என் மலர்
நீங்கள் தேடியது "sankarankovil"
- தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- ஜல்ஜீவன் மிஷன் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மேல நீலிதநல்லூர் யூனியன் சேர்மன் மாதவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் முன்னிலை வகித்தார். இப்பயிற்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் உள்ள கிராம குடிநீர் சுகாதார உறுப்பினர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குழுவின் செயல்பாடு, ஜல்ஜீவன் மிஷன் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.
பயிற்சியின் போது களநீர் பரிசோதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி ராஜேஸ்வரி கூறினார். மேலும் வெங்கடேசன், சுகுமாரன், தனசேகரன், சடையாண்டி, முருகன், ராஜேஸ்வரி, மீனாட்சி ஆகியோர் நீரின் அவசியத்தை பற்றி பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.
- சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- முகாமை சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ஜெயராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன், மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகரன், சமூக ஆர்வலர்கள் சங்கரன்கோவில் பரமசிவன், பாட்டத்தூர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் லிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.
இதில் 92 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 58 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.
- தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும்.
- இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள கிருஷ்ணா ஹாலில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதாமுன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். வெற்றிவிஜயன் தொகுத்து வழங்கினார்.
இதில் தென்காசி எம்.பி. தனுஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் செண்பகவிநாயகம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும், தி.மு.க. இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் திட்டங்களை ஒன்றிய நகர, பேரூர், கழக நிர்வாகிகள் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும், தெருமுனை பிரசாரம் என்பது பொதுமக்களிடம் எளிதாக செல்லும் முறை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு தற்போது இருந்தே பணியை தொடங்கி தி.மு.க.வை வெற்றி பெற கடமையாக உழைக்க வேண்டும்.
வரும் 18-ந்தேதி கழகத்தின் இளைஞரணி செயலாளர் அறிவித்துள்ளபடி வாசுதேவநல்லூர் தொகுதி தேவர் மண்டபத்தில் திராவிட பாசறை கூட்டம் நடத்தப்பட உள்ளது. 22 -ந்தேதி சங்கரன்கோவிலில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .
கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்ட கழகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அனைவரும் இணைந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் மூத்த முன்னோடிகள் அண்ணாவிப்பன், சோமசெல்வபாண்டியன், இளைஞரணி சரவணன், திலீப்குமார், வர்த்தக அணி முனியசாமி, சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, வீமராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார் இளைஞரணி பசுபதிபாண்டியன், மாணவரணி கார்த்திக், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட தொண்டரணி முத்து மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.
- மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது.
- 24 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் பிரிவில் கலைவாணி பள்ளி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மூத்தோர் பிரிவில் பிரகாஷ் என்ற மாணவன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற 24 மாணவ- மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய- ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- ராமச்சந்திரன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
- விஷம் குடித்து மயங்கி கிடந்த ராமச்சந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த வீரணாபுரம் காளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 22).
இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ராமச்சந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
- உதயநிதி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
தங்க மோதிரம்
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். 15-வது வார்டில் வார்டு செயலாளர் வீராசாமி ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் புனிதா ஏற்பாட்டில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் வசதிக்காக வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சியும், பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சுகர் போன்றவைகள் கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டது.
மேலும் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணி விக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கரன் கோவில் டி.டி.டி.ஏ. சிறப்புப் பள்ளியில் கணேசன், ராஜவேல், முருகன், முத்து மணிகண்டன் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சீருடைகள்
அதைத்தொடர்ந்து அம்பேத்கர் நகர் பகுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது.
அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
உதயநிதி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி மற்றும் மருத்துவத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மேலாண்மை குழு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்வியை மீட்டெடுக்க முதல்-அமைச்சர் அயராது உழைத்து வருகின்றார். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.
