என் மலர்
நீங்கள் தேடியது "பலி"
- சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அமராவதியில் உள்ள பிரபாத் டாக்கீஸ் திரையரங்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்கும் என்றும், விசாரணை நடத்த கோட்ட ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாரி மோதி சிறுமி பலியானார்
- சாலையை கடக்க முயன்ற போது நடந்த சம்பவம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சத்திரப்பட்டி கிரமத்தை சேர்ந்தவர் பாலு மகள் காயத்ரி (வயது13). இவர் தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி உயிரிழந்தார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். லாரி ஓட்டுனரான நல்லபுடையான்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.
- நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார் (வயது 25). இவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது கிணற்றில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி வரும்போது, சரத்குமார் கால் தவறி கிணற்றினுள் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டதால் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அவரது சகோதரர் மகன் கதறினார். பின்னர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள், தண்ணீரில் மூழ்கி கிடந்த சரத்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
- அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 66). விவசாயியான இவர், இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக அய்யண்ணன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் உள்ளதால், அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஆற்றில் வர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நீர் நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஆற்றில் வரும் தண்ணீர் ஆகியவற்றை கவனித்து உள்ளூர் மக்கள் விபத்தை தவிர்த்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகி வருவது சோக கதையாக உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிகேசம் பகுதியில் தலை தீபாவளி கொண்டாட வந்த என்ஜினீயர் ஷியாம், ஆற்று நீரில் சிக்கிய தனது மனைவி சுஷ்மாவை காப்பாற்ற முயன்ற போது, தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த சோகம் மறைவ தற்குள் சுற்றுலா வந்த 2 பேர் மற்றொரு சம்பவத்தில் பலியாகி விட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும் நீள மானதுமான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளி யாற்றில் குளித்து வருகின்ற னர்.
சென்னை வியாசர்பாடி சுந்தரம் நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திகேயன் (வயது 30) அவரது நண்பர் நாகராஜ் (30), இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் நாசர் (30), டிராவல் ஏஜென்சி நடத்தும் அஜித் (25) தையல் வேலை பார்க்கும் ராஜீவ் (30), தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கர் (25), ரமேஷ் ஆகிய 7 பேரும் கடந்த 28-ந் தேதி சென்னையிலிருந்து சுற்றுலாவாக குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.
நேற்று மதியம் அவர்கள் குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலம் வந்தனர்.அவர்களில் கார்த்திகேய னுன், நாகராஜ் ஆகி யோர் பரணியாற்றில் குளிப்ப தற்காக இறங்கினர்.
அப்போது வெள்ள த்தில் சிக்கி 2 பேரும் பலியானார்கள். குலசே கரம் தீயணைப்பு அலுவலர் மைக்கேல் தனபாலன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கார்த்திகேயன், நாகராஜ் உடல்கள் மீட்கப்பட்டன.
தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார். மாத்தூர் தொட்டிப்பா லத்தில் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் கூட போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுவது இல்லை. தண்ணீரில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் ஆற்றில் குளிக்க இறங்கி விபத்தில் சிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம். இதனால் தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றுலா பயணி களின் நலனை கருத்தில் கொண்டு இரு காவலர்களை தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதி யில் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டியது அவசியம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதுபோல் பொது ப்பணித்துறை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து எந்த வித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் திறந்து விட்டதால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து. இனிமேலாவது தண்ணீர் திறந்து விடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.
- அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு கடமக்கோடு மடத்துடத்துவிளையை சேர்ந்தவர் ராஜஜெயசிங் (வயது 36).
இவருக்கு கிரிஸ்டல் பியூலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. இவர் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அருகாமையில் ஒருவருக்கு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு செம்மாங்காலை பகுதியை சேர்ந்தவர் தாசையன் (வயது 65) கூலிதொழிலாளி.
இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உண்டு அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் பக்கத்தில் உள்ள கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதை அடுத்து சுசீலா அவரது உறவுக்காரர் ஒருவரிடம் சம்பவத்தை கூறி குளத்தில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது குளத்தின் கரையில் தாசையனுடைய துணி மற்றும் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்துள்ளார். அப்போது தாசையன் குளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாசையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
பெரம்பலூர்
உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருந்து சுமார் 50 பேர் ஆன்மிக சுற்றுலாவாக ராமேசுவரம் கோவிலுக்கு பஸ்சில் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ்சை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது ஜவகர்லால் சிங் என்பவரின் மனைவி சியாம்குமாரி (வயது 60) சாலையின் மறுபக்கம் சென்று விட்டு, மீண்டும் பஸ் ஏறுவதற்காக சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சியாம்குமாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- ஆயுதப்படை போலீஸ்காரர் விபத்தில் பலியானார்
- பணி முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் தமிழ்ச்சோலை தெற்குப்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ராகவன் (வயது 29), இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் கடந்த 2016- ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து நெய்தலூர் வழியாக பெருகமணி செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார். வாரிக்கரை அருகே வந்த போது, எதிரே வந்த மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மோதியதில், ஆயுதப்படை போலீஸ்காரர் ராகவன் தலையில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகவன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராகவன் திருமணம் ஆகாதவர்,
- மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
- எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் பாரதி என்ற பார்த்திபன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவனை அழைத்து கொண்டு விளாமுத்தூர் கோகுலம் நகரில் வசிக்கும் ராஜா என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றார்.
அப்போது பார்த்திபன் வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பார்த்திபனுடன் வந்த சிறுவனிடம் மின்சாரத்தின் மெயின் சுவிட்சை ஆன் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது பார்த்திபன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பார்த்திபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலியானார்.
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52), என்ஜினீயர். இவர் பெரம்பலூரில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், திருசன் என்ற மகனும், கீர்த்திஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் ஏரிக்கரை எதிரே உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியே சென்ற டிப்பர் லாரி செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் டிப்பர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், விபத்தை ஏற்படுத்தியவர் திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த மாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.