என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivasankar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் லைப் மிஷன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் லைப் மிஷன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடமும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.

    12 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று நள்ளிரவு சிவசங்கரை அதிரடியாக கைது செய்தனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும்.
    • ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 353 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர்.

    இதனை தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பஸ்களில் முதல்கட்டமாக 65 பஸ்களுக்கு புவிசார் நவீன தானியங்கி (ஜி.பி.எஸ்.) அறிவிப்பான் மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் 3 பணிமனைகள், திருப்பூர் மண்டலத்தில 1 பணிமனை என மொத்தம் 7 பணிமனைகளில் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் தங்குவதற்கு குளிர்சாத வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து டிரைவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி முடிந்த பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

    கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கபட்டு, குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம்.

    அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும். பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தனியார் துறையினர் சிலர் தங்கள் பஸ்களில் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுபற்றிய தகவல் வந்தவுடன், அதிகாரிகளை வைத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும்.

    தமிழக முதலமைச்சர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும்.

    பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
    • சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.

    * சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
    • புதிய முறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 28) துவங்கி வைத்தனர்.

    மேலும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

    யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.

    இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார். 

    • நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.
    • ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதிலும் 1,535 ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

    இவற்றுள் பெரும் பான்மையானவை புதுச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.

    மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வரியும் செலுத்தா மல் தமிழ்நாட்டிற் குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும்.

    மேலும் இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் பல தமிழ்நாடு மாநிலம் வழியே பிற மாநிலங்களுக்கு பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது விதிகளை மீறி தமிழ் நாட்டிற்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இவ்வகை ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

    இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னி பஸ்களில் நாளது தேதி வரை 112 ஆம்னி பஸ்கள் மட்டுமே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.

    ஆனால், இன்னும் 793 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை.

    எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    மாநிலம் முழுவதிலும் கடந்த 18.06.2024 முதல் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னி பஸ்கள் மேற்கூறிய விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னி பஸ்கள் அவற்றின் உரிமையாளர்களால் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்கு வரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், மேற்கொண்டு 200 ஆம்னி பேருந்துகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து பஸ்களின் இயக்கத்தினையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பஸ்சில் சிறிது தூரம் பயணம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இயக்கப்படுகின்ற பழைய பஸ்களை மாற்றி 7700 புதிய பஸ்கள் வாங்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு 23 புதிய பஸ்கள் இன்று துவக்கி வைத்துள்ளோம்.

    இந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், கலைஞர் ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14 ஆயிரம் பஸ்கள் தான் வாங்கப்பட்டது. பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பதே கிடையாது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தார். ஓரிரு மாநிலங்களில் மட்டும் தான் தற்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள பஸ் கட்டணத்தை விட அருகில் உள்ள மாநிலங்களில் அதிகமாக வசூலித்து வருகின்றனர். டீசல் விலை ஏறும் போதெல்லாம் கட்டண தொகையை உயர்த்தி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் கட்டண உயர்வு என்பது இல்லை, மகளிர் விடியல் பயணத்தின் காரணமாக போக்குவரத்து துறையின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதற்கு செலவாகும் தொகை 2800 கோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

    இதனால் தான் போக்குவரத்து பணியாளர்களுக்கு மாதத்தின் முதல்நாள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது. மத்திய இணை மந்திரி எல். முருகன், வட மாநிலங்களுக்கு எல்லாம் சென்றதில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருப்பதால் தான் அவர் நிம்மதியாக தேர்தலில் நிற்கவும் பாதுகாப்பாக இருக்கவும் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருவரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது.
    • காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான கள்ளக்கூட்டணி நொடிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் ஜகபர் அலி மரணத்தை கண்டித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டார். இருவரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருப்பதாகவும், அறிக்கைகள் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், அறிக்கைகள் ஒரே மாதிரி இருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கள்ளக்கூட்டணி இருப்பதை காட்டுவதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு பொம்மலாட்டம் நடக்குது!*

    'அரசியல்ல வட்ட செயலாளர் பதவி மட்டும்தான் இருக்கு. சதுர செயலாளர் பதவியெல்லாம் கிடையவே கிடையாது' என டயலாக் பேசும் வட்ட செயலாளர் வண்டு முருகன் காமெடியை போல, நிஜ அரசியலில் கள்ளக் கூட்டணி என்ற சொல்லை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர்(?) எடப்பாடி பழனிசாமி!

    அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். புதுக்கோட்டை திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்பட்டமாக ஒரே வரிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுச் சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். அண்ணாமலை நேற்று போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து, 'பசையே' இல்லாமல், காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுதத் தைரியமில்லாமல், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு வந்த பழனிசாமி, டெல்லியிலிருந்து பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு எழுதிக்கொடுத்த பதிவை அப்படியே நகல் எடுத்து வெளியிடும் அளவிற்கு பாஜகவின் அடிமட்ட அடிமையாகவே மாறிவிட்டார் பழனிசாமி. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான அறிக்கை விடும் வழக்கத்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுக செய்ததை சமூக வலைத்தளம் முழுவதும் கேலிப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பழனிசாமியின் நெருங்கிய ஈரோட்டு உறவினர் இடங்களில் மோடி அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்ற பிறகு, பழனிசாமிக்கு 'பய' காய்ச்சல் வந்துவிட்டதா? டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் முகவரியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பழனிசாமி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ, இரட்டை இலை என பழனிசாமி தினமும் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பதில் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையை டெல்லிக்கோ அல்லது சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கமலாலயம் அலுவலகத்திலோ மாற்றிக் கொள்ளலாம்.

    அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி பிரதமர் மோடி நடத்தும் அப்பட்டமான பொம்மலாட்ட நாடகம். அச்சுபிசகாமல் ஆடும் பொம்மை பழனிசாமி!

    "ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் புதுமையாக இருக்குது. நாலுபேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே" என்ற திரைப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது!, என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.
    • சி.வி.சண்முகத்தை கண்டித்து அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், "சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டார்.

    இவரது பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், சி.வி.சண்முகத்தை கண்டித்து அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிவசங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ''மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்'' என நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

    ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம்.

    "அம்மா... அம்மா.." என அமையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு "சின்னம்மா இல்ல...எங்க அம்மா" என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார்.

    அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது.

    மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    முதலமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து "நன்றி அப்பா" என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துகிறது போல. அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல.

    அதனால்தான், அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக விரைவாக அனுப்பி வைக்க நடவடிக்கை.
    • மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ளலாம்.

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப் படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது.

    தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்கள் (உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும்) பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை / தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் 03/08/2022 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள அருகிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கவும். பொது மக்கள் திருச்சி/மதுரை – சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×