search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAMI IDOLS"

    • சுவாமி அறை அருகே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு அதில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
    • வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார்.

    அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

    தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர்-உமாம கேஸ்வரி அம்மன்,சட்டைநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர்,திருநிலைநாயகிஅம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் சட்டைநாதர்கோயில் வளாகத்தில் கண்டெடுக்க ப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள்,தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே தனிபாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு பூட்டி சில்வைக்கப்பட்டுள்ளது.

    இதனை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சுவாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து விவாதித்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ திருமேனிகள் சட்டைநாதர் கோயிலில்தான் வைக்க வேண்டும்.

    இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.

    தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

    பேட்டியின் போது அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், தமிழ் சங்கத் தலைவருமான மார்கோனி, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், மருந்தாளுனர் முரளிதரன் உடனிருந்தனர்.

    • இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது.இந்த ேகாவில் அருகே உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது. அதனை தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து சிலையாக 5-க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்தது. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன், வருவாய் தாசில்தார் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சாமி சிலைகளை பார்வையிட்டனர். அங்கு மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டி வருகிறார்கள். இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மண் தோண்டும் போது கிடைத்த சிலைகள் சுமார் 200 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன் சிலை எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.சம்பவ இடத்தை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலைகள் கூட இருக்கலாம் எனதெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது.
    • அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது. இங்குள்ள வேலப்பன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் 15 தென்னை மரங்களை நட்டும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சங்ககிரி வட்டாட்சியர், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ் பிரபு சப்-இன்ஸ்பெக்டர் ரகு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு வழிபாடு நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்பு அங்கிருந்த சாமி சிலைகளை அகற்றி டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கருப்பர் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது
    • மர்ம நபர்கள் அட்டூழியத்தால் பரபரப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ளது சுணை கருப்பர் கோயில். அப்பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் சுணை கருப்பர் கோயில் வரலாற்று புகழ் பெற்ற பழங்கால கோயிலாகும். இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.

    தீபாவளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவு கோயிலின் முன் பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், கருவறை உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த மரத்திலான கதவின் ஸ்க்ருவை கழட்டிவிட்டு உள்ளே சென்றவர்கள் உள்ளிருந்த மூலவர் கருப்பர் சிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோயில் சுற்றுப்புறத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த வேல், அருவாள், கம்பு உள்ளிட்ட பொருட்களை சிதறடித்து சென்றுள்ளனர்.

    மர்ம நபர்களின் இந்த செயலால் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள், கோயில் முன் திரண்டனர். இதனை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×