என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seizures"
- மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கல்.
- முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி:
வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி சந்திப்பு அருகே இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெரிய பையுடன் வந்தார்.
அவரிடம் சோதனை செய்தபோது பையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் அதே பகுதி பெரியார் நகரை சேர்ந்த முகமது அலிஜின்னா (38) என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட, புகை யிலை, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக் கும் மேலாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட் கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
- சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும்.
மூளை மற்றும் நரம்பு செல்களில் இயற்கையாக தகவல் பரிமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, இயற்கையாக அவற்றுக்கு இடையே இயல்பாக மிகச்சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது அதிக அழுத்தத்தினாலோ, திடீரென்று மூளைக்கு கட்டுப்பாடில்லாத அளவுக்கு அதிகமான மின் தூண்டுதல்கள், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து, மின் தொல்லையை மூளையில் ஏற்படுத்துகிறது. இது மூளையிலுள்ள நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குப் பாய்கின்றன.
இந்த நேரத்தில் உடல் உறுப்புகளின் செயல்பாடு மாறுபட்டு, கை மற்றும் கால்கள் கட்டுப்பாடில்லாமல் இழுக்கத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு நோய் என்கிறோம்.
வலிப்பின் போது வாயில் சேரும் எச்சில் நுரை, தொண்டையை அடைத்துக் கொண்டால் சுவாசம் தடைபடும். இது உயிருக்கு ஆபத்தானது. எனவே வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும். வலிப்பு அடங்கும் வரை காத்திருந்து, பின் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, ஆசுவாசப்படுத்த வேண்டும்.
அவரை சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும். அவரைச் சுற்றி நாற்காலி, டேபிள் மற்றும் காயத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் ஏதாவது இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.
முதல் முறை வலிப்பு வந்தவராக இருந்தால், அவரது குடும்ப டாக்டரை உடனடியாகப் பார்க்கச் சொல்லவும். அடிக்கடி வலிப்பு வருபவராக இருந்தால், வலிப்பு மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா என்று விசாரிக்க வேண்டும். வலிப்பு சில நொடிகளில், அதிகபட்சமாக ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும்.
அந்த நேரத்தில் அவரது கையில் இரும்புத் துண்டையோ, சாவிக் கொத்தையோ கொடுப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. ஆனால் இரும்பை கையில் கொடுத்ததனால் தான் வலிப்பு நின்றுவிட்டது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில் கையில் கொடுக்கப்படும் இரும்புக் கம்பி, சாவி முதலியவைகளின் கூரான பகுதி, வலிப்பு வந்தவரின் உடலில் எங்காவது குத்தி காயத்தை உண்டுபண்ணி விட்டால், மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்ல வேண்டிவரும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டு மானாலும் வலிப்பு வரும். பெரும்பாலான வலிப்புகளை தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி, மூளையில் ரத்தக் கசிவு, சில போதை மருந்துகள் உபயோகித்தல், சரியான தூக்கம் இல்லாமை. சில வலி போக்கும் மருந்துகள், ரத்தத்தில் சோடியம் குறைந்து விடுதல் இவைகள் எல்லாம் வலிப்பை உண்டாக்கலாம்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் போய்விட்டால் வலிப்பு வரலாம். இதை பிள்ளைக் காய்ச்சல் வலிப்பு என்று சொல்வார்கள். காய்ச்சலை உடனே கட்டுப்படுத்தினால், வலிப்பு சரியாகிவிடும். வலிப்பு நோயை பொறுத்தவரை மருத்துவரின் உதவியின்றி, வீட்டிலேயே சிகிச்சை செய்து கொள்வது நல்லதல்ல. மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
- கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இயங்கி வரும் தினசரி மீன் மார்க்கெட்டில் பார்மலின் எனும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படு வதாக உணவு பாது காப்புத்துறை அதிகாரி களுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராஜ், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மீன்வள சார் ஆய்வாளர் அய்யனார் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதனால் மீன் வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் பார்மலின் எனும் ரசாயனம் மீன்களில் கலக்கப்பட வில்லை என உறுதி செய்தனர். மேலும் கெட்டுப்போ ன 12 கிலோ மீன்களை கண்டறிந்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். இது போன்ற கெட்டுப்போன மீன்களை வாங்கி விற்க வேண்டாம் என மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் இதுபோல ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்து சென்றனர்.இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
- மேலூரில் முத்திரையிடாத 95 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை
