search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • அருப்புக்கோட்டை அருகே விவசாயி-தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
    • சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளுமடத்தை சேர்ந்தவர் மணிமாறன் (44) விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (58). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பர்வதம். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கருப்பசாமி தனியாக வசித்து வந்தார். ஆனால் தனது சம்பளத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்து விடுவாராம். வீடு கட்டுவதற்காக இடம் கொடுத்தது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விறகு வெட்டுவதற்காக வாங்கிய அரிவாளுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து தங்களை தாக்குவதற்காக வருவதாக கருப்பசாமியின் மகன் தவறாக நினைத்து அவருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பர்வதம் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக நீர் வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது.

    இந்த சூழலில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களுக்கு (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு) பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வரு–கிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வரையில் 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு 2,074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். 

    • நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
    • மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன.

    உடுமலை :

    நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது.இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் மற்றும் சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

    மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன. உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன. முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன.

    இதனால் வயல்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர்.வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு மக்கள் ரசிக்கின்றனர்.ஆனால் விவசாய பகுதிகளில் நிலக்கடலை, தானியம், காய்கறி உள்ளிட்ட கீரை சாகுபடியை மயில்கள் மேய்ச்சல் நிலமாக மாற்றி விடுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.கிராம ரோடுகளில் மயில்கள் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு, வனத்துறை அதிகாரிகளோடு மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 53) விவசாயி.இவர் , இவரது நண்பர் மயில்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக அனுப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ரத்தினசாமி மோட்டார் சைக்கிளை ஓட்ட மயில்சாமி பின்புறம் அமர்ந்து வந்தார். கரடிவாவி - அனுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அனுப்பட்டிக்கு அருகே உள்ள ரோடு திருப்பத்தில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ரத்தினசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரத்தினசாமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த மயில்சாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
    • தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி.

    அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான ஜாலிகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு நேற்று மாலை சமன் செய்து கொண்டு இருந்தார். 1/2 ஏக்கர் நிலம் சமன் செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    அப்பொழுது முருகன் டிராக்டரை நிறுத்திவிட்டு பின்னால் வந்து கலப்பையை சரி செய்யும் பொழுது கலப்பைக்குள் மாட்டி வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • துறை சார்ந்த திட்டங்களில் பயன் பெறுவதற்காக தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.

    குண்டடம் :

    தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன் பெற வேளாண் அடுக்கு திட்டமானது தமிழ்நாடு அரசு - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (GROWER ONLINE REGISTRATION OF AGRICULTURAL INPUT SYSTEM) என்ற புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்காக விவசாயிகள் தங்களின் நில உடமை விவரம், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி விபரம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தங்கள் செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் குண்டடம் வட்டார தோட்டக்கலை வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில துறை சார்ந்த திட்டங்களில் பயன் பெறுவதற்காக தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் அரசின் திட்டங்களை பயன்படுத்துவதுடன் இதுவரை தாங்கள் அரசிடம் இருந்து பெற்ற திட்டத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

    எனவே திட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து விவசாயிகள் தவறாமல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற வலியுறுத்தப்படுகிறது. இந்த தகவலை குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 9514034056, 9488928722 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

    • எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காத நிலையில் கவலை தெரிவித்துள்ளனர்.
    • முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு தோட்ட பயிரான முந்திரியை பயிரிட்ட விவசாயிகள் அவர்கள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காத நிலையில் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது முந்திரி பூக்கள் பூக்கும் பருவத்தில் பெய்த பனிப்பொழிவு அதனைத் தொடர்ந்து கடுமையான வெயில் ஆகியவற்றின் தாக்கத்தால் பூக்கள் அனைத்தும் கருகி காய்பிடிக்கவில்லை. இதனால் முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, முந்திரி பயிர் மூலம் கிடைக்கும் மகசூல் கிடைக்க முடியாமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளின் இழப்பீட்டை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும்.
    • பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும்.

    காங்கயம் :

    கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் - முத்தூர் சாலையில் உள்ள லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வெள்ளியம்பாளையம் குழந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கீழ்பவானி பெயரல்ல- எங்கள் உயிர், கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் தோல்வி கண்ட கான்கிரீட் திட்டத்தை கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் புகுத்த கூடாது, கீழ்பவானி பாசன மண் கால்வாய் மழைநீர் அறுவடை திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்ட திட்டம் ஆகும்.

    இதனால் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் இந்த திட்டங்கள் பாழ் பட்டு போகும். மேலும் சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.

    மேலும் பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும். இதன்படி பழைய பாசனங்களுக்கு 8 டி.எம்.சி.தண்ணீரும், கீழ்பவானி பாசனத்திற்கு 28 டி.எம்.சி. தண்ணீரும் என ஒரே விகிதாச்சார அடிப்படையில் நீர் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். மேலும் பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்தாலும், கூடினாலும் இதே விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கோடை சாகுபடி மற்றும் குறுவை பருவத்திற்கும் தண்ணீர் திறக்க கூடாது. நஞ்சை சம்பா சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் ராஜபிரபு (வயது 30). இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மகன் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகளால் பெருமாள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். "இப்படி ஒரு மகனை உயிரோடு வைத்திருப்பதைவிட கொன்று விடுவது நல்லது" என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த மகனை தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்து சென்று அவரது கை, கால்களை கயிறால் கட்டி பெற்ற மகன் என்றும் பாராமல் கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி ராஜபிரபு பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜபிரபு உடலை மீட்டனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலும் பலியான ராஜபிரபு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொட்டக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிலாஸ்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • தெற்கு சல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு தெற்கு சல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். விவசாயி.

    இவருடைய மனைவி காந்திமதி (வயது54).

    இவர் நேற்று வீட்டில் இருந்தபோது காலில் கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் காந்திமதி இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முதுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 65) விவசாயி.

    இவரது மனைவி செல்வி (60).

    இருவரும் உறவினர் வீட்டு விழாவு க்காக மணமேல்குடிக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது வல்லவன் பட்டினம் அருகே மீன் ஏற்றி சென்ற லோடு வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவம னைக்கு செல்லும் வழியிலேயே அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செல்வி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×