என் மலர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"
- கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
- தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
மும்பை :
நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மந்திரி பதவி வகித்த நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் சிறப்பு கோர்ட்டில் நவாப் மாலிக் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதில், தன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேநேரம் அவரது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாகத்துறை, "முன்னாள் மந்திரி நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அசீனா பார்க்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்ற கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே அன்று ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையில், முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தனது வக்கீல் மூலமாக பி.யி.டி- சி.டி. ஸ்கேன் எடுக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஸ்கேன் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாட்டை கண்டறிய உதவும் சோதனை ஆகும். இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா.
- இவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரிடம் கடந்த இரு மாதங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் சௌமியா சௌராசியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் பதிவு செய்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
- விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.
- சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மும்பை அமலாக்கத்துறையினர் விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை, மும்பை, பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் நடந்த சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்றத்தத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
- அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.
- டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிற டெல்லியில் மதுபான கொள்கையில் மாபெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்கி சலுகைகளை தாராளமாக அளித்து, லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஊழலில் மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதுடன், அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டது.
இந்த ஊழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா பெயரும் அடிபடுகிறது. குறிப்பாக சரத் ரெட்டி, கே கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உள்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் என்பவர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் கவிதாவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமாக டெல்லி, மும்பையில் உள்ள விடுதிகள், வாகனங்கள். வங்கி டெபாசிட்டுகள் என ரூ.76 கோடியே 54 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டது.
இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-
* அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.
* முடக்கப்பட்ட சொத்துகள், ஆத் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் விஜய் நாயர், ஐதராபாத் மது தொழில் அதிபரும், ராபின் மதுபான நிறுனத்தின் பங்குதாரருமான அருண் பிள்ளைக்கு சொந்தமானவை ஆகும்.
இந்த அருண்பிள்ளை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, மதுபான தொழில் அதிபர் சமீர் மஹந்த்ரு, அவரது மனைவி கீதிகா மஹந்த்ரு மற்றும் அவர்களது நிறுவனமான இண்டோஸ்பிரிட் குழுமம் ஆகியவற்றினை குறிக்கிற சவுத் குரூப்பின் பிரதிநிதி ஆவார்.
* டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இவர் அப்ரூவர் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. புட்டி ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான நிறுவனத்தின் இயக்குனர் அமித் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
- சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது.
- முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தின.
இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. நேற்று நடந்த விசாரணையை அடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
- கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
- மனுவை பரிசீலித்த கோர்ட்டு சிவசங்கரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த 12-ந் தேதி முதல் அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு செய்தது.
இந்த மனுவை பரிசீலித்த கோர்ட்டு சிவசங்கரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
- விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜரானார்.
- வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது.
விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜராகினார். அவரது வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிபவ் குமார் உள்ளிட்ட 36 பேர் மீது ரூ.1000 கோடி பணமோசடி தொடர்பான ஆதாரங்களை அழிக்க 170 செல்பேசி அழைப்புகள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுகிறது" என்று தெரிவித்தனர்.
- கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரன் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
- ரவீந்திரனிடம் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் லைப் மிஷன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரன் நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
- மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம் என கெஜ்ரிவால் காட்டம்
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக வெளியே வர முடியாத நிலை உள்ளது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மணீஷ் சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. சிபிஐ சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பணமும் சிக்கவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. விசாரணை முடிந்து மணீஷ் நாளை விடுவிக்கப்பட்டிருப்பார். இந்நிலையில் இன்று அமலாக்கத்தறை அவரை கைது செய்தது. ஒவ்வொரு நாளும் புதிய போலி வழக்குகளை உருவாக்குவதன் மூலம் மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்வார்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், மதுபான கொள்கையை திரும்பப் பெற்றிருக்காது என்று பாஜக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில்வே பணியிட ஒதுக்கீட்டில் மோசடி செய்து நிலம் பெற்ற வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவியிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பீகாரில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
- ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது அவரிடம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
மணீஷ் சிசோடியா விசாரணைக் காவலுக்கு அனுப்பப்பட்டதால், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
- கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
- கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ந்தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வீட்டு முன்பு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அதே போல் அமலாக்கத்துறை அலுவலகம் அருகேயும் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
காரில் இருந்து இறங்கிய கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.