என் மலர்
நீங்கள் தேடியது "முளைப்பாரி"
- தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- தேங்காய் உடைத்து பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மறவர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல்வேறு வகையான போட்டியிலும் நடைபெற்றது.
மேலும் செல்லியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடலாடி ரோட்டில் உள்ள முலைக்கொட்டும் திண்ணையில் இருந்து காந்தி சிலை பஸ் நிலையம் வழியாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் கோவிலுக்கு முளைப்பாரியுடன் வந்தனர்.
பின்பு செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால் பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முளைப்பாரியை சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை கடலாடி ரோட்டில் உள்ள வசிக்கும் மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
- 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடந்தது. இதில் 300-க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் பாட்டு பாடி, கும்மி அடித்தனர். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.
- ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
- இதில் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் பச்சமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல குழந்தைகள், பெண் கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்க கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பொட்டல்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
- பக்தர்கள் முக்கிய வீதி வழியாக கரகம் காவடி பால்குடம் கோவிலை வந்தடைந்தனர்.
- பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு தீராதனை காண்பிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் (மே) 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை யொட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாலையில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் வீதிஉலா தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள்பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து செய்திருந்தனர்.
- நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு.
- அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.
அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.
நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம். அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.
முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.
- பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள்.
- ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள்.
நம்மூர் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றால் திருவிழாக்களில் பெண்கள் முளைப்பாரி சுமந்து வலம் வருவதை பார்த்திருப்போம். பெரும்பாலும், நவதானிய விதைகளை கொண்டு தான் முளைப்பாரி அமைப்பார்கள்.
கன்னிப்பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி தூக்கினால் நல்ல கணவன் கிடைக்கும், குடும்பத்தில் செல்வம் பெருகும், அம்மன் அருளால் கொடிய நோய்கள் நீங்கும் என்று பலதரப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் ஊர்புற வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த முளைப்பாரி எடுக்கும் சடங்கிற்கு உண்மையான காரணமே வேறு. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
விவசாயத்திற்கு பயிரிடும் விதைகளை நேரடியாக விளை நிலத்தில் விதைக்காமல் தனியாக வீட்டிலேயே ஒரு கூடையில் மட்கிய குப்பைகளோயிட்டு இளம்வெயில் படும்படி வைப்பார்கள். பத்து நாட்கள் தண்ணீர் தெளித்து விதையின் வளர்ச்சியை பார்த்தனர்.
இவ்வாறு முன்கூட்டியே விதைகளின் முளைப்புத்திறன், வளர்ச்சித்திறன் ஆகியவற்றை பரிசோதனை செய்து பிறகு நிலத்தில் விதைக்கும் வழக்கம் கொண்டார்கள். அதனால், ஏக்கர் கணக்கில் விதைத்து நஷ்டமடையாமல் காத்துக்கொள்ள முடிந்தது.
இதுவே பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள். அதில் ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டின் மகசூலை தோராயமாக கணித்தார்கள்.
இப்படி ஒரு நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது தான் இந்த முளைப்பாரி. இன்று அது முழுக்க முழுக்க வழிபாடு சம்பந்தபட்டதாகி விட்டது.
- விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
- சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. 8-ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து 9-ம் நாளில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. 10-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டி விழா நிறைவு பெற்றது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
- ஆடி மாதம் மிக சிறப்பானது.
பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது
அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன
வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்
பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்
ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்
முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை
மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது
முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.
- முளைப்பாரி வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சாமி வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர்.
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 146-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு முதல் நாள் அம்மனுக்கு முத்து பரப்புதல் நடந்து அபிஷேகம் ஆராதனை காப்புக் கட்டுதல் நடைபெற்றது. மேலும் பூச்சொரிதல் விழா நடந்தது. பால்குடம், அக்னிசட்டி, காவடி எடுத்து வந்தனர்.
ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வானவேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. காலை சக்திகரகம், விளையாட்டு கரகம் மற்றும் முளைப்பாரி வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், மதச்சார்பற்ற ஜனதா கட்சி மாநிலபொதுச்செயலாளர் செல்லப்பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி தலைவர் மலையாளம், விழா கமிட்டியினர் ரங்கராஜன், ரவி, அய்யப்பன், ராஜேந்திரன், நடராஜன், மூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- திருவிளக்கு பூஜை, தங்கும் முளைப்பாரி, பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்தனர்.
- முச்சந்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலத்தில் மகாசக்தி முச்சந்தி மாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு 146-வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் அம்மனுக்கு முத்து பரப்புதல் நடந்து அபிஷேகம், ஆராதனை காப்புக்கட்டுதல் நடந்தது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. திரு விளக்கு பூஜை, தங்கும் முளைப்பாரி, பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்தனர். பூச்சொரிதல் விழா நடந்தது. காலை பால்குடம், அக்னி சட்டி, காவடி எடுத்து வந்த னர். பின்னர் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்குதெரு, தெற்குதெரு, மந்தை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தார். ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வான வேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம், விளையாட்டு கரகம் மற்றும் முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இரவில் கிராமத்தினர் சாமி வேடமிட்டு வண்டி வேஷ வலம் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில்
எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், மதச்சார்பற்ற ஜனதாகட்சி மாநிலபொ துச்செயலாளர் செல்லப் பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், விழா கமிட்டினர் ரங்கராஜன், ரவி, அய்யப்பன், ராஜேந்தி ரன், நடராஜன், மூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் திருமுருகன் ராஜபாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, காடுபட்டி சப்- இன்ஸ்பெக் டர் குபேந்திரன், போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மதநல்லிணக்க முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தேவேந்திரர் நகரில் அமைந்துள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோவில் 29-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் இரவு ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து முளைப்பாரி வளர்த்தனர். செவ்வாய்க் கிழமை இரவு கரகம், அக்னி சட்டி எடுத்தும், புதன் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையடுத்து ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து பின் தேவேந்திரர் நகர் அம்மன் சன்னதியில் தொடங்கி முஸ்லீம் தெரு வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா வினுள் நுாற்றுக்கணக்கான முளைப்பாரிகளை சுமந்து சென்ற பக்தர்களுக்கு, ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.
தர்காவின் முன்புறம் பாரிகள் இறக்கி வைக்கப் பட்டு, கும்மி அடிக்கப் பட்டது. 3 முளைப்பாரிகளை தர்காவின் உள்ளே மக்பரா அமைந்துள்ள இடத்தில் வைத்து உலக நன்மைக் காகவும், நல்ல மழை வளம் வேண்டியும் (பாத்தியா) சிறப்பு துஆ ஓதினர்.
பின்னர் தர்காவை 3 முறை முளைப்பாரி சுமந்து வலம் வந்தனர். முடிவில் சின்ன ஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரிகளை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடு கள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
- வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் முளைக்கொட்டு உற்சவ விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கும்மி ஒயிலாட் டம் ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு வார காலமாக நடைபெற்றது. கோவி லில் இருந்து வழுதூர் பெரிய ஊரணி பகுதியில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குலவையிட்டு பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வழுதூர் கிராமத்தை சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து முளைப்பாரி களையும் பெரிய ஊரணி கரையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதே போல வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம் காத்தான், பால்குளம், படவெட்டி வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்ற முளைக்கொட்டு உற்சவ விழா நடை பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.