என் மலர்
நீங்கள் தேடியது "Seized"
- லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து சென்று பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.
- போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்று பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட முருகன் அங்கேயே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.42 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மானூர் அருகே துணிப்பைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- சோதனையில் 35 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மானூர் அருகே துணிப்பைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று இரவு அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது மானூர் அருகே உள்ள தென்கலம் பகுதியை ஒட்டிய தனியார் சுண்ணாம்பு குவாரி பகுதியில் துணிப்பைகளில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரிசியை கடத்தி செல்வதற்காக லாரி உள்பட 5 வாகனங்கள், 7 மோட்டார் சைக்கிள்களும் அங்கு இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருந்த நபர்களை தேடி வருகின்றனர்.
போலீசார் வாகன சோதனையில் பிடிபடாமல் இருக்க ரேஷன் அரிசியை துணிப்பைகளில் அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
- வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார்
- தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.
ஈரோடு:
சித்தோடு சப் -இன்ஸ்பெ க்டர் குக்கேஸ்வரன் தலை மையிலான போலீசார் நசியனூர் அடுத்த கந்தம்பாளையம் பிரிவு கோவை- சேலம் பைபாஸ் ரோட்டில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார். இதையடுத்து அந்த சரக்கு வேனில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து சித்தோடு போலீசார் சந்தேகம் அடைந்து வேனின் பின் பகுதியை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன.
மொத்தம் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த புகையிலை பொரு ட்களை எங்கிருந்து எங்கு கடத்தி சென்றார்கள் என தெரியவில்லை. புகையிலை பொருட்களையும், சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.
இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில், திருப்பூர் குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சாந்தி ,சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும், ரமேஷ் சரவணன், சரவணகுமார், உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவரை கைது செய்த போது, தஞ்சாவூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அந்த ரேசன் அரிசிகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பியது தெரியவந்தது .இதை யடுத்து சுமார் 6 டன் ரேஷன் அரிசி மற்றும் குருணை அரிசி உள்ளிட்ட 14.5 டன் அரிசி மூட்டைகள்,லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி மூட்டைகளை விற்பனைக்கு அனுப்பிய மாரிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
- செல்போன் பேட்டரிக்குள் இருந்த தங்க தகடுகள் பறிமுதல்.
- 2 நாட்களில் மொத்தம் ஒரு கிலோ 936 கிராம் தங்கம் பறிமுதல்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 38 லேப் டாப்கள் இருந்தன. மேலும் ஒருவரிடம் இருந்த செல்போன் பேட்டரியை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகள் இருந்தன. பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்த ரூ.16 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள 380 கிராம் தங்க துண்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும் விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில் கிடந்த அட்டைபெட்டியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள 356 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.93 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 936 கிராம் தங்கம் மற்றும் 38 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அந்தோணி செல்வம் என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரித்தனர்.
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி தலைமையிலான போலீசார் நேற்று அச்சங்குன்றம் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
புகையிலை
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணி செல்வம்(வயது 46) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அவரை சோதனை செய்ததில் புகையிலை விற்ற பணம் ரூ.23 ஆயிரம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
கைது
தொடர்ந்து அந்தோணி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அச்சங்குன்றம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர்(38) என்பவருக்கு சொந்தமான குடோனில் புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும் சந்திரசேகரையும் போலீசார் கைது செய்தனர்.
- சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர்.
- அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது.
நெல்லை:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது. அவரை விசாரித்தபோது, ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த தவம்(வயது 46) என்பதும், மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சுண்ணாம்புக்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது
- கனிமவளத்துறை உதவி புவியியலாளர் இளங்கோவன், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்
கரூர்:
கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி பாலம் அருகே லாரியில் சுண்ணாம்புக்கல் கடத்துவதாக, கரூர் மாவட்ட கனிமவளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனிமவளத்துறை உதவி புவியியலாளர் இளங்கோவன், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், வெங்கல்பட்டியில் போலீசார் சோதனை நடத்திய போது, அப்பகுதியில், 25 டன் சுண்ணாம்புக்கல்லுடன் டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும், லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை பறி முதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றன.
- புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- காா் பணிமனையில் சோதனை மேற்கொண்டனா்.
அவிநாசி :
அவிநாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் இருந்த காா் பணிமனையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு விற்பனைக்காகப் பதுக்கிவைத்திருந்த 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் மொத்தமாக பதுக்கிவைத்திருப்பதாக கூறப்பட்ட சேவூா் அருகே போத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஹா்ஷத் (எ) திருமூா்த்தி (31) வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய கோவை, மேட்டுப்பாளையம் சௌகத் அலி மகன் தா்வேஸ் முகைதீன் (36), சேவூா் பகுதியைச் சோ்ந்த முகமது பஷீா் மகன் ஜெயிலாபுதீன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான திருமூா்த்தியை போலீசார் தேடி வருகின்றனா்.
- திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 138 கிராம் தங்க நகை பறிமுதல் செய்தனர்
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை மெயின் ரோடு விமான நிலையம் கேட் அருகிலும், பொதுக்கழிப்பிடம் அருகிலும் இரண்டு பேர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது138 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால் இந்த தங்க நகைக்கான ஆவணங்கள் அவர்களிடம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த நகை யாருக்கு சொந்தமானது, விமானத்தில் கடத்தப்பட்டு எடுத்து வரப்பட்டதா, அல்லது வெளிநாடுகளுக்கு கடத்த எடுத்து வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
- விபத்துகள் ஏற்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பல்லடம் :
பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பகுதியில் ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து புதிய கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடி மிக்ஸ் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், சாலைகள் அடிக்கடி பழுதாவதாகவும், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமலிங்கபுரம் பகுதியில் வந்த 2 லாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெடிமிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
- வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகர் பகுதியில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மதுபானங்கள் அதிக அளவில் பதுக்கி வைக்க ப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் சம்மந்தப் பட்ட வீட்டினை ரகசியமாக கண்கா ணித்தனர்.
அப்போது வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது. இதையடுத்து வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து மதுபானங் களை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் சட்ட விரோதமாக மதுவிற்ற முனிசிபல்காலனி ஜான்சி நகரை சேர்ந்த சதீஸ்குமார் (32), கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் (27) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.