என் மலர்
நீங்கள் தேடியது "வாழைப்பழம்"
- காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
காலையில் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்படி இருப்பது சிறப்பானது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாக தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதன் இயக்கமும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடனடியாக கிடைக்கச் செய்யும். மேலும் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை குடல் அசவுகரியத்திற்கு ஆளாகுவதை தவிர்க்கவும் முடியும். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.
பப்பாளி:
பப்பாளியில் புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் ஏ, பி, சி அதிகமாக இருப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வழிவகை செய்யும். குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி ஜூஸ் பருகுவது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தடுக்க உதவி புரியும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கும். இது நார்ச்சத்துமிக்க உணவுப்பொருளாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அதனை சாப்பிடுவது குடல் இயக்கம் எளிமையாக நடைபெறுவதற்கு உதவும். கார்போஹைட்ரேட்டை சிதைக்கும் செயல்முறையையும் எளிமையாக்கும்.
பீட்ரூட்:
இதிலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கம் எளிதாக நடைபெறுவதற்கு உதவிடும்.
ஆப்பிள்:
இதில் நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், இரைப்பை, குடல் நலனுக்கு உகந்தது. இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.
புரோக்கோலி:
புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறவும், செரிமான பாதையை பராமரிக்கவும் உதவி புரியும். நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
- பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
- பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
வாழைப்பழத்தை விரும்பாதவர்களே இல்லை. எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேலும் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு என்ற நிறத்தில் இருக்கும். பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் மட்டுமே பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள்.
உங்கள் தெரியுமா.. மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் தான் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று. இதில் சத்துங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல வழியாகும். மேலும், பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மற்றும் இதில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளது. இதிலிருக்கும் இனிப்பு தனித்துவமானது என்றே சொல்லலாம்.

மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..
• பச்சை வாழைப்பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது.
• இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்தம் மற்றும் குடலில் உள்ள குளுக்கோஸை உடைக்கும் நொதிகளைத் தடுப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
• இதில் நார்ச்சத்து மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது. இவை பசியைத் தணிக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை குறைக்கிறது, எனவே எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
• இதில் இருக்கும் மற்றொரு மூலப்பொருள் பெக்டின். இது எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. அவை கொலஸ்ட்ராலைக் குறைத்து, இருதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.
• பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை இதய நோய், புற்றுநோய், கண்புரை மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.
- மன அழுத்தம் போக செய்ய பல யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
- சிலர் இவற்றுடன் நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்கின்றனர்.
பணிச்சுமை அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் ஊழியர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள ஊழியர்கள் ஏராளமான பழக்க வழக்கங்களை கையாண்டு வருவது இயல்பாகிவிட்டது. ஒவ்வொரு நாட்டிலும், அவரவர் சூழலுக்கு ஏற்ப மன அழுத்தம் போக செய்ய பல யுத்திகளை பணியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
எனினும், உலகளவில் பணிச்சுமை அல்லது லேசான மன அழுத்தம் ஏற்படும் போது, பணியில் இருந்து சிறு ஓய்வுக்காக பலர் டீ, காஃபி உள்ளிட்டவைகளை பருகுவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் இவற்றுடன் நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில், நவீன சமூக வலைதள காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப் உள்ளிட்டவைகளை கடந்து சீனர்கள் தற்போது வாழை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

மேலும், இவ்வாறு செய்வது அந்நாட்டில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த டிரெண்ட்-இன் படி பணியாளர்கள் தங்களது அலுவலகத்தில் அவரவர் பணியாற்றும் மேஜையில், வாழை செடி ஒன்றை வாங்கி வந்து வளர்க்கினர். வழக்கமான வாழை சாகுபடி போன்றில்லாமல், இவர்கள் பச்சை நிறத்தில் உள்ள வாழை தார் ஒன்றை நீர் ஊற்றும் வசதி கொண்ட தொட்டியில் வைக்கின்றனர்.
பிறகு, ஒருவார காலத்திற்கு அவ்வப்போது பராமரிக்கும் போது, பச்சை நிற தாரில் இருந்து வாழை ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது. முதலில் பச்சை நிறத்தில் துவங்கி இறுதியில் இளம் மஞ்சள் நிறத்திற்கு வாழை பழமாக மாறுகிறது. இந்த வழிமுறைகளை பார்க்கும் போது ஒவ்வொரு தருணமும் அளவில்லா மகிழ்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் அளிப்பதாக டிரெண்ட்-இல் பங்கேற்றவர்கள் ஆன்லைனில் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கம் சீனாவின் இன்ஸ்டாகிராம் போன்ற தளமாக செயல்பட்டு வரும் ஷாங்ஷூவில் வைரலாகி உள்ளது. இது தொடர்பான பதிவுகள் அதிக லைக்குகளை வாரி குவிக்கின்றன. அந்த வகையில், மன அழுத்தம் கொண்டவர்களுக்கு நிம்மதியையும், சமூக வலைதளத்தில் லைக்குகளை குவிக்கவும் இந்த டிரெண்ட் தற்போது உதவுகிறது.
- பழங்களில் இருக்கும் இயற்கை சர்க்கரையான பிரக்டோஸையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- பழங்களை அளவாக சாப்பிட வேண்டும்.
சரிவிகித உணவுகளை உட்கொள்ளும் விஷயத்தில் பழங்களை புறக்கணித்துவிட முடியாது. அவற்றில் வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், நீர்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பி இருக்கின்றன.
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதற்கு கட்டாயம் பழங்களையும் உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
அதேவேளையில் பழங்களில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை சர்க்கரையான பிரக்டோஸையும் கருத்தில் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நன்மை சேர்க்கும் என்றாலும் அதிகமாக உட்கொள்ளும்போது நீரிழிவு, இதயநோய், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே இத்தகைய பாதிப்புகொண்டவர்களுக்கு நிலைமையை மோசமாக்கலாம். எனவே பழங்களை அளவாக சாப்பிட வேண்டும். எந்தெந்த பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக, குறைவாக இருக்கிறது என்று பார்ப்போம்.
அதிக சர்க்கரை கொண்ட பழங்கள்:

