என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sewage water"
- துர்நாற்றத்துடன் வெளியாகும் கழிவுநீர் நீண்ட தூரம் வரை சாலையில் செல்கிறது.
- கழிவுநீர் குறித்து 4 ஆண்டுகளாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை டவுனில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக மேல மாடவீதி விளங்கி வருகிறது. இங்கு ஒரு சந்தியில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியாகும் கழிவுநீர் நீண்ட தூரம் வரை சாலையில் செல்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கின்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு காரணமாகின்றது. மேலும் நேதாஜி போஸ் மார்க்கெட் மற்றும் நெல்லையப்பர் கோவிலுக்கு பிரதான பின் வாசல் வழியாக செல்பவர்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
இந்த கழிவு நீரில் வாகனத்தில் வேகமாக செல்பவர்களி னால் நடந்து செல்பவர்களின் ஆடைகள் அசுத்தமாகின்றது என பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வந்தனர். இது குறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச்சங்க தலைவர் அயூப் கூறுகையில், இந்த கழிவுநீர் குறித்து 4 ஆண்டுகளாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிரந்தர தீர்வுக்கு ஏற்பாடு செய்யாமல் அலட்சியம் செய்யப்படுகிறது. எனவே பொதுநலன் கருதி மீண்டும் கழிவு நீர் ஓடுவதை தடுத்திட நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
- மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது.
- மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் சில இடங்களில் அடிக்கடி கழிவு நீர் கலந்து ஓடுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது. அந்த சாக்கடை தண்ணீர் மேலநத்தம் பகுதியில் நேரடியாக ஆற்றில் கலந்து நீர், கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இன்று காலை ஆற்றில் குளிக்க சென்ற பொது மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாக்கடை நீர் கலப்பது குறித்து அந்தப் பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலநத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் செல்லும் நீரை பாட்டில்களில் பிடித்து வைத்துள்ளனர். அதனை கலெக்டரிடம் காண்பித்து நிரந்தர தீர்வு காண மனு அளிக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபற்றிய தகவல் என்னுடைய கவனத்திற்கு காலையில் வநதது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி சாக்கடை நீர் தாமிரபரணி நதியில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
- இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து செல்லவேண்டியுள்ளது.
மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.
- மாலை 5 மணிக்குள் பிரச்சனைக்கு தீர்வகாண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் சென்றனர்.
அவினாசி:
அவினாசி சேவூர் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடைக்கு தீர்வு காண வேண்டி அவினாசி பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தங்கவேல் தலைமையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ,அவினாசி சூலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வடிகால் வசதி இல்லை .எனவே அங்குள்ள கழிவு நீரை அவினாசி சிந்தாமணி பஸ் ஸ்டாப் எதிரே குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொண்டுவந்து விடுவதால் சாக்கடை நிரம்பிவழிவதால் அங்கு ஏராளமாக சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே பேருராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து பேருராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, தி.மு.க.நகர செயலாளர் திராவிட வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவாத்தையின் முடிவில் மாலை 5 மணிக்குள் பிரச்சனைக்கு தீர்வகாண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் சென்றனர்.
- குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியில் 448 வீடுகளுடன்அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில்தெப்பக்குளம்போல தேங்கி நிற்பதால் குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் , இங்கு கழிவுநீர் வெளியேற எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அனைத்து வீடுகளின் கழிவுநீரும் பல மாதஙகளாக குடியிருப்புகளுக்கு மத்தியில் சேறும் சகதியுமாய் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவுகிறது. குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் தேங்கி நிற்கும் சாக்கடை குழியின் ஆழம் தெரியாமல் அங்கு விளையாடுவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக குடியிருப்பவர்கள் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
- சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை
மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் அதிக அளவில் புழுக்கள் மிதந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். அவர்கள் குடிநீரை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதா வது:-
மதுரை மாநகராட்சி 4-–வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் வைகை வடகரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக குடிநீர் அரசரடி பகுதியில் நீரேற்று நிலையத்தில் சுத்திக ரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் குடியிருப்பு பகுதிக ளுக்கு வினியோகம் செய்யப் படுகிறது.
இவ்வாறு வரும் குடிநீர் வைகை ஆற்று வடகரை பகுதியில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் குடிநீரு டன் சாக்கடை நீர் கலப்பதாக தெரிவிக்கின்றனர். குடிநீர் வரும் பகுதியை மாநகராட்சி 29-வது வார்டு, 30-வது வார்டு பகுதியில் உள்ளது மேலும் இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று சாலையை தோண்ட வேண்டும் என்ப தால் தாமதப்படுத்துவதாக வும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீரில் புழுக்கள் அதிகமாக வந்தது. இதனால் நாங்கள் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தட்டுப்பாடு காரணமாக புழுக்கள் உள்ள தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம்.
எங்கள் பகுதியில் தொடர்ச்சியாக பலருக்கு மஞ்சள் காமாலை, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குழாயில் வந்த குடிநீர், வீடுகளில் உள்ள குடம், பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்ட குடிநீரை அதிகாரிகள் பார்வையிட்ட னர்.
குடிநீரில் புழுக்கள் வந்ததற்கான காரணம் கண்டறி யப்பட்டு சுகாதார மான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக ஆழ்வார்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் தற்போது நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோயமுத்தூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வேண்டும்.
- பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது.
வீரபாண்டி :
திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கோயமுத்தூர், பல்லடம்,பொள்ளாச்சி, உடுமலை ,பொங்கலூர். போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுதான் பேருந்து ஏற வேண்டும்.
ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் எப்பொழுதும் மழைநீரும் சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது. மேலும் பேருந்து ஏறுவதற்கு இந்த கழிவு நீரின் வழியாகத்தான் பேருந்தில் ஏற வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது.
- குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது
அவிநாசி :
கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கிறது. கழிவுநீருடன் குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது.இதனை குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கட்டமைப்பில், செங்குத்து உறிஞ்சுகுழி அமைக்க ஊரக வளர்ச்சி முகமை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர்.
அவ்வகையில் கால்வாய் அல்லது வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள சல்லடையில் தண்ணீருடன் வழிந்தோடி வரும் குப்பை, பாலிதீன் போன்ற பொருட்கள் தேங்கி நின்று தண்ணீர் மட்டும் உறிஞ்சுகுழியில் விழுந்து நிலத்தடிக்கு செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பல இடங்களில் இத்திட்டம் உரிய பலன் தருவதில்லை என்ற புகார் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் வழிந்தோடி வரும் கால்வாயில் ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு உரிய பலன் தருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு எதிரில் மழைநீர் வடிகால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து சாலையின் மறுபுறம் வரை குழாய் அமைத்து மழைநீர் பாலாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் வடிகால் தொட்டியில், இந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்லும் வகையில் இணைக்கப்பட்டது.
இதனால் கழிவுநீருடன் வரும் குப்பைகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்குவதால், தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி, சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் குடியிருப்புகள், ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீரை குழாய் மூலம் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் தொட்டியில் இணைத்துள்ளனர்.
இதனால் கழிவுநீர் குழாயில் வரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகள், கோழி கடைகளின் கழிவுகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. அப்போது இந்த தொட்டி நிரம்பி கழிவுநீர் சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால், கடும் துர்நாற்றம் வீசிவருவதோடு, இந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பெரும் சிரமமடைகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் செல்லும் பாதையில் கழிவுநீர் செல்வதால், பாலாற்றில் மாசு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்தும், மழைநீர் வடிகால் தொட்டியில் கழிவுநீர் செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமனில் இருளப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.
இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் கழிவு நீர் வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்து ராஜூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த வாலிபருக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரது உடலில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது.
எனவே அந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் அவர் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்