என் மலர்
நீங்கள் தேடியது "அய்யப்ப பக்தர்கள்"
- ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
- கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
திருப்பூர்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
மண்டல பூஜை
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
சரண கோஷம் முழங்க மாலை அணிந்த பக்தர்கள்
தமிழகத்தில் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் குருசாமிகள் முன்னிலையில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திருப்பூர் மாநகரில் அய்யப்பன் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
- மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம்
- போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி,:
அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் மாலை அணிய வந்த அய்யப்ப பக்தர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண வடிவ பூங்கா முன்பு நிறுத்தி வைத்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரைக்கு சென்றனர்.
இதற்கிடையில் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள் போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவு தலைவரும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலருமான சி.எஸ்.சுபாஷ் தலைமையில் பா.ஜ.க.வினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் அய்யப்ப பக்தர்களும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.
- பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
- கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு:
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைகளுக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை 1-ந் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.
இதேபோல் கோபி பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.
- சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
- சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம், ஹூப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஈரோடுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு காலை 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.
கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும். இந்த ரெயில் போத்தனூரில் நள்ளிரவு 1 மணிக்கும், திருப்பூரில் 1.50 மணிக்கும், ஈரோடுக்கு 3 மணிக்கும் செல்லும்.
ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி ஹூப்ளியில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லத்துக்கு சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.
கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி கொல்லத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 15-ந் தேதி இயக்கப்படுகிறது. கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07130) கொல்லத்தில் வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்ட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு கோவைக்கும், 1.20 மணிக்கு திருப்பூருக்கும், 2.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 3.25 மணிக்கு சேலத்துக்கும் சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று சேரும்.
ஆந்திர மாநிலம் நரசப்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (07131) நரசப்பூரில் வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு சேலத்துக்கும், 9.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 11.20 மணிக்கு கோவைக்கும் சென்று இரவு 7.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.
கொல்லம்-நரசப்பூர் சிறப்பு ரெயில் (07132) வருகிற 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோவைக்கும், 5.05 மணிக்கு திருப்பூருக்கும், 6 மணிக்கு ஈரோட்டுக்கும், 7 மணிக்கு சேலத்துக்கும் சென்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு நரசப்பூர் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு
- 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது.
இதையடுத்து பேச்சிப்பா றை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதை ஆறு, வள்ளியாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக திற்ப ரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது.
தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் நிறுத்தப்பட்டுள் ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறைந்ததையடுத்து திற்ப ரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவி யில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலை மோதி வருகிறது.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாப் பயணி கள் சபரிமலையில் தரிச னம் செய்துவிட்டு கன்னியா குமரிக்கு வருகை தர தொடங்கியுள்ளார்கள். கன்னியாகுமரிக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் திற்பரப்பு அருவிக்கு செல்கிறார்கள். அங்கு செல்லும் அய்பப்ப பக்தர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.இதனால் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலைமோதி வருகிறது.
விடுமுறை தினமான இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காலை மாலை நேரங்களில் சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.
- சபரிமலை சீசனையொட்டி மதுரைக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
- கோவில்கள்-கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தும் இடத்தில் காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்.
....................
மதுரை
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போதும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வார்கள். இதனால் சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ள ஊர்களில் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.
மதுரைக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி, மாசி வீதிகளில் காலை முதல் இரவு வரை அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள கடைகளில் சுவாமி படங்கள், பூஜை பொருட்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மதுரையில் உள்ள கடைகளில் சபரிமலை சீசன் விற்பனை அதிகரித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பஸ், வேன், கார் உள்ளிட்ட கனரக வாகனங்களில் வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எல்லீஸ் நகரில் உள்ள கோவில் வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.
தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கி இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. அந்த பகுதியில் உள்ள சாலையில் நாள் முழுவதும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் தோன்றி உள்ளன.
இதே போன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
- டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சபரிமலையில் விளக்கு பூஜையை மானாமதுரை அய்யப்ப பக்தர்கள் நடத்தினர்.
- விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலைச் சேர்ந்த குருசாமிகள் சோடா மணி, அணைக்கட்டு பாண்டி ஆகியோர் தலைமையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டனர்.
இவர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்த பின்னர் சன்னிதானம் அருகே தாங்கள் கொண்டு சென்ற இருமுடிகளை பிரித்து அதில் இருந்த காமாட்சி விளக்குகளை எடுத்து வரிசையாக வைத்து விளக்குகளுக்கு முன்பு அமர்ந்து விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர்.