மேலூர், திருச்சி மெயின்ரோடு, செக்கடி, தினசரி மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசு முத்திரையில்லாத தராசுகள் பயன்படுத்தப்படுவதாக தொழிலாளர்துறைக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படி உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முத்திரையிடாத 18 எலக்ட்ரானிக் தராசு, 24 மேசைத்தராசு, 2 விட்ட தராசு, 35 இரும்பு எடைக்கற்கள், 15 உழக்குகள், ஒரு ஊற்றல் அளவை என மொத்தம் 95 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிக பட்சத்தைவிட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்கள் விற்ற 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழி செல்வி கூறுகையில், முத்திரையிடாத, தரமற்ற எடை அளவுகளை பயன்ப டுத்துதல், எடைகுறைவு, சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது உள்பட நுகர்வோர் நலன் பாதிக்கும் வகையில் செயல்படும் வியாபாரிகளுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இது போல தவறு செய்தால், வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் தராசு முத்திரையிடும் பணிகள் labour.tn.gov.in இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வியாபாரிகள் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தராசு முத்திரையிடுவதற்கான நாள் ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் சிரமமின்றி முத்திரையிட்டு பயன்பெறலாம் என்றார்.
- ஆத்தூர் அருகே பரபரப்பு மளிகை கடையில் பதுக்கப்பட்ட ரூ.4 லட்சம் போதைபொருட்களை பறிமுதல் செய்தனர்.
- இதை தொடர்ந்து 46 மூட்டை போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லியை அடுத்த தெடாவூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழங்குவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே தெடாவூரில் உள்ள ரமேஷ் என்பவரது மளிகை கடையில் மூட்டை மூட்டையாக போதைபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது ஒரு காரில் இருந்து போதை பொருட்கள் இறக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 46 மூட்டை போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து சின்னபொண்ணுவாசல் பகுதியை சேர்ந்த ராஜா(வயது39), ராஜஸ்தானை சேர்ந்த்ச சச்சின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 46 மூட்டை போதை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் இதுவரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 2,622 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதில் 217 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் தொகுதிகளை தவிர்த்து மொத்தம் 57 ஆயிரத்து 416 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 ஆயிரத்து 297 வாக்கு எந்திரங்களும், 57 ஆயிரத்து 786 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 57 ஆயிரத்து 786 வி.வி.பேட்களும் பயன்படுத்தப்பட்டன.
மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 606 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 82 ஆயிரத்து 157-க்கும் அதிகமான போலீசார் மற்றும் ஆயுதப்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு படை வீரர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 600 ‘பிங்க்‘ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
கர்நாடகம் முழுவதும் தேர்தல் அமைதியாக நடந்தது. ஒரு சில இடங்களில் சிறு இடையூறுகள், தகராறுகள் நடந்தன. ஹாவேரி மாவட்டம் தேவகிரி கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே பரவா அக்காசாலி (வயது 58) என்பவர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் குடும்ப பிரச்சினையால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து வாக்களிக்க வைத்தனர். வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக முன்னாள் கவுன்சிலர் மல்லேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் உள்ள 280-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் வைக்கப்பட்ட வாக்கு எந்திரத்தில் இருந்த ஒரு கட்சியின் சின்னத்தில் ‘மை‘யை கொட்டியது, பெங்களூரு ஹம்பிநகரில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜனதா கவுன்சிலர் ஆனந்த் ஒசூரை தாக்கிய விவகாரங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவுகள் நடந்தன.
சாமராஜா தொகுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த 100 பேரை வாக்களிக்க செய்தோம். கொப்பல் மாவட்டம் கங்காவதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அன்சாரியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து நித்தியானந்தா, பீர் அகமது ஆகியோரை கங்காவதி போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நாளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.91.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.24.83 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.44.28 கோடி மதிப்பிலான தங்கம்- வெள்ளி பொருட்கள், ரூ.40.18 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.21.29 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறாக நேற்று வரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறியதாக மொத்தம் 1,388 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaElection2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்