என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதி அரேபியா"

    • அமெரிக்காவுக்குப் பிறகு அதிக F-15 போர் விமானம் வைத்துள்ள நாடு சவுதி அரேபியா.
    • அமெரிக்காவிடம் இருந்து 1000 ஏவுகணைகள் வாங்க உள்ளது.

    சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டாலர் (ரூ. 29,600) மதிப்பிலான ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா தொடக்க கால அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா செல்ல இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

    நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பு இடைநிலை தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் AIM-120C-8 அட்வான்ஸ் ஏவுகணைகள் 1000 மற்றும் மற்ற தொழில்நுட்ப சப்போர்ட் போன்ற ஆயுதங்களை விற்பனை செய்ய இருக்கிறது.

    அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கிறது. 

    • பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சவுதி அரேபியா சென்றடைந்தார்.
    • அங்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜெட்டா:

    பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டார்.

    பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். அப்போது 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

    இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமர் மோடி விமானத்துக்கு சவுதி அரேபியா அரசு எப்-15 ரக விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
    • இந்தியா , சவுதி அரேபியா இடையிலான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று சவுதி அரேபியா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி புறப்பட்டார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார்.

    இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோவை இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.


    • சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.
    • கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குப் புறப்படுகிறேன், அங்கு பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.

    கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன. மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2-வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
    • மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.

    வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.

    வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.

    வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. 

    • 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.

    இந்நிலையில் இந்த வருடம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதனால் இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 ஹஜ் பயணிகளின் புனித கடமை கேள்விக்குறியானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில் மத்திய அரசின் வற்புறுத்தலை அடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
    • சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்கள் உள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். 1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்து இருந்த நிலையில் பயண அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.

    ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இந்தப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று டிரம்ப் பதில் அளித்தார்.

    பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

    சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    • போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
    • உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது.

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இறுதி முடிவை ஈட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷியா - உக்ரைன் இரு தரப்பும் டிரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து ரஷியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு நாள் முன்னதாக உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று தனியே ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    மின்சக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலில் முழுமையாக நிறுத்த அமெரிக்கா வலியறுத்தி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரயில்வே மற்றும் துறைமுகங்கள் பாதுகாக்கப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    இரு நாடுகளும் தற்போது மின்சக்தி உள்ளிட்ட உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது. எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சவுதி அரேபியா செல்ல விசா பெற இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
    • போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு

    ரியாத்:

    சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

    இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • பாகிஸ்தானில் உள்ள சவுதி மக்கள், அதிகாரிகள் வெளியே செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்.
    • ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்.

    பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய குடிமக்கள், அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவையை தவிர வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.


    இதேபோல் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விழிப்புடன் செயல்படவும், ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது.
    • வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

    ரியாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

    வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ×