என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107582"
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார்.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாதவி தன்னுடைய மகன் கார்த்திக்குடன் ஸ்ரீசைலம் மலை பகுதியில் உள்ள சாட்சி கணபதி கோவிலுக்கு நேற்று வந்தார்.
பின்னர் தான் தயாராக கொண்டு வந்த பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தன்னுடைய மகன் கார்த்திக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.
பின்னர் தனது உறவினர்களுக்கு போன் செய்து எனக்கு கேன்சர் நோய் உள்ளதால் நான் இனி பிழைக்க மாட்டேன். அதனால் நானும் என்னுடைய மகனும் பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதுகுறித்து உறவினர்கள் ஸ்ரீசைலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சின்னய்யா மற்றும் போலீசார் விரைந்த வந்து மயங்கி கிடந்த தாய் மகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களை சோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மனைவி அமுதா, (வயது 40).
இவர்களது மகன் விக்னேஷ், (17). இவரும், மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிமும் நெருங்கிய நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்றிரவு வாசிம் தனது நண்பர்கள் சிலருடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த விக்னேஷை சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க வந்த அவரது தாயார் அமுதாவையும் கையால் தாக்கினர். மேலும் அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
தாக்குதலில் விக்னேஷ் காயம் அடைந்தார். அவர், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமுதா, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அமுதா அளித்த புகாரின் பேரில் மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிம், ஷகில், ஷாஜித், பாரிஸ், அசிம், சல்மான் மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செண்பகராமன்புதூர் மாதவலாயம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(60). இவர்களுக்கு ராணி(40), விஜயா(35) ஆகிய மகள்களும், முருகப்பன்(34) என்ற மகனும் உள்ளனர். இதில் ராணி, விஜயா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.
முருகப்பன், மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். முருகப்பன் சற்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்த தனது தந்தை கணேசனிடம், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு முருகப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கணேசன், முருகப்பனிடம் உன் அவசரத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகப்பன் வீட்டில் இருந்த கோடரியால் தனது தந்தை கணேசனின் பின்பக்க கழுத்தில் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே கணேசன் துடி, துடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், சிவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பூங்காவனம் (63). இவர்களது மகன்கள் பழனி (40), செல்வம் (37). பழனி அரசு பஸ் கண்டக்டராகவும், செல்வம் கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து வழங்கி ‘செட்டில்மென்ட்’ பத்திரப்பதிவு மூலம் எழுதி வைத்தார்.
அதன்பிறகு மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்டு உள்ளனர். இளைய மகன் செல்வம் அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரிக்க உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரியிடம் கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் கண்ணனின் 2 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்திடம் நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் வழங்கினார். கண்ணீர்விட்டு அழுத இருவரும், கலெக்டரிடம் நன்றி தெரிவித்தனர். அப்போது உங்கள் மகன்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு ஆறுதல் கூறினார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை. பெற்றோரை தவிக்கவிடும் மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். நிலம் கிடைத்தால் உழைத்து வாழ்வோம் என்ற முதியவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சட்டப்படி சொத்துக்களை மீட்டு ஒப்படைத்திருக்கிறோம். உரிய பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்பிறகு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த சொத்துக்களை வழங்கும் உரிமை பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.
முதிர்வயதில் இதுபோன்ற துயரத்தில் தவிப்போர் புகார் அளித்தால் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பாலதண்டாயுதபுரத்தை சேர்ந்தவர் முகமது பரூக் (வயது 51). தொழிலதிபரான இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிவந்தான்குளத்தை சேர்ந்தவர் செல்வமதன் (51). இவரும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 5.10.17-ல் முகமது பரூக்கிடம் கடனாக ரூ. 45 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கொடுத்ததில் இதில் ரூ. 5 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனை முகமது பரூக் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் செல்வமதன் மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் ப ணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த செல்வமதன், அவரது மகன்கள் பொன் விக்னேஷ், பொன் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து முகமது பரூக்கை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜெ.எம் 2-வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்திரவிட்டார். இதன்பேரில் போலீசார் செல்வமதன் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருவண்ணாமலை காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் சுரேஷ் (29). பெயிண்டர். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (25).
