search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescued"

    • திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த சிறுவன் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார்.
    • சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 15). இவர் வத்தலகுண்டில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் -ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹரிஹரன் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறி தேனியில் இருந்து திருப்பூருக்கு சென்றார்.

    பின்னர் திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த அவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்து படிப்பை நிறுத்தினர்.
    • சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர்.

    கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சிறுமியை அவரது தாய், தனது தங்கை வீடான பொள்ளாச்சியில் கொண்டு வந்து விட்டார். 1 மாதத்திற்கும் மேலாக அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுமி மட்டும் இருந்தார். சிறுமியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தனர்.

    போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, தனது காதலனுடன் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுவனுடன் இருந்த சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
    • மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சக்கரை ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இரண்டு வயதுள்ள மான் ஒன்று தவறி விழுந்தது. 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு நிலைய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா மானை வாசுதேவநல்லூர் ரேஞ்சர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

    • பொதுமக்கள் தகவல் அளித்தின் பேரில் வனத்துறையினர் மீட்பு
    • சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகே மான் ஒன்று காயங்களுடன் துடித்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனை தொடர்ந்து வனக்காப்பாளர்முத்துராஜ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மர்ம விலங்கு கடித்து மானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மான் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவரால் அந்த ஆண் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துள்ளி குதித்து ஓடும் அளவிற்கு மானின் உடல் நிலை தேறிய பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

    • தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்
    • கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் குன்னம் ஆய்வாளர் சுசிலா, கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
    • மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஆடு தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சங்கரம்பாளையத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஆடு ஒன்று தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.

    இது குறித்து கரூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு படை வீரர் வந்தனர்.

    சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி நீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக்கொண்டிருந்த ஆட்டினை லாவகமாக மீட்டனர். பின்னர் ஆட்டின் உரிமையாளரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

    • ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.
    • மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கினார்.

    மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார். உடனே பக்கத்தில் இருக்கிறவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உடனே வந்து கிணற்றுக்குள் இறங்கி செல்வராஜ்யை கயிறுகட்டிஉயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    • மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார்.
    • திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு விளங்கி வருகிறது. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் இந்த சாலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் கந்தலான ஆடையோடு சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார். சாலையின் நடுவில் நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை.அப்போது அந்த வழியாக திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். சாலையின் நடுவில் திக்குதெரியாமல் போராடிய அந்த மூதாட்டியை பார்த்ததும் உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார். ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக தெரிவித்தார். குளிரால் நடுங்கிய அவருக்கு உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

    கந்தலான ஆடையுடன் இருப்பதை பார்த்து புதிய ஆடையை வாங்கி அணிய வைத்ததுடன், சால்வையால் உடலை போர்த்தி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன் இருந்துவிடாமல் உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியின் கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். 

    • காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டது
    • கோவிலுக்கு செல்லும் போது நேர்ந்த சம்பவம்

    கரூர்:

    திருப்பூர் மாவட்டம் கரும்பம்பாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகன்கள் வெங்கடாசலம் (வயது 22), அருணாசலம் (வயது 25). இவர்கள் தந்தையுடன் தாத்தாவிற்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்துடன் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் கிராமத்திற்கு வந்தனர். பிறகு மணப்பாறை வீராப்பூர் கோவிலுக்கு செல்வதற்காக அனைவரும் குடும்பத்துடன் சென்றனர். அப்போது குளித்தலை கடம்பனேஷ்வரர் கோவில் காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்துவிட்டு செல்லலாம் என்று அருணாசலம், வெங்கடாசலம் அவரது சித்தப்பா மகன் ஹரிஸ் (வயது 22) ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி 3 பேரையும் தேடினர். இதில் ஹரிஸ் நீச்சல் தெரிந்த காரணத்தால் உயிரிருடன் மீட்கப்பட்டார், வெங்கடாசலத்தினை சடலமாக மீட்டு, அருணாச்சலத்தை தேடி வந்தனர் இந் நிலையில் இன்று காலை கடம்பனேஸ்வர கோவில் காவிரி ஆற்று அருகிலேயே அருணாச்சலத்தின் உடல் ஒதுங்கி இருந்ததை பார்த்த தீயணைப்பு துறையினர் மீட்டனர். குளித்தலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல் சீற்றத்தால் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
    • காணாமல் போன ஒரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    கொச்சி:

    கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் கடந்த 28ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கடற்சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர்.

    இதனிடையே, அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கடலோர காவல்படையினருக்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.  

    அந்த மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மேலும் ஒரு மீனவரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

    • ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அங்கு பணியாற்றி வந்த 3 குடும்பங்களை சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 6 பேர் அவிநாசிக்கு தப்பி வந்தனர்.

    நாம் தமிழர்கட்சியினர், உணவு கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும்திருப்பூர் கலெக்டர் வினீத்தை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். அப்போது ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்,கொத்தடிமைகளாக நாங்கள் அங்கு இருந்தோம். வேலையில் சேர்ந்த போது கூறியபடி, தினக்கூலி வழங்கவில்லை.வீட்டை பூட்டி வெளியே நிறுத்தி கொடுமை செய்தனர். மேலும் 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.அவர்களையும் மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    ×