என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refund"

    • ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவர் தீர்ப்பு.
    • டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு.

    டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் கடந்த 2012ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் கண்டறிந்த சில கட்டமைப்பு குறைபாடுகளை அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் (DAMEPL)நிறுவனம் சரிசெய்யவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை நிறுத்தியது.

    பின்னர், 2017ம் ஆண்டில், ஒரு நடுவர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான அந்நிறுவனத்தின் முடிவு செல்லுபடியாகும் என்று கூறி தீர்ப்பளித்தது.

    டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை உருவாக்குவதற்கும், இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் (DAMEPL) நிறுவனம், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுக்கு 15 நாட்களுக்குள் சுமார் ரூ.2,599 கோடியை திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, 15 நாட்களுக்குள் தொகையை டெபாசிட் செய்யத் தவறினால், டிஎம்ஆர்சி டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய நிர்பந்திக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.

    அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13-வது ஓவரை ஆகாஷ்தீப் வீசியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 ரன்னும், மெக்ஸ்வீனி 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் , முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. 15 ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. பாதியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படா விட்டால் டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும். இதன்படி 30,145 ரசிகர் களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.5.4 கோடியை திரும்ப வழங்க உள்ளது. 10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை விழுந்தது.
    • ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.

    மதுரை

    மதுரை சம்மட்டிபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரிடம் ஒத்தக்கடை, அரசரடி ஜெயச்சந்திரன் (35) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினார். இதனை அவர் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே செல்வம் அவரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அவரிடம் செல்வம் பணத்தை திருப்பி கேட்டார். ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன், அருண் மற்றும் ரஞ்சித் ஆகிேயார் செல்வத்தை அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தாக்கிய ஜெயச்சந்திரன், அருண், ரஞ்சித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×