என் மலர்
நீங்கள் தேடியது "பேருந்து விபத்து"
- தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்க நடவடிக்கை
- கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி மீட்பு.
மேட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள லுகோ மற்றும் வீகோ நகரங்களுக்கு இடையே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
பாலத்தின் தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்திருப்பதைக் கவனித்த அந்த வழியே சென்றவர், பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது குறித்து அவசர சேவை பிரிவினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மீட்பு படையினர் தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆற்று நீரோட்டம் மற்றும் கனமழை காரணமாக உடல்களை மீட்கும் முயற்சி தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சண்டிகர்-மணாலி சாலையில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
- டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிலாஸ்பூர்:
டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கமலா நேரு கல்லூரி மாணவிகள் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். சுமார் 35 மாணவிகள், 6 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேர் பேருந்தில் பயணித்தனர். அவர்களின் பேருந்து பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று விபத்துக்குள்ளானது.
சண்டிகர்-மணாலி சாலையில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவி உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பிலாஸ்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேருந்தை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்ததும் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது
- பேருந்தில் பயணித்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள புனே-மும்பை நெடுஞ்சாலையில் இன்று பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஷிங்ரோபா கோவில் அருகே இன்று அதிகாலை விபத்தில் சிக்கி உள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன் மலையேற்ற குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். அந்த பேருந்தில் பயணித்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். விபத்து குறித்து கோபோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
- பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சால்ட் மலையில் சென்றபோது பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், பிரேக் செயலிழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- அரசு பேருந்து- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்
- தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சியில கலந்து கொண்டு திரும்பியவர்கள் பயணம்
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் திகாபஹண்டி அருகே அம்மாநில அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசு பஸ் ராயகடா என்ற இடத்தில் இருந்து புவனேஸ்வர் சென்று கொண்டிருந்தது. அப்போது பெர்ஹாம்புரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பஸ் மீது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பலர் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள். தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
- பயணம் செய்த 33 பேரில் 26 பேர் உடல் கருகி பலி
- 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை பஸ் விபத்தில சிக்கி 26 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றது. அம்மாநிலத்தை உலுக்கும் வகையில் நடந்துள்ள விபத்தின் விவரம் வருமாறு:-
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு நேற்று மாலை பயணிகள் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. தனியாருக்கு சொந்தமான இந்த சொகுசு பஸ்சில் 33 பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் அந்த சொகுசு பஸ் சம்ருத்தி-மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. புல்தானா என்ற இடத்தில் அந்த பஸ் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய அந்த பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கம்பத்திலும், சாலை நடுவில் உள்ள தடுப்பிலும் அடுத்தடுத்து மோதியதால் உருண்ட சொகுசு பஸ்சில் அடுத்த விநாடியே தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்தபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். பஸ் கவிழ்ந்ததில் காயம் அடைந்த அவர்கள் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் அவர்களை சுற்றி தீப்பிடித்துக்கொண்டது.
சொகுசு பஸ்சில் கதவு மூடப்பட்டு இருந்ததால் அதை திறக்க இயலாமல் போய்விட்டது. கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு பயணிகள் தப்ப முடியாமல் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் பஸ் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை அணைப்ப தற்கு அவர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடிய பிறகுதான் தீயை அணைக்க முடிந்தது.
அதற்குள் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 33 பயணிகளில் 26 பயணிகள் கருகிய நிலையில் பஸ்சுக்கு உள்ளேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
7 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பஸ் டிரைவரும் காயங்களுடன் உயிர் தப்பி இருந்தார். அவர்கள் அனைவரும் புல்தான மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். டிரைவரிடம் விசாரணை நடத்திய போது தான் டயர் வெடித்து பஸ் தடுப்புகளில் மோதி தீப்பிடித்த விவகாரம் தெரிய வந்தது.
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதிரிச்சி வெளியிட்டார். பஸ் விபத்தில் பலியான 26 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
- விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார்.
- விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் சொகுசு பேருந்து தீப்பிடித்தது. பேருந்துக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் கருகி பலியானார்கள். இந்த கோர விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார். இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இன்று புல்தானாவில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்க உள்ளோம். சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல.
விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.
- விபத்தில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். அப்போது, செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர்.
"முதற்கட்ட எண்ணிக்கையின்படி, 27 பேர் இறந்தனர் மற்றும் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்தார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
- பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
- காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, பொக்ரான் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக சங்கரா காவல் நிலையத்தின் (ஜெய்சால்மர்) உதவி சப் இன்ஸ்பெக்டர் கைலாஷ் சந்த் கூறினார்.
காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் உள்ளூர் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விபத்து குறித்து, ஜோத்பூர் ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறுகையில், "ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக ஜோத்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். ஆனால் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்ட ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார்" என்றார்.
- சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டயமர் மாவட்டத்தில் உள்ள தளிச்சி பகுதிக்கு அருகே காரகோரம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் கண்டறிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
- விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததால் விபத்து.
வங்காளதேசத்தில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாஷர் ஸ்மிருதி பரிபாஹன் என்ற பேருந்து நேற்று காலை 9 மணியளவில் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து புறப்பட்டது. அப்போது 10 மணியளவில் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டாவில் உள்ள சாலையோர குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததே விபத்துக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
17 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- லாரியை முந்தி செல்ல முயன்றபோது விபத்து
- காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
புல்தான் மாவட்டத்தின் மல்காபுர் நகரில் உள்ள மேம்பாலத்தில் அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் ஒரு பேருந்தில், ஹிங்கோலி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நாஷிக் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, லாரியை முந்தி செல்ல முயன்றபோது, ஹிங்கோலி நோக்கி சென்ற பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.