அதன் பின்னர் அய்யப்பன் புகழ் பாடும் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.
இது குறித்து குருநாதர்கள் அணைக்கட்டு பாண்டி, சோடா மணி கூறுகையில், உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் சுபிட்சமாக வாழவும், கொடும் நோய்தொற்றுகள் அழியவேண்டியும் முதல் முறையாக சபரிமலையில் எங்கள் குழு சார்பில் விளக்கு பூஜை நடத்தினோம் என்றனர்.
- ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
- சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி ;
இந்தியாவின் தென்கோடிமுனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.
மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.
இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.
ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம் விடப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் வசதி செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
- பக்தர்கள் கடைகளில் துளசிமணிமாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே வாங்கினர்.
- இன்று முதல் மார்கழி 11-ந்தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருடந்தோறும் செல்வது வழக்கம். குறிப்பாக மகர ஜோதிக்கு லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் செல்வார்கள். அதன்படி கார்த்திகை மாத பிறப்பான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இ்ன்று காலை திருப்பூரில் உள்ள அய்யப்பன் ேகாவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கடைகளில் துளசிமணி மாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே கடைகளில் வாங்கினர்.
விரதம் இருக்கும் அய்யப்பபக்தர்கள் அவரவர் வசதிக்கு தகுந்தவாறு ஒரு மண்டலம் (41 நாட்கள்), அரைமண்டலம் (21 நாட்கள்)விரதமும், இன்னும் சிலர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மகரஜோதி வரைக்கும் 2 மாதமும் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். சபரிமலைக்கு செல்பவர்கள் கோவில்களில் குருசாமியின் மூலம் துளசிமணி மாலைகளை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். இன்று முதல் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் இருவேளை குளித்து அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று அய்யப்ப சரணகோஷமிட்டு வழிபடுவார்கள்.
இதேப்போல் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ேகாவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராக மாலை அணிவித்துக் கொண்டனர். மண்டலகால பூஜையை முன்னிட்டு இன்று முதல் மார்கழி 11-ந்தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன், சபரிமலை செல்வதற்காக விரதம் மேற்கொண்டு கருப்பு மற்றும் புளு கலரில் வேட்டி துண்டுகளை கட்டிக்கொண்டனர். மேலும் துளசி மற்றும் சந்தன மாலைகளை அணிந்து கொண்டனர். இக்கோவிலில் கார்த்திகை 1-ந்தேதியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.
- மதுரை கோவில்களில் சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
- குருநாதர்கள் மூலம் துளசிமாலை அணிந்து கொண்டனர்.
மதுரை
கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அய்யப்ப னுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் திர ளான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப் பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் தலைமை குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள கோவிலுக்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேபோல் புதூரில் உள்ள அய்யப்பன் கோவி லிலும் திரளான பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். காளவாசல் அய்யப்பன் கோவில், ரெயில்வே காலனியில் உள்ள அய்யப்பன் கோவில், விளாச் சேரியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகர்மலை யில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் பழமு திர்ச்சோ லை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்ட னர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், நேதாஜி ரோட்டில் உள்ள தண்ட பாணி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். சிலர் குரு நாதர்கள் மூலம் தங்கள் வீடுகளிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
முன்னதாக நேற்று மதுரையில் உள்ள கடை வீதிகளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காவி, கருப்பு, நீல நிற ஆடைகள், துளசி மாலை வாங்க குவிந்தனர்.
- கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
- ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
கோபி:
கேரள மாநிலம் சபரி மலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விள க்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலை க்கு சென்று ஐயனை தரி சனம் செய்வார்கள்.
இதை யொட்டி தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ங்களில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதையொட்டி ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் ஐயப்பன் கோவில், கோபி ஐயப்பன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமார சாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோ வில் மற்றும் சுற்று வட்டார கோவில்களில் இன்று அதி காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதே போல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று காலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இவர்கள் துளசி மணி அல்லது ருத்ராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் கொண்டதாக வாங்கி அவ ற்றுடன் அய்யப்பன் திருவுரு வப்படத்தை இணைத்து அணிந்து கொண்டனர். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொண்டனர்.
இதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில் மாலை அணிந்து கொள்வார்கள். சன்னிதானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்பாக குறை ந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கு ம்படி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர்.
ஐயப்ப பக்தர்கள் தின மும் இரு வேலைகளில் குளித்து அய்யப்பன் திரு வுருவப்படத்தை வணங்கி தினமும் ஆலய வழிபாடு மற்றும் பஜனைகளில் கலந்து கொண்டு ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.