என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்ற காவல்"

    • அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது? என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.

    இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.

    இந்த நிலையில், சக மாணவன், ஆசிரியரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான நபர்களை கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    • ஜான் ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
    • கைதான ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

    கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37).

    இவர் காந்திபுரம் பகுதியில் செயல்பட்ட கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் போதகராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பாடல்களில் பாப் இசையை புகுத்தி பாடல்கள் பாடி வந்ததால் ஜான்ஜெபராஜ் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

    இவர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெபக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் ஜான்ஜெபராஜ் மீது கோவையில் 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் ஜான்ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான்ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான்ஜெபராஜ் மீது கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜான்ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஜான்ஜெபராஜை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.

    இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜான்ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனால் அவரை தேடி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

    மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று போலீசார் ஜான்ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.

    இவ்வாறு ஜான்ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மூணாறு சென்று ஜான்ஜெபராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    இன்று அவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதி வரை ஜெபராஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ஜான்ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.

    • கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

    ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து, பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்தனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கடந்தமாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பெண்கள், 12 வயது சிறுமி என 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பு சதியின் பின்னணி பற்றி கண்டறிவதற்காக போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்து வந்தனர். கோர்ட்டு வழங்கிய போலீஸ் காவல் முடிவடைந்த தையடுத்து, டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டொமினிக் மார்ட்டின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் வழக்கு விசாரணை.
    • நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

    ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • சவுக்குசங்கர் மீது நேற்று முன்தினம் குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதிப்பு.

    சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

    இன்று மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
    • நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

    சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டார்.

    தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதி செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின்மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

    மேலும் சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு யூ டியூபர் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

    • பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6ம் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் இன்று மாலை நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மூன்றாவது வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அவரைக் காவலில் எடுத்தது.
    • தற்போது நீதிமன்றம் ஜூலை 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஆஜர்படுத்தப்பட்டபோது எஸ்ஐடி மேற்கொண்டு விசாரணை நடத்த பிரஜ்வாலின் காவலிலை நீட்டிக்க கோரிக்கை வை்ககவில்லை. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விசாரணையின் போது, இரைப்பை பிரச்சினைகள் குறித்து பிரஜ்வால் புகார் செய்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, அவரது உடல்நிலையை கண்காணிக்க எஸ்ஐடி அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

    • ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல்.
    • பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.

    மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். 

    • அப்துல் ரகுமான், முஜிபுா் ரகுமான் இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பூந்தமல்லி:

    பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்தது தொடர்பாக சென்னை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூரில் 'ஹிஷாப் உத்தகீர்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் என கருதப்படும் 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து செல்போன்கள், ஹாா்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.இதைத்தொடா்ந்து அப்துல் ரகுமான் (வயது 22), முஜிபுா் ரகுமான் (46), ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.

    பின்னர் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி, நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு சென்று நீதிபதி இளவழகன் முன்பு கைது செய்யபட்ட 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஜூலை 5-ந்தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக மார்ச் 15-ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார்.
    • தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை மே 29-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின், கோர்ட் பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.

    அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கவிதா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    ×