என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எச்.ராஜா"
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை இழிவாக பேசி வரும் எச்.ராஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செய லாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.
மாநில முதன்மை செயலாளர் பாவரசு, மேலிட பொறுப்பாளர் சிவசெல்லபாண்டியன், தொகுதிச் செயலாளர் தம்பிராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி னார்கள்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அதன்பிறகு எச்.ராஜா உருவபொம்மையை எரித்தனர்.
இதன் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்ததாக மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #VCK #HRaja
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குறித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட செயலாளர்கள் செல்வம், வி.கோ.ஆதவன், செல்லத்துரை, அம்பேத்வளவன், அன்புச்செழியன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திடீரென அவர்கள் கோயம்பேடு 100 அடி சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பா.ஜ.க.விற்கு எவ்விதத் தகுதியும் இல்லை.
தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக் கட்சியாக ஒதுக்கித்தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிற தென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத்தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது.
வடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.ராஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும். அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Seeman #HRaja #Thirumavalavan
படித்ததில் பிடித்தது.
— H Raja (@HRajaBJP) November 7, 2018
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சித்து பேசினார்.
இதனை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி மற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 18-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம், எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர்.
அதில், அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் இன்று காலை காஞ்சீபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக (294-3ன்) படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja #BJP
வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலைய துறையில் பணியாற்றும் பணியாளர்களையும், அவர்களது வீட்டுப் பெண்களையும் மிக தரக்குறைவாக பேசியதாக கூறி சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பணியாற்றி வரும் கோவில் பணியாளர்கள் தங்களது அலுவலக பணியை புறக் கணித்தனர்.
மேலும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியாளர்கள் பணிகளை புறக்கணித் தாலும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. #HRaja #BJP
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது போலீசார் , கூட்டம் நடத்த தடை விதித்ததால் எச்.ராஜா ஆவேசமடைந்து காவல்துறை மற்றும் ஐகோர்ட்டை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவரது ஆவேச பேச்சு இணைய தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எச்.ராஜா நீதிமன்றம் குறித்து விமர்சித்ததை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று வக்கீல் சங்க தலைவர் சங்கர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. #HRaja #BJP
If #TNPolice which shot and killed protestors simply watches this rabid idiot @HRajaBJP as he abuses the High Court, police, minorities and most ironically Hinduism, then it shows what they stand for! This #HindutvaTerrorist should be shown the law and the constitution. #Shamehttps://t.co/vhYh7Cft7U
— Siddharth (@Actor_Siddharth) September 16, 2018
சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று அன்னதானம் நடந்தது.
இதனை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து மதத்திற்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தவிர்க்க வேண்டும். மத ஊர்வலத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.
உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தி என் தலைமையின்கீழ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடைப்பெறுகிறது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்லி தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். #BJP #HRaja
நெல்லை:
நெல்லையில் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இதை அமல்படுத்தும் முன்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று கூறி தான் ஜி.எஸ்.டி.யை அமுல்படுத்தினோம். ஆனால் இப்போது தமிழக அரசுக்கு மறைமுகமாக 6 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.
எனவே மாநில அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கோர்ட்டில் தங்களது நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறியுள்ளது வருத்த மளிக்கிறது. சிலைகள் மட்டுமல்ல அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களே மாயமாகியுள்ளன.
அறநிலையத்துறைக்கு 38 ஆயிரத்து 635 கோவில்களும், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருந்தன. தற்போது 2 ஆயிரம் கோவில்கள் வரை காணவில்லை. மதுரை உயர்நிதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களின் சொத்துகளை மீட்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தி இந்து ஆலய மீட்பு குழு சார்பாக இம்மாத இறுதியில் சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அடுத்த 3 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சரியான பாதையில் கொண்டு செல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #hraja #gst #tamilnadustatue
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து மூடியதற்கு காரணம் தமிழக அரசு தான். ஜி.எஸ்.டி. காரணம் இல்லை. உலகத்திலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற 3 மாதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆண்டு கால காவிரி விவகாரத்தில் துரோகம் செய்து தி.மு.க. வும், காங்கிரசும் தான்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Seeman #Vaiko
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்