என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "separation"
- தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதிக்கு ஈஷா, அஹானா என 2 மகள்கள் உள்ளனர்
- ஈஷா, 2012ல் பாரத் தக்தானி எனும் தொழிலதிபரை மணந்தார்
1970-80களில் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், பிரபல நடிகை ஹேமமாலினி (Hema Malini). தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமமாலினி, பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஹேமமாலினியின் கணவர், 70களில் இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த தர்மேந்திரா (Dharmendra).
தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினருக்கு ஈஷா தியோல் (Esha Deol) மற்றும் அஹானா தியோல் என 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது 42-வயதாகும் ஈஷா தியோல், தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2012 ஜூன் மாதம், ஈஷா, பாரத் தக்தானி (Bharat Takhtani) எனும் தொழிலதிபரை மணந்தார்.
2017ல் இத்தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது; 2019ல் 2-வது குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஈஷா-பாரத் தம்பதியினர் இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமான சூழலில் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். முக்கியமான இந்த மாற்றத்தின் போது எங்கள் இரு குழந்தைகளின் நலனும் எங்களுக்கு அவசியம். இந்நிலையில், எங்கள் வாழ்க்கை தொடர்பாக நாங்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவை பிறர் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்தி குடும்பத்தை சேர்ந்த, பட்டதாரியான பாரத் தக்தானி, தங்க ஆபரண துறையில் தனது தந்தையின் வியாபாரத்தை நிர்வகித்து வந்தார்.
2021 ஆண்டில் இவரது நிகர மதிப்பு $20 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது.
ஈஷாவும், பாரத்தும் பள்ளிப்பருவ காலகட்டம் தொடங்கி ஒருவரையொருவர் விரும்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தாலும், ஒரு பள்ளி நிகழ்ச்சியின் சந்திப்பில் இருந்து ஒருவரையொருவர் விரும்ப தொடங்கியதாக ஈஷா குறிப்பிட்டிருந்தார்.
- இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
- 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்
மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).
குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.
தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.
2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.
2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.
இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
திருமணம் கடினமானது.
விவாகரத்து கடினமானது.
உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.
கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
- இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று காலை 7.30 மணியளவில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்ருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் குமார் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அசோகன், சப் - இன்ஸ்பெக்டர் ராம தாஸ் தனிபிரிவு போலீஸ் காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனம் மோதி பலியான அஜித்குமார் உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல் லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் (வயது 19). முருகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வினோத் கூலி வேலை பார்த்து தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோரை பராமரித்து வந்துள்ளார்.
அதே தெருவில் வசிக்கும் முருகேசன் மகள் காளீஸ்வரி (17). பிளஸ்-2 முடித்து உள்ளார். இருவரும் நட்பாக அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். இதனை ஊர் மக்கள் தவறாக புரிந்து கொண்டு அவர்கள் காதலிப்பதாக நினைத்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரையும் சந்திக்க கூடாது என்று சத்தம் போட்டு பிரித்து வைத்தனர்.
நட்பாக பழகிய தங்களை காதலர்கள் என்று ஊர் மக்கள் கூறியதால் அவர்கள் 2 பேரும் உண்மையாகவே காதலிக்க தொடங்கினர். ஊராருக்கு தெரியாமல் தனிமையில் பேசி பழகி வந்தனர். இந்த விஷயம் காளீஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்களை மீண்டும் கண்டித்தனர். எனவே வினோத் தனது காதலி காளீஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இருந்தபோதும் காளீஸ்வரிக்கு திருமண வயது வரவில்லை என்பதால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார்.
வினோத் கூலி வேலைக்காக கொடைக்கானல் மலை கிராமமான பள்ளங்கி, கோம்பை, பெருங்காடு, மாட்டுப் பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். மலை கிராமங்களில் வீடுகள் வரிசையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். இது போன்ற பகுதியில் காளீஸ்வரியை தங்க வைக்க முடிவு செய்தார்.
சம்பவத்தன்று பெரும் பாறையில் நடந்த கோவில் திருவிழாவில் வினோத் தனது காதலியுடன் சென்றார். ஊர் மக்கள் திருவிழா உற்சாகத்தில் இருந்தபோது காளிஸ்வரியை கடத்திக் கொண்டு வினோத் மலை கிராமத்துக்கு வந்து விட்டார். அங்குள்ள ஒரு குடிசையில் காளீஸ்வரியை தங்க வைத்து வேலைக்கு சென்றார்.
திருவிழாவுக்கு வந்த காளீஸ்வரி மாயமானதை அறிந்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். வினோத் வீட்டில் அவர் இல்லாததால் அவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என்று முடிவு எடுத்தனர்.
அதன்படி அவர் வேலைக்கு செல்லும் கோம்பை மாட்டுப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கிருந்த காளீஸ்வரியை வீட்டுக்கு வருமாறு அடித்து இழுத்துச் சென்றனர். இந்த விபரம் வினோத்துக்கு தெரியவரவே அவர் ஓடி வந்து காளீஸ்வரியை காப்பாற்ற முயன்றார்.
அவர்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த கும்பல் காளீஸ்வரியை மட்டும் அழைத்துச் சென்றனர்.
தன் கண் முன்னே காதலியை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்து அவரை காப்பாற்ற முடியவில்லையே என கதறிய வினோத் அரிவாள் மனையால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ஆனால் இதனை பார்க்காதது போல அந்த கும்பல் வினோத்தை அங்கேயே விட்டு விட்டு செல்ல முயன்றனர்.
இதனிடையே இந்த விபரம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வரவே அவர்கள் அங்கு திரண்டனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த வினோத்தை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அவரை அனுப்பி வைத்தனர். கொடைக்கானல் போலீசார் காளீஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்