என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slavery"
- கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
- வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.
இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
- கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
- கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி அன்று அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் கலெக்ட்ர் அனீஷ்சேகர் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், துணை ஆணையர் லிங்கம்,, உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மலர்விழி மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், "ONE STOP CRISIS TEAM" உறுப்பினர்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, பொது மக்கள் அதிகம் கூடும். இடங்களான கலெக்டர் அலுவலக வளாகம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், கடைவீதிகள் மற்றும் ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக 30.1.2023 முதல் 4.2.2023 வரை வருவாய் கோட்டாட்சியர்களின் தலைமையில் தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களால் செங்கல் சூளைகள் மற்றும் அரிசி ஆலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது இடங்கள், ெரயில்வே மற்றும் பஸ் நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் காட்டிவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள். தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்க ளிடையே கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு வாசகம் மற்றும் உதவி எண் குறித்து தற்போதைய செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கையுடன், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்