 
    ×