search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resigns"

    • சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
    • மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

    சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று மேற்குவங்க பாஜகவினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், "பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை விவகாரத்தை அடுத்து, அக்கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.

    4வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில்,"இறந்துபோன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

    • சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார்.

    கோவை,

    கோவையைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.

    இந்தநிலையில் அவர் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் பிப்ரவரி மாதம் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் என்னை பணி செய்ய விடாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டினார். இதனால் ஜனவரி 16-ந் தேதி 18 தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றேன்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு வந்தேன். இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக கட்டுப்பாட்டு அறை துணை சூப்பிரண்டும், எழுத்தரும் செயல்பட்டு என்னை பற்றி அவதூறாக பேசினர். இன்ஸ்பெக்டர் பற்றி 3 முறை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டேன். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மேலும் இன்ஸ்பெக்டர் என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.

    தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்குகிறார்கள். இதனால் நான் இந்த பணியில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு அரசால் வழங்கப்பட்ட சீருடை மற்றும் இதரபொருட்களை ஒப்படைத்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவர் ‘கர்நாடக சிங்கம்’ என்ற புனைப்பெயர் பெற்றவர் ஆவார்.
    பெங்களூரு:

    பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். அதன்பிறகு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார்.

    மேலும் பணிச்சுமையால் அவதிப்பட்ட போலீசாருக்கு கண்டிப்பாக வாரவிடுமுறை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தினார். இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதன் தொடர்ச்சியாக நேற்று ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் வழங்கினார்.

    ராஜினாமா செய்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானதை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கிய அவர் உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்தார்.

    சிக்கமகளூருவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பின்னர் அவர் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். உடுப்பி, சிக்கமகளூருவில் பணி செய்தபோது அவர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பெற்றார்.



    இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த அண்ணாமலை தனது ராஜினாமா பற்றி அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. எனது ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யும்படி முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். எனது முடிவை நான் மாற்றவில்லை. என்னை பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்து பணி வழங்கியது குமாரசாமி தான். அவர் கொடுத்த பணியை 8 மாதங்களாக செய்தேன். அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்தது. குமாரசாமி எளிமையாக நடந்து கொள்ளும் முதல்-மந்திரி. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், முன்னாள் போலீஸ் மந்திரிகளான பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர். அரசியல் அழுத்தம் காரணமாக நான் ராஜினாமா செய்யவில்லை. 9 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். பணி செய்த நிலையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த முடிவை கடந்த 6 மாதங்களாக யோசித்து எடுத்துள்ளேன். காக்கிச்சட்டை(போலீஸ் உடை) அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது. போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன். அத்துடன் உயர் அழுத்த பணியாகவும் இருக்கிறது. இதனால் ஏராளமான விழாக்களில் நான் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதை செய்துள்ளேன். என் செயல்பாடு யாரையும் பாதித்து இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

    அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறீர்கள் என கேள்விகள் எழுகின்றன. நான் சிறிது காலம் ஓய்வில் இருக்க விரும்புகிறேன். எனது மகனுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். அவனுடன் நேரத்தை செலவிட உள்ளேன். அதன்பிறகு அடுத்து செய்யும் செயல்பற்றி முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
    வியன்னா:

    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகினார். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபர் அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசில் மைய வலதுசாரி மக்கள் கட்சியின் செபாஸ்டியன் குர்ஸ் பிரதமராக உள்ளார். தீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் துணைப்பிரதமராக இருந்து வந்தார்.



    இந்த நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷிய முதலீட்டாளரிடம் பேரம் பேசி உள்ளார்.

    இது தொடர்பாக ரகசியமாக வீடியோ எடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகி விட்டார்.

    இருப்பினும் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் அலுவலகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்து, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இதே பரிந்துரையை அந்த நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் வான் டிர் பெல்லனிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் கூறுகையில், “முடிந்த வரையில் வெகு விரைவாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் அதிபரிடம் பரிந்துரை செய்து இருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இது போதும் என்று நேர்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதை வீடியோ காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதை அதிபர் அலெக்சாண்டரும் உறுதி செய்து கூறும்போது, “துணைப்பிரதமர் பதவி விலகி விட்டதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் தேவைப்படுகிறது. பிரதமர் செபாஸ்டியன் குர்ஸிடம் விவாதித்து முடிவு எடுப்பேன்” என குறிப்பிட்டார். பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாலி நாட்டில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். #MaliPM #MaliMassacre
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி மோப்டி நகரம் அருகேயுள்ள ஒகோசாகோ கிராமத்தில் நுழைந்த ஆயுதக் குழுவினர், துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் புலானி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 160 பேரை படுகொலை செய்தனர். இந்த படுகொலையை தோகோன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் நிகழ்த்தியிருக்கலாம் என குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த சம்பவத்தைத் கண்டித்து மாலியில் போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறையை கட்டுப்படுத்த பிரதமர் சூமேலூ பூபேயே மாய்கா தவறியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. ஜனாதிபதியும் தனது தொலைக்காட்சி உரையில், பிரதமர் பெயரை குறிப்பிடாமல் தனது அதிருப்தியை தெரிவித்தார். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியின் எம்பிக்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தனர். இவ்வாறு அனைத்து தரப்பில் இருந்தும் பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.