கலந்து கொண்டவர்கள்
இதில், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்குமார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி நகராட்சி கவுன்சிலர்கள் ராமு விஜயகுமார், வேல்ராஜ் ராஜா, ஆறுமுகம், மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், இளைஞர் அணி சரவணன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார், வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், வெள்ளத்துரை, சரவணன் மற்றும் கார்த்தி குட்டி, செல்வம், அன்சாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தென் மண்டல அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது
- போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றன
சங்கரன்கோவில்:
மேலநீலிதநல்லூர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தென் மண்டல அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை தென்காசி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் ப. மு.தேவர் கல்லூரியும் இணைந்து நடத்தியது. போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றன. போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணியினர் முதல் இடமும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 2-ம் இடமும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி. எஸ். ஹிந்து பள்ளி 3-ம் இடமும், கோவில்பட்டி நாடார் பள்ளி அணியினர் 4-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் தென்காசி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது,
பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் ஹரிகெங்காராம், மாவட்ட கைப்பந்து கழக துணை தலைவர் விவேக் ராஜ், செயலர் ரமேஷ்குமார், நெல்லை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சந்திரகுமார் மற்ற அணி மேலாளர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் வேணுகோபால் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சத்யகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்கள். போட்டி ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்து இருந்தார்.
- நகராட்சி கூட்டத்திற்கு சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் உமாமகேஸ்வரிசரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஹரிகரன், மேலாளர் மாரியம்மாள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மருத்துவ மையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சங்கரன்கோவிலுக்கு வழங்கிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், இங்கே வருவதற்கு முயற்சி எடுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை, சங்கரன்கோவிலில் அதிகளவில் சுற்றி தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், நகராட்சி பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் 8-வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், மேலாளர் மாரியம்மாளை அவதூறாக பேசியதால் அவரை கூட்ட அரங்கில் இருந்து வெளியேறும்படி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது.
- 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை - மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது. போட்டிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், பந்தை வட்டத்திற்குள் வைத்தல், எறிபந்து விளையாட்டு முதலியவை நடைபெற்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முடி வில் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்ப ட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்கு மார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார் வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், சரவணன் மற்றும் கார்த்தி, குட்டி, செல்வம், அன்சாரி, ஜான்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் முத்துச் செல்வி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
- பிரசார வாகனங்களை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்குவதற்கு வருகிற 8-ந்தேதி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள் குறித்த 5 பிரசார வாகனங்களை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, ராமச்சந்திரன், பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சேர்மன் பாலசுப்ரமணியன், உதயகுமார், ராயல் கார்த்திக், சதீஷ், வக்கீல் ஜெயக்குமார், வக்கீல் பிரபாகரன், சுப்புத்தாய், சண்முகராஜ், அலுவலக செயலாளர் சூரிய நாராயணன், இளைஞரணி பிரகாஷ், சங்கர், வீரமணி, கேபிள் கணேசன், ராஜவேல், பாரதி, கணேஷ், ஜெயராணி, இளைஞர் அணி பசுபதி பாண்டியன், தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ பேசினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துசெல்வி, துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-
நாளை தென்காசி மாவட்டத்திற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதல்-அமைச்சரை உற்சாகமாக வரவேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை நாம் வரவேற்றதை பார்த்து மற்ற மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்தீர்கள் என்று கேட்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிந்தாமணி விலக்கில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் கட்சி கொடி ஏற்ற உள்ளார்.
இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் சீருடை அணிந்து உற்சாகமாக முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். தென்காசியில் நிகழ்ச்சி முடிந்து ராஜபாளையம் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட பகுதியில் மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் வரும் வழியில் 14 மேடைகள் அமைக்கப்பட்டு அங்கு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் அனைவரும் இணைந்து முதல்-அமைச்சருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு விழாவை தலைமை கழகம் அறிவித்தது போல சிறப்பாக நடத்த வேண்டும். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரன்கோவில்:
அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஐயப்பன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, நிர்வாகிகள் வேலுச்சாமி, தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டத் துணை செயலாளர் சங்கர்ஷா, நகர செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் அந்தோணி செல்வம், ஸ்டீபன், சங்கர், ஜோதிடர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.