என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் கோரிக்கை"
- சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- நல்லம்பள்ளி-பொம்மிடி இடையே உள்ள சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர் இந்த சாலையை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி-பொம்மிடி இடையே உள்ள சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை மூலம் தருமபுரி நகருக்கு வரும் வாகனங்கள் சுமார் 25 முதல் 30 கிலோமீட்டர் வரை பயணிக்கும் தூரம் குறையும்.
மேலும் இந்த சாலை வழியாகத்தான் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்த சாலை அபாயகர மான நிலையில் சிதிலமடைந்துள்ளது.வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர் இந்த சாலையை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
நல்லம்பள்ளி மற்றும் பொம்மிடி,முத்தம்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கை தற்போது தருமபுரி டி.ஆர்.டி.ஏ. அலுவலர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
அவர்கள் இது குறித்து கூறுகையில் நல்லம்பள்ளி-பொம்மிடி சாலையை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மூலமாக வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாலை சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
- உழவர் சந்தைக்கு தினம் தோறும் 500 -க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து செல்கின்றனர்.
- புதுப்பிக்கப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி நான்கு ரோடு அடுத்த கிருஷ்ணகிரி -தருமபுரி தேசிய நெடுஞ்சாலை ஆவின் அலுவலகம் அடுத்து உழவர் சந்தை இயங்கி வருகிறது இந்த உழவர் சந்தையில் 100- க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த உழவர் சந்தைக்கு தினம் தோறும் 500 -க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து செல்கின்றனர்.
உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கிருஷ்ணகிரி தருமபுரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது.
தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கடந்த ஆண்டு உழவர் சந்தையை ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உழவர் சந்தையை ஒட்டி உள்ள கழிவுநீர் கால்வாய் மீது சிெமண்ட் சிலாப்புகள் அமைத்து அதற்கு மீது சிமெண்ட் கற்கள் ஒட்டி அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் கழிவு நீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப்புகள் அமைக்கப்பட்டு சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் சிலர் அத்துமீறி சாலையில் காய்கறி கடைகளை வைப்பதால் உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதனால் உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் வாகனங்களை கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைத்து புதுப்பிக்கப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துமீறி சாலை ஓரத்தில் கடை வைத்துள்ளவர்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இறந்தவர்கள் உடலை அருகில் உள்ள பீணியாற்றை கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்வர்.
- உடனடியாக அரசு ஆற்றில் தரை பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்கராப்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் உள்ளது. இந்த பகுதியில் பட்டியியல் இன மக்கள் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தவர்கள் உடலை அருகில் உள்ள பீணியாற்றை கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்வர்.
இந்த நிலையில் பருவமழை கடந்த வாரம் முழுவதும் வலுவாத பெய்ததால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த கலைசெல்வி என்பவர் மரணமடைந்தார். இவரது உடலை உறவினர்கள் சுமந்து கொண்டு மாற்று பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் சுமந்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.
பட்டியல் இன மக்கள் என்பதால் மாற்று பாதை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டனரா ? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாற்று பாதை இல்லாத நிலை இருந்தால் உடனடியாக அரசு ஆற்றில் தரை பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
- திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியகுளம் எனும் குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
அதில் ஒரு சில மின்கம்பங்கள் சாய்ந்து குளத்திற்குள் விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டும் இந்த குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பிய வேலையில் திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது குளத்திற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது எஞ்சிய மின்கம்பங்களும் சாயும் தருவாயிலேயே உள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த குளத்திற்கு தண்ணீர் வர இருப்பதால் அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பகல் இரவு நேரங்களில் அடிக்கடி கேட் மூடப்படுவதால்,15 கிலோமீட்டருக்கு மேலாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
- தாளநத்தம் பகுதியை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி, ஆகிய இரண்டு ஊராட்சிகளில் அய்யம்பட்டி, காவேரிபுரம், நொச்சிகுட்டை, வேப்பிலை பட்டி உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.இதில்10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள கர்ப்பிணிபெண்கள், தங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெற பொம்மிடி,ராமியம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.
