என் மலர்
நீங்கள் தேடியது "Shiva Temples"
- மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.
மதுரை
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.
- சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
உடுமலை :
உடுமலையில் சனி பிரதோஷத்தை முன்னி ட்டு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், சோழீஸ்வரர் சன்னதியில் சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கே ஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து ரத்தின லிங்கேஸ்வரர் சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
எலையமுத்தூர் பிரிவு புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது.மடத்துக்கு ளம் கடத்தூரில் அமரா வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சு னேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவி ல்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மற்றும் நந்தியம் பகவானை தரிசனம் செய்தனர்.
- சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில், ஆஸ்பத்திரி ரோடு மாதேஸ்வரன் கோவில், பெருந்தலையூர் பிரகனநாயகி சமேத மகிழேஸ்வரர் கோவில் மற்றும் பட்டையகாளி பாளையம் தென்காளகஸ்தி கண்ணப்ப நாயனார் கோவில் ஆகிய கோவில் களில் சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் பவானி திருமுறை கழகம் தியாகராஜா தலைமையில் தாங்கள் கொண்டு வந்திருந்த சிவலிங்க உற்சவர் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், சந்தனம், பன்னீர் போன்ற நவ திரவியங்களால் ஐந்து காலமும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடி சிறப்பு வழிபாடு செய்தார்கள். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள மூலவருக்கு ஐந்து கால அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் கவுந்தப்பாடி, வேலம்பாளையம், அய்யம்பாளையம், பொம்மன்பட்டி, க.புதூர், செந்தாம்பாளையம், சலங்கைபாளையம், பெருந்தலையூர், குட்டிய பாளையம், பி.மேட்டுப் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாரா தனைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம்விக்ரம சோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி ,உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொ ண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷ த்தையொட்டி சிவபெருமா னுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம்,தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாரா தனைகள் நடைபெற்றது.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவன் கோவில்களில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
- அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், அரிசி மாவு, அபிஷேகப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர், மட்டுவார் குழலி அம்மன், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் சிவன் கோவில் ஆகிய பகுதிகளிலும் சோமவார பிரதோசத்தை ஒட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும்.
- பிரதோஷத்தையொட்டி அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.
பல்லடம் :
சிவாலயங்களில் பிரதோஷ நாளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தையொட்டி அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
பல்லடம்:
பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதன்படி பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
இதே போல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை வழிபட்டனர்.
- அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம் :
சிவன் கோவில்களில் பிரதோஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சி வபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை விநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகியவற்றை கொண்டு் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
- கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.
ஆலயம் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குாியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் படிக்கும் போதும், கேட்கும்போதும், கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தால் நாம் ஈர்க்கப்படுவோம். சில விஷயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் சில நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அப்படி நம்மை அதிசயிக்க வைக்கும் ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரிம்பகேஸ்வரர் திருக்கோவில்.
நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திரிம்பக் என்ற இடம். இங்குதான் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரிம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மிக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனைப் போற்றுகின்றனர். இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.
பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால், இத்தலத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளது தனித்துவமான அம்சமாகும்.
இந்தப் பகுதியில் வாழ்ந்த கவுதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக, இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது.
திரிம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான், சிம்ம ராசியில் வரும் போது, இத்தலத்தில் கும்பமேளா பெருவிழா கொண்டாடப்படுகின்றது.
இக்கோவிலில் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மிக ரீதியாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாகப் புலப்படவில்லை.