என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100692"
மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.
அதன்படி நேற்று முன்தினம் தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில், தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையிலேயே அதை குடிக்கவும் செய்தார்.
அப்போது அவரது முகநூல் கணக்கில் இருந்த நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, விருசாலியை மீட்குமாறு வேண்டிக்கொண்டனர்.
அதன்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் விருசாலியின் வீட்டை கண்டறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற பெண் சமூக ஆர்வலர் முகநூல் நேரலை பதிவு காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரத்தநாடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அசாரூதீன் (வயது 19). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த தேர்வில் அசாரூதீன் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மனவேதனையுடன் அசாரூதீன் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலுடன் சோகத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்த அசாரூதீன், எலி மருந்தை தின்று விட்டார். இதனால் உயிருக்கு போராடிய அவரை சக நண்பர்கள் மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அசாரூதீன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மட்டிஸ், உளவுத்துறை தலைவர் கிறிஸ்டோபர்ரே, மற்றும் கடற்படை உயர் அதிகாரி ஆகியோருக்கு, கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கடிதம் அனுப்பியவர் முகவரி எதுவும் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை பரிசோதித்தனர். அதில் ரிசின் எனப்படும் விஷம் தடவப்பட்டிருந்தது. எனவே, தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் உதா மாகாணத்தில் லோகன் நகரை சேர்ந்த வில்லியம் கிளைடே ஆலென் என்பவரை கைது செய்தனர்.
இவர் அமெரிக்க கடற்படையின் மூத்த வீரர் ஆவார். இவர் மீது கசால்ட்லேக் சிட்டி கோர்ட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #DonaldTrump
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது குப்பிச்சிபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 90). இவரது மனைவி மாராத்தாள் (85).
கடந்த 18 நாட்களுக்கு முன்பு நாச்சிமுத்து வயது முதிர்வு காணரமாக இறந்து விட்டார். கணவர் இறந்து துக்கம் தாங்காமல் மாரத்தாள் கணவரை நினைத்து புலம்பி வந்தார். மகன் மற்றும் பேரப்பிள்ளை, கொள்ளு, எள்ளு பேரப்பிள்ளைகள் ஆறுதல் கூறினர். ஆனால் சமாதானம் அடையாத மாரத்தாள் சம்பவத்தன்று தள்ளாத நிலையிலும் அரளி விதையை பறித்து அரைத்து தின்றார்.
சிறிது நேரத்தில் மாராத்தாள் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் கருப்புசாமி மயங்கி கிடந்த தாயை மீட்டு பல்லடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாராத்தாள் பரிதாபமாக இறந்தார்.
பல்லடம்:
பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து பாப்பாள் குழந்தைகளுடன் சூலூரில் உள்ள ராசிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிக்க பணம் கேட்டு ஜோதிமணியை அடிக்கடி தொந்தரவு செய்தார். நேற்றும் காலை குடித்து விட்டு வந்த சந்திரன் ஜோதிமணியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டார். பணம் ஏதுவும் இல்லை என்று கூறிய ஜோதிமணி கடைக்கு சென்று விட்டார். கடைக்கு சென்று சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சந்திரன் சாணிப்பவுடர் குடித்து வாயில் மஞ்சள் நிற நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த ஜோதிமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் சாமுண்டிபுரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நெல்சன். பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி புனிதா (28). இவர்களுக்கு எவலின் (7) என்ற மகளும் எபின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
நேற்று இரவு நெல்சனுக்கும் புனிதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த புனிதா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.
அதன் படி இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார். இதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த நெல்சன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் மனைவி, குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மயங்கி கிடந்த புனிதா மற்றும் அவரது குழந்தைகள் எவலின், எபின் ஆகியோரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று சுக்ரதால். இங்கு அமைந்துள்ள ஒரு சுடுகாட்டின் வெற்றிட பகுதியில் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அவ்வாறு நேற்று மாலை அந்த குழுவினர் அப்பகுதிக்கு வந்த போது, சுடுகாட்டின் அருகே இருந்த இருக்கையில் ஒரு சிறுமி துடித்துக் கொண்டிருக்க, அருகே ஒரு நபர் நிற்பதை கண்டனர்.