இந்தகிராம பகுதியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மருத்துவ மனைகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.பைக், கார், டிராக்டர் மூலம் தான் செல்ல வேண்டும்.மேல் சிகிச்சைக்காக தருமபுரிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல நேரிடும் போது புட்டிரெட்டிப்பட்டி ரெ யில்வே ஸ்டேஷனில் பகல் இரவு நேரங்களில் அடிக்கடி கேட் மூடப்படுவதால்,15 கிலோமீட்டருக்கு மேலாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அதற்குள் நோயாளி உயிரிழக்கும் சூழல் உள்ளது.
இதனால் தாளநத்தம் பகுதியை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.ஆனால் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர். கடந்த தேர்தலின் போது தி.மு.க. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்கும் மூடப்பட்டு விட்டதாக வும்,மருத்துவ சிகிச்சைக்கு இப்பகுதி மக்கள் அலையும் அவலம் தொடர்ந்து வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
- திட்டக்குடி பகுதிகளில் அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டது.
- அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டார பகுதிகளில் சிறுமுலை, பெருமுலை, திட்டக்குடி, தர்மகுடிகாடு, கோழியூர் ,தொள்ளார்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பு பெற்று டிவி பார்த்து வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் சுமார் 24 மணி நேரம் அரசு கேபிள் நோ சிக்னல், இணைப்பு கிடைக்கவில்லை இதனால் கேபிள் சேவை முடங்கியதால் பொதுமக்கள் நாட்டு நடப்புகளை அறிய முடியாமலும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை பார்க்க முடியாமல் உள்ளதால் அரசு உடனடியாக தொடர்ந்து அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
- மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தாகும்.
மணலி கந்தசாமி வீதி வழியாக செல்லும் சாலை ஈரோடு நாமக்கல் மாவட்டம் செல்வதற்கு பிரதான முக்கிய சாலையாகவும், ஈரோடு நாமக்கல் என 2 மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் இருப்பதால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.
இப்பகுதி வழியே ஈரோடு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் கல்லூரி வாகனங்கள் தனியார் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தார் சாலை அமைக்காததால் மழைக் காலங்களில் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழிகள், மழை நீரால் நிரம்பி காணப்படுவதுடன், வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான பகுதியில் மழைநீர் நிரம்பி இருப்பதை தெரியாமல் வாகனங்களை இயக்கி பலர் விபத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.
மணலி கந்தசாமி சாலையை புதுப்பித்து தருமாறு பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து, தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
- பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை. இங்கு வசிப்பவர்களில் யாராவது? இறந்து போனால் ஆரணி ஆற்றைக் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவர்களது உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலகட்டங்களில் யாராவது? இறந்து போனால் உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இக்கிராமத்தைச் சேர்ந்த மோகனா(வயது55) என்பவர் அகால மரணம் அடைந்தார். இதனால் பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் அவரது உடலை இடுப்பு அளவு தண்ணீரில் ஆரணி ஆற்றை கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே, பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்களின் மிக முக்கிய தேவையான சுடுகாடு வசதியை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மாலா, ஒன்றிய கவுன்சிலர் புஷ்ப முருகன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து பருத்தி மேனி குப்பம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
- கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
- 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும் உள்ளது.
- நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடக்க முடியாத அளவிலும், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
மழை நீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் கொசு தொல்லைகளும் மற்றும் நோய் தொற்றும் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதி சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது.
எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள 1-வது முதல் 9-வது வீதிகள் வரை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்களும், வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி, முத்து நகர் பகுதி பொதுமக்களும் இச்சாலை பயன்படுத்தி வருகிறார்கள்.
இச்சாலை நல்லூர் ஊராட்சி மற்றும் மாதம்பாளையம் ஊராட்சி சேர்ந்த சாலை என்பதால் ஊராட்சி தலைவர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய சேர்மன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையன சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.