என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sadness"
- மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
- உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 65) தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சின்னதம்பியும், லட்சுமியும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சின்னதம்பி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் சரியாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னதம்பி கடந்த 13-ந் தேதி இறந்தார்.
கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் லட்சுமி அழுது கொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சின்னதம்பி உடலை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லட்சுமியின் உடலையும் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கணவன் இறந்து 4 மணி நேரத்தில் மனைவி திடீரென்று இறந்தார்.
- கணவன் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவனுக்கும் தெரியவில்லை.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலீம்(வயது 60).
இவரது மனைவி மும்தாஜ்(59).
இருவரும் எல்லாவற்றையிலும் விட்டுக்கொடுக்காத தம்பதியாக ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் மும்தாஜ் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மும்தாஜ்க்கு மருந்து வாங்க அப்துல் சலீம் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றார்.
போகும் வழியில் அப்துல் சலீம் மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்துல் சலீமின் உடலை முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்திருந்தனர்.
நோய்வாய்ப்பட்ட மனைவி மும்தாஜ் அருகில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்தார்.
இவருக்கு அதர்ச்சி கொடுக்க கூடாது என்பதற்காக இவரிடம் குடும்பத்தினர் கணவர் இறந்த செய்தியை கூறாமல் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4மணிநேரம் கழித்து நேற்றிரவு மனைவி மும்தாஜும் திடீரென்று இறந்தார்.
ஏற்கனவே கணவர் இறந்த அதர்ச்சியில் இறந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் மனைவியும் திடீரென்று இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் கணவர் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவருக்கும் தெரியாமல் போன நிலையில், தம்பதி சாவிலும் இணைபி ரியாத இச்சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதுக்கு பிடித்தமானவர்களின் எதிர்பாராத பிரிவோ, மரணமோ மனதை உலுக்கிவிடும். அவர்களின் இழப்பை அவ்வளவு எளிதில் மனம் ஏற்றுக்கொள்ளாது. துக்கம் ஆக்கிரமித்து, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் மனம் தவிக்கும். இழப்பை சந்தித்த ஆரம்ப நாட்களில் துக்கத்தில் இருந்து மீள்வது கடினமான ஒன்றாக இருக்கும்.
`இழப்புகளால் ஏற்படும் துக்கம் எந்த அளவுக்கு மன, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்?' என்பது பற்றி ஆய்வு நடந்திருக்கிறது. அந்த ஆய்வில் நாளமில்லா சுரப்பிகள், நோயெதிர்ப்பு மண்டலம், இதயம் மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, கோபம், பதற்றம், பசியின்மை, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் பாதிப்பு அதிகமாகும் என்பதும் தெரியவந்திருக்கிறது.
பொதுவாக துக்கம் சில மாதங்கள் நீடிக்கும். சிலருக்கு 12 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முடியும்.
தனிமையை தவிருங்கள்: மனதுக்கு பிடித்தமானவர்களின் இழப்புக்கு பிறகு தனிமையை உணர்வது இயல்பானது. அவர்களின் ஞாபகங்கள் மனதை ரணமாக்கி கண்ணீரை வரவழைக்கும். அந்த சமயத்தில் ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாத சூழலில் மன வேதனை அதிகமாகும். ஆதலால் தனிமையில் இருப்பதை தவிருங்கள். தனிமைப்படுத்திக்கொள்வது உங்கள் உணர்வுகளையும், ஆரோக்கியத்தையும் மோசமாக்கி விடும்.
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது. நெருக்கமாக பழகுபவர்களிடம் உள்ளக்கு முறல்களை கொட்டி விடுங்கள். உணர்ச்சிகளை ஒரேடியாக கட்டுப் படுத்தக்கூடாது. உணர்வுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். அழ விரும்பினால் அழுதுவிடுங்கள்.
ஓய்வு எடுங்கள்: எதிர்பாராத இழப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் இருந்து மீளவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சமயத்தில் சோர்வை உணர்வது இயற்கையானது. வழக்கத்தை விட அதிக ஓய்வும், தூக்கமும் அவசியமானது.
