என் மலர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து"
- அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தானுக்கு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
- ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோல்வியடைந்து நியூசிலாந்து வெளியேறியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளை தவிர மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் அனுபவம் இல்லாத அணிகள்.
நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு ஓரளவு அனுபவம் உள்ளது.
கனடா, அமெரிக்கா, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் பொன்ற அணிகள் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன.
முன்னணி அணிகளிடம் இந்த கத்துக்குட்டி அணிகள் என்ன பாடுபடப்போகிறதோ என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் மிகப்பெரிய அணிகளுக்கு இந்த அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அத்துடன் முக்கியமான அணிகள் வெளியாக காரணமாக அமைந்தன.
"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்திருந்தன. இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை அமெரிக்கா சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதே பிரிவில் சற்று கூடுதல் அனுபவம் வாய்ந்த அயர்லாந்து அணியை கனடா வீழ்த்தியது.
குரூப் "பி" பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்படும். நமீபியாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் இங்கிலாந்து வெளியேறிவிடும்.
குரூப் "சி"-யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
குரூப் "டி"-யில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை தோல்வியை சந்தித்தது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. வங்காளதேசம் கடைசி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தினால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேவேளையில் தோல்வியடைந்து, இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து வெற்றி பெற்றால் சிக்கல் ஏற்படும். ரன்ரேட் அடிப்படையில் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறே வாய்ப்புள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவுதான். நேபாளத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்றதனாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததாலும், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்ததாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் சுற்றோடு உலக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை போல்ட் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
- நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. எனவே அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.
இதையடுத்து, நியூசிலாந்து அணி 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சவுதி 3 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட், இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என அதிரடியாக அறிவித்தார்.
எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே போல்ட்டின் கேரியரில் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.
- இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
- மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தரோபா:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மழை நின்றதால் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இதுவே தனது கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை என்று அறிவித்து இருப்பதால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப நியூசிலாந்து அணி தீவிர முனைப்பு காட்டும்.
- பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
- டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 39-வது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
பப்புவா நியூ கினியா அணிக்கு துவக்க வீரர்கள் டோனி உரா (1) மற்றும் கேப்டன் அசாத் வாலா (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சார்லெஸ் அமினி மற்றும் சீஸ் பௌ முறையே 17 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் மூலம் அந்த அணி 19.4 ஓவர்களில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் தவிர டிரெண்ட் பௌல்ட், டிம் சவுதி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மொரி 2 விக்கெட்டுகளையும், செமோ கமியா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.
- பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டன. அந்த வகையில், இந்த போட்டி தொடரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய பெர்குசன் அவை அனைத்தையும் மெய்டென்களாக (ரன் ஏதும் கொடுக்காமல்) வீசினார். நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முன்னதாக கனடா அணி கேப்டன் சாத் பின் சஃபார் டி20 கிரிக்கெட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களையும் மெய்டென்களாக வீசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெர்குசன் பெற்றிருக்கிறார்.
- மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
- 5 விக்கெட் வீழ்த்திய லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.
- பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
- ஹாக்கி ஆடவர் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளது.
ஹாக்கி ஆடவர் பி பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா,அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா அணியும் இடம் பெற்றுள்ளது
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில் 3 -2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மந்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
- நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
- நியூசிலாந்தில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.
அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து ௧,31,200 மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமானதாகும்.
நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
- 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
- நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.
நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
- டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.
துபாய்:
இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.
டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.
இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் குவித்தது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் சோபி டிவைன் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர்.
இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ டஹுஹு 3 விக்கெட்டும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம்,டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது.