search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruvapuri Murugan Temple"

    • சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    • திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.

    இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.

    இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.

    மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கும்பாபிஷேகம் நடைபெற்று ஆங்கில நாள் காட்டியின்படி ஒரு வருடம் நிறைவு பெற்றது.
    • கோவில் வளாகத்தில் அருங்கோணத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, நவகலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 திரவியங்கள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள மூலவர், விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு கருங்கல் தரைதளம் அமைத்து, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய எஸ்.எஸ்.கியூ லைன் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.1.25 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மண்டல அபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்று ஆங்கில நாள் காட்டியின்படி ஒரு வருடம் நிறைவு பெற்றது. எனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இக்கோவிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், இக்கோவிலில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்படி கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு ஆகிறது. இதை முன்னிட்டு இன்று விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் ஆனந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

    இக்கோவில் வளாகத்தில் அருங்கோணத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, நவகலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 திரவியங்கள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது. மதியம் மகாபூர்ணாகுதி நடந்து. பின்னர், நவக்கலச தீர்த்தங்கள், 108 சங்கு தீர்த்தங்கள் மங்கள வாத்திய முழங்க பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மூலவருக்கு புஷ்ப-ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், புஷ்ப அலங்காரத்தில் உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
    • திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.s

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

    இயைடுத்து காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்ற ழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை மறுநாள்(3-ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதி மூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடும் மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், வழிபாட்டு குழுவினரும் செய்து வருகிறார்கள்.

    • வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடியற்காலை முதல் இரவு வரையில் வந்து நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை பக்தியுடன் வணங்குவர். இதனால் பக்தர்களுக்கு வீடு,நிலம், திருமணம், பிள்ளை பேரு, உத்தியோகம் உள்ளிட்டவை சிறப்பாக அமைவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள திருக்குளத்தை ரூ.3.14கோடி செலவில் சீரமைக்கும் பணியை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை துவக்கி வைத்தார்.

    இந்நிலையில், அதனை வரவேற்கும் வகையிலும்,ரூ.2.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் என மொத்தம் ரூ.3 கோடியே16 லட்சத்து 30 ஆயிரம் செலவிலான வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தனர். இதன் பின்னர், திருக்குளத்தை சீரமைக்கும் பணியின் பூஜையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பார்த்தசாரதி, ஒப்பந்ததாரர் விஜயகுமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் இ.ஜெகன்உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் திருக்கோவிலின் பணியாளர்களும், ஊழியர்களும், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோயில் முழுவதும் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    • காலையில் மூலவருக்கு 18 வித பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரத்தினாங்கி சேவையில் மூலவர் அருள்பாலித்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலைத்துறையினர் ரூ.1.25 கோடி செலவில் புனரமைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த கோயிலுக்கு வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் தொடர்ந்து 6 வாரங்கள் வருகை தந்து முருகப்பெருமானை நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், கல்யாணம், வேலை வாய்ப்பு வியாபாரம் குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    ஆண்டுதோறும் மார்ச் மாதம் 3-வது ஞாயிற்றுகிழமை இத்திருக்கோயிலில் இலட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முழுவதும் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் மூலவருக்கு 18 வித பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரத்தினாங்கி சேவையில் மூலவர் அருள்பாலித்தார்.

    இதனைத் தொடர்ந்து 18 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதிட இலட்சார்ச்சனை நடைபெற்றது. இதில்,சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி தலைவர் ஜான்சிராணி ராஜா, துணைத்தலைவர் சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவ ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி. இலட்சுமணன், தக்கார் சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.செந்தில்குமார், உபயதாரர் கதிர்மணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கோவிலை ரூ.1.25 கோடி செலவில் புதுப்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
    • விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.

    இந்த கோவிலை ரூ.1.25 கோடி செலவில் புதுப்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் மற்றும் கிருத்திகை-சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில், இன்று மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இவருடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், சோழவரம் வடக்கு மண்டல் பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி ஏதும் வேண்டாம் எனக்கூறி விட்டு மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள தமிழர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அழகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

    முன்னதாக ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது.
    • கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய் தீபம் ஏற்றினால் பக்தர்களின் வேண்டுதலான வீடு, மனை, நிலம், வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் கட்டுக்கடகாத பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். எனவே, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    • சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதன் பின்னர்,தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இக்கோவிலில் கடந்த 25-ம் தேதி துவங்கியது.எனவே,அன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

    இந்நிலையில்,நேற்று முன் தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதை முன்னிட்டு வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இதன் பின்னர், திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
    • சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் வருகிறது. அப்போது முக்கிய கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவிலிலும் கிரகணத்தை முன்னிட்டு 25-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்படுகிறது.

    சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவிலின் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.

    • ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை.
    • ராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம்

    1. முருகம்மையார் கை தழைக்கச் செய்தது

    2. தேவர் இருந்து அமுதுண்டது

    3. தேவேந்திரப் பட்டணம் கிடைக்கப்பெற்றது

    4. இந்திரனுக்கு இந்திரபதி கிடைத்தது

    5. லவன்-குசன்-ராமனின் அசுவத்தைக் கட்டிய இடம்.

    6. ராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம்

    7. ராமனுடன் லவன்-குசன் போரிட்டு சிறுவாபுரியை வென்றுஜெயநகராக்கியது.

    8. அர்ச்சனைத் திருப்புகழ் பாடப்பெற்றது.

    9. சிறப்புத் திருப்புகழ்கள் பாடப்பெற்ற தலமானது.

    10. ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை.

    11. மரகதப்பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திரு உருவங்கள் அமைந்த திருத்தலம்.

    12. கலியுகத்தில் பேசும் கடவுளாகத் திகழும் சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்த பெருமை எனும் பன்னிரெண்டு பெருமைகளை உடையது இன்றைய சிறுவாபுரி.

    ×