சத்துணவு அவசியம்: துக்கத்தில் இருக்கும்போது சாப்பிட தோன்றாது. அது உடலை மேலும் பலவீனப்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியையும் பலவீனமாக்கும். அதனை தவிர்க்க ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமானது. உணவு சாப்பிட விரும்பாதபோது பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். தண்ணீர் பருகலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பது முக்கிய மானது.
உடற்பயிற்சி: துக்கமாக இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது மனதை இலகுவாக்கும். மனச்சோர்வை போக்கி உடலை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டும். மன நிலையையும் மேம்படுத்தும்.
- எடிசன் என்பவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
- இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை அடுத்த வாகைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் எடிசன். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி(வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
தற்கொலை
இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கவுதமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அவரை எடிசன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், மீண்டும் அவர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதே பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதமி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணை
அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் விசாரணை நடத்தி வருகிறார்.
- கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார்.
- . இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்
கடலூர்:
கடலூர் அடுத்த அரிசி பெரியங்குப்பம் சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று கலை யரசன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து கலையரசனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர்ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார்.
- 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது.
விழுப்புரம்:
பிரம்மதேசம் காளி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துவிட்டு, துணி துவைத்துக் கொண்டி ருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார். இது குறித்து அருகில் இருந்த பொது மக்கள் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி வித்ததின்பேரில், திண்டி வனம் மற்றும் மரக்காணம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட னர்.
பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்காததால், 2 ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டனர். இதனையடுத்து 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், துணி துவைக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
- நீண்ட நேரம் அசைவின்றி இருந்தவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் தாய் இறந்த சில மணி நேரத்தில் மகனும் இறந்த சம்பவம், உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர், வெங்கடராம அய்யர் நகரை சேர்ந்தவர் டாக்டர் சாம்பமூர்த்தி.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (98).
இவர்களுக்கு 5 மகன்கள். இதில் 4 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
கடைசி மகனான ஜெயசந்திரன் (68) என்பவருக்கு மட்டும் திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
ஜெயச்சந்திரன் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் மீனாட்சியம்மாள் வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
இதையடுத்து ஜெயச்ச ந்திரன் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.
தாய் இறந்த சோகத்தில் அழுதபடி இருந்த ஜெயச்சந்திரனை உறவினர்கள் ஆறுதல் படுத்தியுள்ளனர்.
பின்னர் காலை 10.30 மணியளவில் ஜெயச்சந்திரனும் இருக்கையில் அமர்ந்திருந்த படியே மாரடைப்பால் இறந்து விட்டார்.
நீண்ட நேரம் அசைவின்றி இருந்த அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் உறவினர்கள் ஒன்றாக கரிக்காடு எரிவாயு மயானத்தில் தகனம் செய்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல், மகனும் இறந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கவலை என்பது மன அழுத்தத்தின் முதல் படி. அதை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போது எதிர்மறையான பல சிக்கல்களை உருவாக்குகிறது. அடிக்கடி கவலைப்படும் பிரச்சனை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப்பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்றி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களில் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. கர்ப்பக்காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை பெண்களிடையே கவலையையும் மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன.
இதை தவிர அதீத சிந்தனை என்பது சில குடும்பங்களில் மரபியல் வழியாகவும் ஏற்பட கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமையை அனுபவிப்பது போன்ற செயல்களால் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
கவலையை தொடர்ந்து மன அழுத்தம் மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநலப்பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகளின் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் தேவையில்லாத கவலை இருந்தால் அதை ஆரம்பத்திலேயே சரி செய்வதற்கான வழிகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
மனநல பிரச்சனைக்கு ஆலோசனை கேட்கும் போது மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல் நலப்பிரச்சனைகளை தெளிவாக கூறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுவது மனச்சோர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்