என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schoolgirls"

    • மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.
    • நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கிளை நூலகம் எண் 2 மகளிர் வாசகர் வட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் நூலகத்திற்கு களப்பயணம் வந்தனர்.

    மாணவிகள் சைக்கிளில் ஊர்வலமாக நூலகத்திற்கு வந்தனர் .நூலகத்தில் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என நூலகர் கலாவதி விளக்கினார் .வாசிப்பின் அவசியம் குறித்தும் நூலகம் செல்வதால் ஏற்படும் வளர்ச்சி பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். எந்த வகையான நூல்கள்நூலகத்தில் உள்ளது. மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என நூலகர் மகேந்திரன், பிரமோத் அஷ்ரப் சித்திகா ஆகியோர் விளக்கினர் .மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்தும். பல்வேறுநூல்கள்குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர் .

    இதை தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினராகாத மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர் .அவர்களுக்கான உறுப்பினர் காப்பு தொகையை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி செலுத்திஅவரும் ரூ .1000 செலுத்தி நூலகப் புரவலராகசேர்ந்தார்.தொடர்ந்து நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுடன் மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்த்தினர். பணி நிறைவு நூலகர் கணேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    • திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது
    • இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவினை முன்னிட்டு சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.இதில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களின் விவரம்:- சிலம்பம் போட்டியில் எம். சத்யா (தங்கம்), மோகனா (தங்கம்), காவியா (வெள்ளி) ஆகியோர் வென்றுள்ளனர் . இதேபோல் டேக்வாண்டோ பிரிவில்14 ,17 ,19 வயதுக்குட்பட்ட போட்டியில் பி .வர்ணா (வெண்கலம்),எம்.சுதர்சனா (வெள்ளி),சுபினயா (வெண்கலம்),ஆர். பௌத்ரி (வெண்கலம்),ஜி. கௌசல்யா (வெள்ளி), சினேகா (வெள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த சரவணமுத்துக்கு பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மைக்குடியை சேர்ந்த அஜித்(எ)அழகு பாண்டி (வயது21) என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அவரை தொந்தரவு செய்து வந்தார்.

    இது குறி்த்து மாணவியின் தாய் கொடு்த்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து வாலிபர் அஜித்(எ)அழகுபாண்டியை தேடி வருகின்றனர்

    திருமங்கலத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கப்பலூர் சின்னகாமன் மகன் கார்த்திக்(20) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    இதனால் மாணவி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • புனித வளனார் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பானாதுறை மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளை நடத்தியது.

    இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும், தடகள விளையாட்டுகளில் அனைத்து மாணவிகள் பிரிவில் 58 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    12 குழு விளையாட்டு களில் 7 குழு விளையாட்டு களில் பங்கு பெற்று, 12 பிரிவுகளில் முதல் இடமும், 3 பிரிவுகளிலும்2-ம் இட மும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், உட ற்கல்வி இயக்குநர் ஜான்சி, உடற்கல்வி ஆசிரியைகள் ஜாஸ்மின் டயானா, ஜோஸ்பின் ரோசி, மோகன ப்பிரியா ஆகியோருக்கு தலைமையாசிரியை அருட். சகோதரி. வில்லியம் பிரௌன் பாராட்டினர்.

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
    • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    4 மாணவிகள்

    இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பரபரப்பு தகவல்

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

    விஷம் குடித்தனர்

    இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

    விடுதி ஊழியர்களிடம் விசாரணை

    மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×