இவர்களை பார்த்ததும், அந்த சிறுமியும் இவர்களை சைகை மூலம் அழைக்க அப்பகுதிக்கு விரைந்த இளைஞர்களிடம், தனது தந்தை தமக்கு விஷமளித்திருப்பதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் சிறுமி தனது மரண தருவாயில் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த இளைஞர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அனைவரும் தீவிரம் காட்ட, அங்கிருந்த அவரது தந்தை தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் தானு என்பதும், அவரது தந்தை பெயர் சுந்தர் சிங் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த விசாரணையிலும், தனது தந்தையே தமக்கு விஷம் அளித்ததாக தானு தெரிவித்துள்ளார். அதுவே அவருக்கு மரண வாக்குமூலமாகவும் அமைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சிறுமி தானுவின் அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் மரணத்துக்கு பிறகு, மகள் தானு மீது பலர் புகார் கூறி வந்ததாகவும், தானுவை சரி செய்ய தனது தங்கையின் வீட்டுக்கு அனுப்பினால் அங்கிருப்பவர்களும் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வேறுவழியின்றி தனது மகளை கொலை செய்துவிட முடிவு செய்து, அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மகள் இறந்தவுடன், அருகில் இருந்த கங்கை நதியில் அவரது உடலை வீசிவிட திட்டமிட்டு, அவள் இறப்பதற்காக காத்திருந்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார். இதையடுத்து, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சுந்தர் சிங்குக்கு தற்போது நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
பெற்ற பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்தும் முழு அதிகாரம் கொண்ட பெற்றோர்களே, சிறு சிறு தவறுகளுக்கு இதுபோன்ற மிகப்பெரிய தண்டனைகளை வழங்குவது சரியான தீர்வாக அமையாது என்பதை அனைவரும் உணரவே வேண்டும்.
பாலக்கோடு அருகே உள்ள சென்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தூர்வாசன். இவருடைய மகன் முனியப்பன் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக திருமணம் செய்து வைக்க கோரி பெற்றோரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட முனியப்பன் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கூ.குட்டமருதஅள்ளி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், எனவே உரிய விசாரணை நடத்த கோரியும் மடாதிபதியின் தம்பி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரூரில் அமைந்துள்ளது சிரூர் மடம். பிரசித்திபெற்ற இந்த மடத்தின் 30-வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி ஆவார். தற்போது 54 வயதான லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மடத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
மரணம் அடைந்த லட்சுமிவரதீர்த்த சுவாமியின் உடல் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் மடாதிபதியின் உடலை சிரூர் மடத்தின் வளாகத்திலேயே வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர். அதைதொடர்ந்து இந்து சம்பிரதாய முறைப்படி அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. அதையடுத்து மடத்தின் வளாகத்திலேயே லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவித்து அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம்? என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி மடாதிபதியின் தம்பி லதாவியா ஆச்சார்யா, இரியடுக்கா போலீசில் பரபரப்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் மரணம் குறித்து அவரது வக்கீல் ரவிகிரண் முருடேஷ்வர் கூறுகையில்‘ மடாதிபதியின் மரணத்தில் சந்தேகமும், மர்மமும் உள்ளது. கடந்த மாதம் அவர் எனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது புத்திகே மடத்தை மட்டும் விட்டுவிட்டு, கிருஷ்ணா மடம் உள்பட மற்ற 6 மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கான பணிகளில் நான் ஈடுபட்டு இருந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்து உள்ளார். அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்‘ என்றார்.
இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அவினாஷ் ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘மடாதிபதி திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகவும், மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும் கூறி அவரை எங்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு எங்களால் முடிந்த வரையில் சிறப்பாக சிகிச்சை அளித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம்(நச்சுத்தன்மை) கலக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அவருடைய ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இதுபற்றி போலீசுக்கு தெரிவித்து உள்ளோம்’ என்றார்.
இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமியும், துணை முதல்-மந்திரி பரமேஸ்வரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிரூர் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அதனால் தேவைப்பட்டால் இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். மடாதிபதியின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விரைவில் முடிவு தெரியவரும்’ என்றனர். #HeadPontiff #LakshmivaraTeertha #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்