என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Siege protest"
- பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு பேச முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்றுகாலை 30-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
- கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
- பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்
சென்னை:
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது.
அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, "கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப் படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.
- துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
- துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சி செயல்பட்டு வருகின்றது. இங்கு 50-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இறந்த லலிதா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட துப்புரவு பெண் ஊழியர்கள் இன்று காலை கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.
மேலும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஏற்படுத்தி தர கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
வீர கேரளம் புதூர் அருகே உள்ள ராஜகோபால பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அதிசயபுரம் கிராமத்தில் புதிதாக அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாகவும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ கோவில்கள் உள்ளது எனவும் அதனை திறக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இப்போராட்டத்தில் ராஜகோபால பேரி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி, இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அகரக் கட்டு லூர்து நாடார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கிருபாகரன்,தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி மத்திய சிறை முன்பு இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
- 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
திருச்சி:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையை உடனடியாக இழுத்து மூட வேண்டும், 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில் தீக்குளித்த ஈழத் தமிழர் உமாரமணன் என்பவருக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும்.
தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள் கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீப், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருச்சி மத்திய சிறை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 64 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை பாசன பகுதிகளுக்கு சென்றடையவில்லை. நாற்று விடுவதற்கு நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்கள் கருக தொடங்கி விட்டது.
திருச்சி முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கதவணையில் மண்மூட்டை போட்டு தடுத்து காவிரி வழியாக நாங்கள் பாசனத்தை கொண்டு வருவோம் என்று அரசு சொல்வது தவறான நடவடிக்கை. இதனை ஏற்க இயலாது. உடனடியாக ராணுவத்தை கொண்டு தற்காலிக கதவணைகள் அமைக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும்.
ராசி மணலில் அணையை கட்டி உபரி நீரை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி முக்கொம்பில் விசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #MukkombuDam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்