என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "relief works"
- கேரளா மாநிலத்தில் நலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள கோவை, மார்ட்டின் நிறுவனம், இந்த சவாலான நேரத்தில் அம்மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம், அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.
ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மகத்தான வெற்றி பெறுவோம். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துகளை உதாசீனப்படுத்த முடியாது. அவர் கூறியிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடையவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மை வெளிவரும்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரித்தபோது ஜெயின் கமிஷனும் விசாரித்தது. அதேபோல தமிழக அரசும் விசாரணை குழு அமைத்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும். இவர்களை அழைத்து வந்து வாக்குமூலங்களை மட்டும் வாங்குவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையும் வெளி வராது. அதனால் அவர்களுக்கு நல்ல ‘டிரீட்மெண்ட்’ கொடுக்கவேண்டும்.
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவது என்று சொன்னால் ஒரே குடும்பம் சசிகலாவும் தினகரனும்தான். அவர்களால் மட்டுமே ஜெயலலிதாவிற்கு இழுக்கு ஏற்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடம் ரூ.15,600 கோடி கேட்டதற்கு 1,146 கோடி கொடுத்துள்ளனர். இது யானை பசிக்கு சோளப்பொரி போல. கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே, தவிர யானை பசியை போக்குவதாக இல்லை. நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.
தற்போது ஒதுக்கிய தொகையை உடனடி தேவைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். தவிர நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுப்பதற்கு அழுத்தம் தரவேண்டும். கண்டிப்பாக கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #GajaStorm
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சூறையாடி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.
63 பேரை பலி வாங்கிய அந்த புயல் லட்சக்கணக்கான வீடுகள், மரங்கள், தொலைத்தொடர்பு இணைப்புகள், மின்சார இணைப்புகளை சீர்குலைத்து போட்டு விட்டது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.
புயல் நிவாரண மற்றும் சீரமைப்புக்கு ரூ.1000 கோடியை ஒதுக்கியுள்ள தமிழக அரசு குடிநீர், உணவு சப்ளை, மின் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை செய்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் டெல்டா மாவட்டங்களில் முற்றுகையிட்டு உதவி செய்து வருகிறார்கள். டெல்டா மாவட்டத்தை மீட்டெடுக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார்.
இதையடுத்து கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு வந்துள்ளது. ஆனால் மத்திய அரசு நிதி தருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் மாநில அரசும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கி உள்ளது. இதில் இருந்து அவர்கள் மீள இன்னும் பல நாட்களாகும் என்ற அவல நிலை உருவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை- திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உருகுலைந்து போய் விட்டது. அங்கு வசித்த மான்கள், குரங்குள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறு காட்டுத்துறை, வெள்ளப் பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ- மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.
டெல் மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமோ? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்றும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், கந்தர்வக்கோட்டை, ஆதன கோட்டை, சோளகம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை வரை இடைவிடாமல் மழை பெய்தது. இன்று காலை லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மின் கம்பங்கள் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் பலர் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை கொண்டு வருகின்றனர். ஆனால் மழை பெய்வதால் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு சமைத்து கொடுப்பதற்காக வந்தவர்கள் தங்குவதற்கு இடமில்லாத சிரமமும் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
மழை காரணமாக சீரமைப்பு, நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் குடிநீர் விநியோகிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகள் கஜா புயலால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தன. அங்கு 80 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிவுற்றுள்ளது. மீதி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி, தர்மபுரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #DeltaDistricts #HeavyRain
கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கஜா புயல் வருவதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறப்பாக இயங்கிய தமிழக அரசு, புயலுக்கு பின் நடக்கின்ற நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளோடு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு எந்திரத்தில் போர்க்கால நடவடிக்கைகள் இப்போதைய அவசியம். விழிப்புணர்வு ஏற்படுத்தியதை எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சிகளும் பாராட்ட தான் செய்தார்கள்.
தமிழக அரசிடமிருந்து எவ்வளவு முதற்கட்ட உடனடி இழப்பீடு வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்காததே அரசு செயல்பாடுகளின் சுணக்கத்தை எடுத்துரைக்கிறது. பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்க வேண்டும்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை என்றால் விஷக் காயச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகம், கஜா புயலால் அழிவை சந்தித்திருக்கின்ற பகுதிகள் எதிர்பாராத அளவிற்கு உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
தென்னை, மக்கா சோளம், கண்வலி விதை போன்ற அனைத்து விவசாய பயிர்களும் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரைமட்டமாயிருக்கிறது. அதை பற்றி தமிழக அரசிடமிருந்து எந்த இழப்பீடு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் விவசாயிகளின் வேதனையின் அளவு அதிகரித்திருக்கிறது.
அனைத்து கட்சி தலைவர்களும் முதல் நாளில் பாராட்டியதை கேட்டு தமிழக அரசு கொஞ்சம் அசந்துவிட்டதோ... என்ற சந்தேகம் எழுகிறது. விழித்தெழுங்கள் கடமையை செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும், சேதத்தை பார்வையிட்டு தே.மு.தி.க. சார்பில் உதவிகள் செய்யவும் இன்று காலை தே.மு.தி.க.பொருளாளர் பிரேமலதா அங்கு சென்றார்.
முன்னதாக திருச்சிக்கு விமானத்தில் வந்த அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். போக்குவரத்து இல்லை. மின்சாரம் 4-வது நாளாக இல்லை. மக்களுக்கு குடிக்க தண்ணீருக்கு கூட வழியில்லை.
பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் புயலில் சிக்கி அழிந்து விட்டன. மக்கள் தத்தளிக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செய்வது சரியல்ல. நிவாரணப்பணிகளில் அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு செயல்பட்டதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார். ஆனால் புயலுக்கு பிறகான நிவாரண நடவடிக்கையில் அரசு மெத்தனமாக உள்ளது. நாங்கள் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தே.மு.தி.க. சார்பில் உதவிகள் செய்கிறோம். இன்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட பிறகுதான் புயல் நிவாரணப்பணிகள் குறித்து தேவைகள் குறித்து கருத்து கூற முடியும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார். #DMDK #Vijayakanth #GajaCyclone #TNGovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்