என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை"
- தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி, அக்.27-
தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (வயது 38) கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதுகுறித்து வரஞசரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர் அப்துல் கலாம் நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவர் திடீரென குதித்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கூடலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காம நாதன் மகன் பாலா (வயது 34) என்ற கூலித்தொழிலாளி என தெரிய வந்தது.
மேலும் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என தெரியவில்லை. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.
- வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் அடுத்துள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது.
குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மணிமேகலை ஆண்டிப்பட்டி பூக்காரத் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று அங்கு வந்த கண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
- இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
ஈரோடு, டிச. 9-
ஈரோடு, சடையம்பாளையம் ரோடு, முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (66) தொழிலாளி.
கடந்த அக்டோபரில் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக பெரியசாமி பல்வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- இதனால் விரக்தி அடைந்த பெரியசாமி எலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு மயங்கினார்.
ஈரோடு:
ஈரோடு ரங்கம் பாளையம் இரட்டை பாலி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47). இவர் சிப்ஸ் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதனால் விரக்தி அடைந்த பெரியசாமி வீட்டில் எலிதொல்லைக்காக வைத்திருந்தஎலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு மயங்கினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய சாமிஇறந்து விட்டார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
- சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார்.
- மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீல்வாணி வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து(58). கூலி தொழிலாளி.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
தங்கமுத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவி உடன் கணவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்கமுத்து அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமுத்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- செல்வம் பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (58). கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
உடனடியாக செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
- டந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார்.
- மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். (வயது 32). கூலி தொழிலாளி. அவரது மனைவி தீபா. கடந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார். இதனால் மனமுடைந்த சாமிநாதன் திடீர் என வீட்டை விட்டு மாயமானார். இரவு முழுவதும் தனது கணவர் வீடு திரும்பாததால் தீபா அதிர்ச்சி அடைந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் தீபா தனது கணவரை தேடினார். எங்கு தேடியும் கிைடக்கவில்லை.
இன்று காலை அந்த பகுதியில் உள்ள விைள நிலத்தில் சாமிநாதன் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார ணையில் சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
- மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
- இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, கள்ளுக்கடை–மேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார்
ஈரோடு,
ஈரோடு, கள்ளுக்கடைமேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகன் தன்னிடம் பேசாமல் சோகமாக சென்றதால் சந்தேகம் அடைந்த தாய் மகன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
- பலமுறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சார பாலம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் துர்கா ஆஞ்சநேய பிரசாத் (வயது 42). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நாகமணி. தம்பதிக்கு பிந்து (15), பார்கவி (13) என்ற 2 மகன்கள் இருந்தனர். நாகமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு இறந்தார். இதனால் தனது மகள்களை துர்கா ஆஞ்சநேய பிரசாத் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் துர்கா ஆஞ்சநேய பிரசாத்தை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த துர்கா ஆஞ்சநேய பிரசாத் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்ததால் விரக்தி அடைந்து சோகத்துடன் காணப்பட்டார். நேற்று காலை தனது தாய் வீட்டிற்கு சென்ற துர்கா ஆஞ்சநேயர் பிரசாத் தாயிடம் டீ வாங்கி குடித்தார். தாயிடம் எதுவும் பேசாமல் சோகமாக வீட்டிற்கு திரும்பினார்.
மகன் தன்னிடம் பேசாமல் சோகமாக சென்றதால் சந்தேகம் அடைந்து மகன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார்.
போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது துர்கா ஆஞ்சநேயர் பிரசாத் ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் பணமாக தொங்கினார். அவரது 2 மகள்கள் மற்றொரு அறையில் பலமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த விசாகப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்றதால் அவமானம் அடைந்து 2 மகள்களை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.