என் மலர்
நீங்கள் தேடியது "பிஎஸ்என்எல்"
- சென்னை குடிநீர் வாரிய தொலைபேசி எண் 044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1916 மற்றும் 14420 செயல்படாது.
- கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.
சென்னை:
பி.எஸ்.என்.எல். வலைதள பராமரிப்பு பணிகள் இன்று மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை குடிநீர் வாரிய தொலைபேசி எண் 044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1916 மற்றும் 14420 செயல்படாது.
மேலும் மற்ற இணையதள சேவைகள் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும். கூடுதல் விவரங்களுக்கு 4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
- பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
- அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.
ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது.
- வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
- செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்ளில் பெய்த அதிக கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டன.
சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு காரணமாக செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெருமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நகரும் செல்போன் டவர் அமைக்கப்படும் என்று ட்ராய் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
* ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
* ஒரு நகரும் செல்போன் டவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
* தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.
* நகரும் 2 செல்போன் டவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டன.
* ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
- பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.
அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:
புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.
இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.
இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
- ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும்.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த மாதம் நாடு முழுவதும் அதன் 4ஜி சேவையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் 10,000 மொபைல் டவர்களை 4ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன்-ஐடியா) போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேர பிஎஸ்என்எல் தயாராக உள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், 4ஜி டேட்டா உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும்.
இத்துடன் நிறுவனத்தின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கைக் குறிப்பிடுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கிறது. ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயனர்கள் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் இசை போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
PV2399: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2,399. இது 395 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
PV1999: இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 600ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி குரல் அழைப்புடன் 365 நாட்கள் செல்லுபடியாகும்
PV997: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.997 மற்றும் 160 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
STV599: இது பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டமாகும், இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
STV347: இந்த திட்டத்தின் விலை ரூ. 347 மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் 54 நாட்கள் செல்லுபடியாகும்.
PV199: இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
PV153: இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 26ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
STV118: இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 10 ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது.
- 1198 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.
- 1999 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 600GB டேட்டா.
அரசு செல்போன் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி வழங்க தயாராகி வருகிறது. நாட்டின் முக்கிய இடங்களில் 4ஜி சேவை வழங்கி வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மலிவான விலையில் வருடாந்திர பிளானை அறிவித்துள்ளது.
1198 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்
365 நாள் வேலிடிட்டி
300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.
மாதந்தோறும் 30 இலவச எஸ்எம்எஸ்.
1999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்
365 நாள் வேலிடிட்டி.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்.
365 நாட்களுக்கு 600GB டேட்டா.
தினந்தோறும் 100 எஸ்எம்ஸ் இலவசம்.
2999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்
365 நாள் வேலிடிட்டி.
ஒரு நாளைக்கு 3GB டேட்டா உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்.
தினசரி 10 எஸ்எம்எஸ் இலவசம்.
- ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனை.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற தொலை தொடர்பு ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர், டிஜிஎம் பழனி முருகன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனைகள் மேற்கொண்டதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
- நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன.
- பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலையை, ஸ்ட்ரீட் கஃபேயின் விலைப்பட்டியலோடு ஒப்பிட்ட புகைப்படத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காபி, டீ, லஸ்ஸி மற்றும் டோஸ்ட் ஆகியவற்றுடன் இந்தியாவில் 1 ஜிபி டேட்டாவின் விலையை ஒப்பிடும் ஒரு தெருவோர கஃபேயின் படத்தை தொலைத்தொடர்புத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "இந்தியாவில் 1 ஜிபி டேட்டா ஒரு கப் காபியை விட மலிவானது" என்று எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில், மக்களவையில் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அழைப்பின் விலை 53 பைசா என்று கூறிய அவர், நாட்டில் உள்ள அனைத்து கட்டணங்களும் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்று. ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.9.12க்கு உலகிலேயே மலிவான டேட்டா விலையை இந்தியா வழங்குகிறது என்று கூறியிருந்தார்.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
- பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது.
- அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விரைவில் 5 ஜி மற்றும் விரிவுபடுத்தப்பட் 4 ஜி சேவைகளை சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 5 ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா[Jyotiraditya Scindia] பி.எஸ்.என்.எல் 5 ஜியை பயன்படுத்தி வீடியோ கால் சேவையை முதல் முறையாக பரிசோதித்து பார்த்தார். டெல்லியில் உள்ள c-dot கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
அந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5 ஜி சேவையின் செயல்திறன் குறித்து பேசினார். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் 5 ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை அதிகரித்து வரும் நிலையில் அனைவரின் பார்வையும் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளானை பெற 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
- ஜியோ 336 நாள் பிளான்க்கு 1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியதால், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு பெரும்பாலான செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டை மாற்றினர். மாற்றி வருகின்றனர். அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தனியார் நொட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையைாக 4ஜி நெட்வொர் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அளித்து வருகிறது.
தற்போது 336 நாள் ரீசார்ஜ் பிளான் ஜியோவை விட பி.எஸ்.என்.எல்.-லில் குறைந்த விலையாகும்.
பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளான்
1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் அழைப்பு, டெல்லி மற்றும் மும்பையில் எம்.டி.என்.எல். நெட்வொர்க் ரோமிங் ப்ரீ. 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ. இந்த பிளானிற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 4.5 ரூபாய் வாடிக்கையாளர்கள் செலவிட வேண்டும்.
ஜியோ 336 நாள் பிளான்
1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் கால் வசதி, 24 ஜிபி டேட்டா, மொத்தம் 3,600 எஸ்.எம்.எஸ். ப்ரீ. சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை எளிதாக பெறலாம். இந்த பிளானிற்காக வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு சராசரியாக 5.65 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
மேலும் ஜியோவில் 448 ரூபாய், 449 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஒரு ரூபாய் வித்தியாசத்தில் இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது.
448 ரூபாய் திட்டத்தில் 28 நாளைக்கு தினந்தோறும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை பெறலாம். அத்துடன் அன்லிமிடெட் கால். 100 எஸஎம்எஸ் ப்ரீ். சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்கா லங்கா, பிளானெட் மராத்தி, ஜியோ டி.வி. ஆகியவற்றை இலவசமாக பெறலாம்.
449 ரூபாய் பிளானில் 28 நாளைக்கு தினந்தோறும் 3 ஜிபி அதிகவே டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.