    இந்நிலையில், பிரதமர் சூமேலூ பூபேயே மாய்கா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. அமைச்சர்களுடன் சென்று ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கினார். அவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

    புதிய பிரதமர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய அரசு அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. #MaliPM #MaliMassacre

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடக மாநிலம் கலபுரகி தொகுதியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa
    கலபுரகி:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரசை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். அத்துடன் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பாஜகவில் இணையப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை கட்சி தலைமை சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைத்தது.

    எடியூரப்பாவுடன் உமேஷ் ஜாதவ்

    எனினும், சின்சோலி தொகுதி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென‌ தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர், கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவில் இணைந்தார். அப்போதே அவர் கலபுரகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

    தற்போது வேட்பாளர் தேர்வு நடைபெற்ற வரும் நிலையில், கலபுரகி தொகுதியில் போட்டியிட உமேஷ் ஜாதவுக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான கே.பி.ஷனப்பா கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இன்று அறிவித்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் தலைவர்களை புறக்கணித்துவிட்டு, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.

    மேலும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    இவ்வாறு மாறி மாறி முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி தாவி வருவதால் கலபுரகி தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோல்வி கண்டு வெளியேறியதை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்துள்ளார். #StephenConstantine
    ஷார்ஜா:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பக்ரைன் அணி வீரர் ஜமால் ரஷித் வெற்றிக்கான கோலை அடித்தார்.

    முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்று இருந்தது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி அடைந்தது. 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததும், இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளரான 56 வயது ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடைசி லீக் ஆட்டம் முடிந்ததுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நான் விலகி விட்டேன். நான் இந்திய அணியினருடன் கடந்த 4 வருடங்களாக இருந்து வருகிறேன். எனது நோக்கம் இந்திய அணியை ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற வைப்பது தான். அதனை நான் செய்து காட்டினேன். மேலும் சில சாதனைகளை நாங்கள் படைத்தோம். வீரர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஒத்துழைப்பை நினைத்து பெருமை அடைகிறேன். எனது சுழற்சி முடிந்து விட்டது. அணியில் இருந்து விடைபெறுவதற்கு இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது வருத்தம் அளிக்கிறது. இனிமேல் எனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2-வது முறையாக 2015-ம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஸ்டீவன் கான்ஸ்டன்டைனின் பதவி காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிய இருந்தது. கான்ஸ்டன்டைன் பயிற்சியில் இந்திய அணி தரவரிசையில் 96-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியை கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிப்பதாகவும் அகில இந்திய கால்பந்து சங்க பொதுச்செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார். #StephenConstantine



    பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign
    புவனேஷ்வர்:

    கடந்த 2011-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பெண் ஒருவர், மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து சமீபத்தில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இது பற்றி கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி, கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மந்திரி பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால், பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைத்தார்.  #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign 
    டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #AjayMaken #DelhiCongress
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அஜய் மக்கானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

    கடந்த 2017ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அஜய் மக்கான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதையடுத்து பதவியை தொடர்ந்தார்.

    மூன்று மாதங்களுக்கு முன்புகூட உடல்நலக்குறைவு காரணமாக அஜய் மக்கான் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை காங்கிரஸ் உடனடியாக மறுத்ததுடன், அவர் தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் விலகியுள்ளார். நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் ராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “2015 தேர்தலுக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய 4 ஆண்டுகளில் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் மற்றும் ஊடகத்தினர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததுடன், எனக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    உடல்நிலை காரணமாகவே அஜய் மக்கான் ராஜினாமா செய்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பதவி விலகியிருப்பதால், பாராளுமன்றத் தேர்தல் பணிகளுக்கான புதிய மத்திய பொறுப்பு வழங்கப்படலாம் அல்லது வேட்பாளராகக் கூட நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  #AjayMaken #DelhiCongress
    அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில், ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் (வயது 68) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அதிபர் டிரம்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பதவி விலக இதுவே சரியான தருணம் என்றும், அதிபர் டிரம்ப் தகுதியான ஒரு தலைவரை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு ஏதுவாக பதவி விலகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே, ராணுவ மந்திரி பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஜிம் மேட்டிஸ் ராஜினாமா கடிதம் அனுப்பியதையடுத்து, பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெற உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns

    சீக்கியர்கள் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பி வைத்தார். #SajjanKumar #Congress
    புதுடெல்லி:

    கடந்த 1984-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அப்போது டெல்லி எம்.பி.யாக இருந்த சஜ்ஜன்குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் சஜ்ஜன்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

    இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. நேற்று இந்த வழக்கில் சஜ்ஜன்குமார் விடுதலையை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். 31-ந் தேதிக்குள் அவர் சரண் அடைய வேண்டும். டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.



    இதையடுத்து சஜ்ஜன் குமார் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பி வைத்தார். #SajjanKumar #Congress
    இலங்கையில் பாராளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். #RajapaksaResigns
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ம் தேதி அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

    பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார்.

    இதற்கிடையே அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை விதித்தது. பின்னர் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அறிவித்தது. மேலும், பாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தது.

    கோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜபக்சே பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #RajapaksaResigns

    ×