search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Repairs"

    • நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.
    • சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது.

    இந்த மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்க நல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரை யிலான ரெயில்வே தண்ட வாளம் பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர், தாதன் குளம் மற்றும் ஆழ்வார்திரு நகரி பகுதிகளில் இரவு பகலாக ரெயில்வே தண்ட வாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் நாளை (31-ந்தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 5-ந்தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
    • பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    திருத்தணி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன.
    • 10 மணி நேர போராட்டத் துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

    ஈக்வடார்:

    ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப் கார்கள் செல்கின்றன. இந்த நிலையில் ரோப் கார்களில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டதால் நடுவழியில் சிக்கி கொண்டனர்.

    மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன. கோளாறை சரி செய்து ரோப் கார்களை உடனடியாக இயக்க முடியவில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். கயிறுகள் மூலம் ரோப் கார்களில் தவித்தவர்கள் பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டனர். 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குயிட்டோ நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

    • திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
    • 11 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை அடுத்து திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    இதனிடையே கோவிலில் உள்ள பரிவார மூர்த்தி தெய்வ சன்னதிக ளுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

    ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காழிபுரீஸ்வரர், காழி கணநாதர், மண்டப குமாரர், 63 நாயன்மார்கள், நவக்கிரக சன்னதி, திருஞானசம்பந்தர் ஆர்ச் உள்ளிட்ட சுமார் 11 பரிவார மூர்த்தி சன்னதிக ளுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் சங்க தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி.நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருமுல்லைவாசல் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல்- புனரமைத்தல் பணிகளுக்கு அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.

    அதில் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும் மற்றும் 20 வருடங்களுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்ப ங்களை, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழவின் மூலம் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களில் உரிய ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரைக்கப் படும். அதன் பின்னர், நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
    • திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    சீர்காழி,:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய க்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சரவணன் மன்ற தீர்மான ங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: கவுன்சிலர் ரிமா பேசுகையில் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில்17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றார்.

    கவுன்சிலர் விஜயகுமார் பேசுகையில் திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் தென்னரசு பேசுகையில் எடக்குடி வட பாதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க முயற்சி எடுத்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில் தமிழக முதல்-அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    முடிவில் மேலாளர் சுலோசனா நன்றி கூறினார்.

    • செய்யாமங்கலம் பள்ளி கட்டிடம் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வருவதால் இன்னும் இடித்து அகற்றப்படவில்லை.
    • மழை காலம் தொடங்குவதற்குள் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் தாலுக்கா செய்யாமங்கலம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

    இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    பள்ளியின் பழைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் எந்த நேரத்தில் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு பருவ மழை காலத்தில் அரசு அறிவுறுத்தலின் பேரில் பூதலூர் தாலுகாவில் பழுதான பல்வேறு பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் செய்யாமங்கலம் பள்ளி கட்டிடம் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வருவதால் இன்னும் இடித்து அகற்றப்படவில்லை.

    பழுதான பள்ளி கட்டடத்தின் அருகில் வீடுகளும் ஆற்றுக்கு செல்லும் சாலையும் உள்ளதால் அந்த வழியாக ஆற்றுக்கு செல்பவர்களும் வீடுகளும் வீடுகளில் இருப்பவர்களும் எந்த நேரத்திலும் பயத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    வரும் பருவ மழை காலம் தொடங்குவதற்குள் பூதலூர்தாலுகாவில் உள்ள செய்யாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இது குறித்து பூதலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    • எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது.
    • பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அவை கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருள்களை கணக்கர் ராஜகணேஷ் வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    உறுப்பினர் ரம்யாதன்ராஜ் பேசுகையில், எனது வார்டில் கடந்த ஐந்து மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    கவுன்சிலர் வள்ளிமாரிமுத்து: மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் வேல்முருகன்: சீர்காழி தீயணைப்புநிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் சாலை அமைத்திடவேண்டும்.

    கவுன்சிலர் ராஜசேகர்: நகரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது என்றார். குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரூபவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.

    கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன்: எனது வார்டில் பள்ளி கட்டிடம் பழுதாய் உள்ளது. இதை போல் சத்துணவு கூடமும் பழுது அடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    கவுன்சிலர் சுவாமிநாதன்: பழைய பஸ் நிலையத்தில் கட்டணக் கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    கவுன்சிலர் ரமாமணி : முன்பு எரிவாயு தகணமேடை நடத்திவந்தவரிடம் பணியாற்றி தற்போது டென்டர் கோரூம் பாபு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்ததால் அவருக்கு டென்டர் விடவேண்டும்.

    நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் பொது நிதியின் மூலம் மின்விளக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வசதி விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஈசானிய தெருவில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கீழ் சேவை அமைப்பால் நடத்தப்பட்டு வரும் எரிவாயு தகணமேடை டென்டர் விடுவது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நகர்மன்ற தலைவர் மேஜையை சூழ்ந்துக் கொண்டு மேஜையை தட்டி ஆட்சேபனை செய்து விவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த காமராஜர் மக்கள் நலசேவை அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவித்தார். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. டென்டரை நேசக்கரங்கள் அமைப்பிற்கு தரவலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைசெல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் முழங்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

    ×