என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகள் மூடல்"
- பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது.
- ஜம்மு காஷ்மீரிலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்படுகிறது.
புதுடெல்லி:
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.
இந்நிலையில், முன் எச்சரிக்கை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு 3 நாள் மூடப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.
இதேபோல், ஜம்மு காஷ்மீரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
- மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
லண்டன்:
பிரிட்டனில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் தொடங்க உள்ளன.
இந்தநிலையில் அங்கு பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எனவே கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் அப்பள்ளிகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மந்திரி கில்லியன் கீகன் கூறினார்.
- மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
- சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.
அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
- காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் விவசாய கழிவுகளை எரிக்க தாய்லாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பாங்காக்கில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகின் சமீபத்திய மிகப்பெரும் பிரச்சனையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் எரிந்து வருவதால் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்தவகையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
இதற்கிடையே ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் 7-வது இடத்தை பிடித்தது. அண்டை நாடான வியட்நாம், கம்போடியாவில் உள்ள நகரங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது அங்கு வசிப்பவர்கள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் விவசாய கழிவுகளை எரிக்க தாய்லாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை மந்திரி அனுடின் சார்ன்விரகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் மாணவர்களின் நலன் கருதி தலைநகர் பாங்காக்கில் 352 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கும்படி தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் தலைநகர் பாங்காக்கில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை குறைக்க அனைவரும் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அடுத்த ஒரு வாரத்துக்கு பஸ், ரெயில் போன்றவற்றில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
- கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி
- பள்ளி உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு
வேலூர்:
தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பு சார்பில் இன்று காலை மாநில அமைப்பு செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு போலீசார் தாக்கப்பட்டதற்கும் மாணவியின் இறப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளியை சூறையாடியும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து தீய சக்திகள் ஒன்று கூடி கட்டவிழ்த்து நடத்திய வன்முறை சம்பவங்கள் மனதை பதை பதைக்க வைக்கிறது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற தாக்குதல் நடத்தும் தீய சக்திகளுக்கு எதிராக குற்றம் பாயும் வண்ணம் சட்டங்கள் இயற்ற வேண்டும். தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் மற்றும் பள்ளி சொத்துகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் இன்று 40 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
- தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆக உள்ளது.
இம்பால் :
மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், நேற்று (செவ்வாய் கிழமை) 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 15 கேர் குணமடைந்து சென்றுள்ளனர் என மணிப்பூர் சுகாதார சேவை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பு காரணமாக காஷ்மீரின் எல்லையோரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதேபோன்று பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமான சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed

பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குலு மற்றும் கின்னார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், கின்னார், குலு மற்றும் காங்ரா மாவட்டங்களில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #HimachalRains #Schoolsclosed
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
கடைசியாக நேற்று முன்தினம் காபூலில் உள்ள தனியார் டியூஷன் மையம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
இப்படி கல்வி நிறுவனங்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்பு காரணங்களையொட்டி அவை மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி வாயிஸ் அகமது பர்மாக் கூறும்போது, “கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, இப்போது நமது நாடு சந்தித்து வருகிற மிக பயங்கரமான தாக்குதல்கள் என்றுதான் கூற வேண்டும்” என்று குறிப்பிட்டார். #Afghanistan #School #tamilnews