நேற்று மாலை மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச் செல்வி மாட்டிற்கு பசுந்தீவன புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் தாமரைச் செல்வியை ஆபாசமாக பேசி கேலி-கிண்டல் செய்தனர்.
ஆத்திரமடைந்த ஆறுமுகம் மருமகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்டார். அந்த கும்பல், ஆறுமுகத்தை உருட்டுக்கட்டையால் தாக்கி அடித்து உதைத்தனர்.
தந்தை தாக்கப்படுவதை அறிந்து ஓடி வந்த சுரேஷையும் அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. இதில் ஆறுமுகமும், சுரேஷூம் பலத்தகாயமடைந்தனர்.
சிகிச்சைக்காக 2 பேரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிந்த போலீசார், தந்தை-மகனை தாக்கிய வினோத் (20), நவ அரசு (20), பார்த்திபன் (30), விக்னேஷ் (17), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் சட்டை போடாமல், லுங்கியுடன் இருந்ததை பார்த்து அவரிடம் நேரில் சென்று விசாரித்தார். மேலும் முதியவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை அழைத்து முதியவர் குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிட்டார்.
முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசினார். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எழுதியும் காண்பித்தார். அதில் அவர் பெயர் அலோசியல் பர்னபாஸ்டோபோ எனவும், அவரது சொந்த மாநிலம் ஜார்க்கண்ட் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது குடும்பத்தினரை கண்டு பிடிப்பதற்காகவும், தொடர்பு கொள்வதற்காகவும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக அந்த முதியவர், டேனியல் மெமோரியல் நேசம் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பு மூலம் முதியவர் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்து அவரது மகனை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் முதியவரை அவரது மகனிடம் கலெக்டர் கந்தசாமி ஒப்படைத்தார்.
மேலும் முதியவருக்கு கலெக்டர், புதிய துணி வாங்கி கொடுத்து அதனை முதியவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
வயது முதிர்வின் காரணமாக சில நேரங்களில் நினைவு இழந்ததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். தனது தந்தையை கண்ட மகன் கண்கலங்கி, கலெக்டருக்கு நன்றி தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து சென்றார்.
அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, நேசம் முதியோர் இல்ல பொறுப்பாளர் குளோரி ஆகியோர் உடனிருந்தனர்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் சிமாலியா கிராமத்தில் வசிப்பவர் ராம்சிங் தட்வி. இவரது மகன் ராஜேந்திர தட்வி வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார்.
ராஜேந்திர தட்வி தனது அடிப்படை தேவைக்கு கூட சம்பாதிக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை தினமும் அவரை திட்டிவந்ததாகவும், வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், நேற்று மாலையும் ராம்சிங் தனது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர தட்வி அருகில் இருந்த மரப்பலகையால் தந்தையை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராம்சிங் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, சம்பவம் குறித்து குற்றவாளியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திர தட்வி கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்ற தந்தையை மரப்பலகையால் கொடூரமாக தாக்கி மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
மேலும், குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சிறுவனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இறந்த சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து சிறுவன் இறந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. #Bihar
தேனி அருகே சின்னமனூர், ஓடைப்பட்டி நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சின்னத்தாய் (வயது 63). கன்னிமார் கோவில் பகுதியில் உள்ள தோட்டத்தை சின்னத்தாய் மற்றும் அவரது பேரன் பெயருக்கு பட்டா எழுதப்பட்டது.
ஆனால் அவரது மகன் விஜயன் சொத்து முழுவதையும் தனக்கு தர வேண்டும் என பிரச்சினை செய்து வந்தார். சம்பவத்தன்று விஜயன் தாய் என்று கூட பாராமல் சின்னத்தாயை தாக்கி காயம் ஏற்படுத்தினார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வாணியம்பாடி தாலுகா கலந்திரா கிராமம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பாபு மனைவி ராஜாத்தி என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனை செய்த போது, அவரிடம் 1 லிட்டர் பாட்டிலில் மண்எண்ணை இருந்தது. மண்எண்ணையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், எங்களது மகன், பாலாணங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து, ஊரை விட்டு இழுத்துக் கொண்டு ஓடி விட்டார். மகன் காதலித்த விவகாரத்தில் ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர்.எங்களை கொடுமைப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கொடுத்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் தரை கடை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, போலீசாருடன் சேர்ந்து தரைக்கடைகளை அகற்றினர்.
மீண்டும் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்