என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "salt production"
- சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.
தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.
நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.
இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி ஆனைகுடி, பள்ளமோர்க்குளம், வாலிநோக்கம், தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப் பாலம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருட்களின் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழிற் சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. பொதுவாக பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.
தற்போது வெயில் சுட்டெரிப்பதால் உப்பள பாத்திகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற மாதங்களில் மழை காலம் என்பதால் காற்றின் ஈரப்பதத்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து திருப்புல்லாணி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது உப்பளங்களில் உப்பு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது.
சீசன் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உப்பளங்களில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை உயர்ந்துள்ளதால் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மரக்காணத்தில் உப்பு உற்பத்தி இல்லாததால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
- மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான 3500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வந்தது இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்தது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை. இதனால் 5000 தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.
- தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்சமயம் உப்பு உற்பத்திக்கு சூழ்நிலை சாதகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி உள்பட பல பகுதிகள் உள்ளன. நாைக மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வயல்களில் தேங்கி நின்ற தண்ணீர் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது. மேலும் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர்.
கீழ்வேளூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மீண்டும் கனமழை பெய்ய தொடங்கினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நாகை மாவட்டம் நாகூரில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைக்குளம் அருகே நதிப்பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சாயல்குடி அருகே வாலி நோக்கம் திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களில் பல ஏக்கர் பரப்பளவில் உப்பளபாத்திகள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தியும் முழுமையாக பாதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு மேலாக மழை சற்று ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் உப்பளங்களில் இருந்து ஏற்கனவே பிரித்தெடுத்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த கல் உப்பை சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்து லாரி களில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுபற்றி உப்பளத் தொழிலாளி ஒருவர் கூறும்போது, மழை சீசன் தொடங்கி உள்ளதால் உப்பளங்களில் மழை நீர் அதிகஅளவு தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மழை சீசன் முடிந்த பின்னர் இனி வருகிற பிப்ரவரி மாதம்தான் மீண்டும் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கும்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. உப்பு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகள் மூலமாகவே அனுப்படுகிறது.
இந்தநிலையில் கஜா புயலால் கடலிலிருந்து சேர் உப்பள பகுதியில் சேறு புகுந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தற்சமயம் உப்பு உற்பத்தி சீசனில் உப்பு உற்பத்தி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிட மிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.
இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீதமே நடந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.
கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்