செர்ரி:
செர்ரி சிவப்பு பழத்தில் 100 கிராமுக்கு 12.82 கிராம் சர்க்கரை உள்ளது.

பேரீச்சை பழம்:
பேரிட்சை பழத்தின் ஒவ்வொரு 100 கிராமிலும் 63.35 கிராம் சர்க்கரை உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அதிகம் உட்கொள்ளக்கூடாது.

அத்திப்பழம்:
அத்திப் பழம் 100 கிராமுக்கு 16.26 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கிறது.
ஆரஞ்சு:
100 கிராம் இதை உட்கொள்வது 12 கிராம் சர்க்கரையை உட்கொள்வதற்கு சமம்.

அன்னாசிப்பழம்:
அன்னாசிபழத்தில் சர்க்கரை உள்ளடக்கம் 100-க்கு 10 கிராம்.

வாழைப்பழம்:
100 கிராம் வாழைப்பழத்தில் 17 கிராம் சர்க்கரை இருக்கும். அது நன்கு பழுத்திருந்தால் 20 கிராம் சர்க்கரைக்கு சமமாக இருக்கும்.

திராட்சை:
ஒரு கொத்து திராட்சை பழம் 20 கிராம் வரை சர்க்கரையை வழங்கும்.
குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்கள்:
பொதுவாக 100 கிராம் கொண்ட பழத்தில் 1 முதல் 20 கிராம் வரை சர்க்கரை இருக்கும். அதனால் அதிக சர்க்கரை (பிரக்டோஸ்) இல்லாத பழங்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

அவகேடோ:
100 கிராம் அவகேடோ பழத்தில் வெறும் 0.7 கிராம் அளவே சர்க்கரை உள்ளது. அதனால் இது குறைந்த அளவு சர்க்கரை கொண்ட பழமாக அறியப்படுகிறது. இதனை நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட்டு வரலாம்.

பெர்ரி பழங்கள்:
100 கிராம் புளூபெர்ரி பழத்தில் 4 கிராம் சர்க்கரை உள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 100 கிராமுக்கு 7 கிராம் சர்க்கரை உள்ளடங்கி இருக்கிறது. ராஸ்பெர்ரி 5 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கும்.

கொய்யா:
100 கிராம் கொய்யா பழம் 5 கிராம் சர்க்கரையை வழங்குகிறது.

எலுமிச்சை:
இந்த சிட்ரஸ் பழத்தில், 100 கிராமுக்கு 2.5 கிராம் சர்க்கரை காணப்படுகிறது.

மாண்டரின்:
இது ஆரஞ்சு பழத்தில் ஒரு ரகம். 100 கிராம் பழத்தில் தோராயமாக 10 கிராம் சர்க்கரை உள்ளது.

முலாம்பழம்:
இந்த பழம் 100 கிராமுக்கு 6 கிராம் சர்க்கரையை வழங்குகிறது.

தர்பூசணி:
தர்பூசணி பழத்தில் 100 கிராமுக்கு 6 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் ஒரு துண்டு தர்ப்பூசணி பழம் எவ்வளவு எடை கொண்டிருக்கிறது என்பதை கணக்கிட்டு உண்ண வேண்டும்.

மாம்பழம்
இது மாம்பழ சீசன். 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் இதை வயது வித்தியாசமின்றி அனைவரும் ருசிப்பர். ஆனால் மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக அதில் நார்ச்சத்தும், சர்க்கரையும் (100 கிராம் பழத்தில் 14.8 கிராம்) அதிகம் இருக்கிறது.
அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதனை தடுக்க ஊறவைத்த பாதாம் பருப்புடன் மாம்பழ துண்டுகளை சேர்த்து உட்கொள்ளலாம். அதனை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது.
காலை வேளையில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது நாள் முழுவதும் பசியை தூண்டிவிட்டுவிடும். அதனால் அதிகம் உணவு உண்ண காரணமாகிவிடும். மாம்பழத்தை ஜூசாகவோ, மில்க் ஷேக்காகவோ பருகுவதை தவிர்க்க வேண்டும். அதில் அதிக சர்க்கரை மற்றும் பால் பொருட்கள் கலந்திருக்கும். அது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கச்செய்துவிடும். மாம்பழங்களை வெட்டுவதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும். அதனை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு வெட்டுவது சிறப்பானது.
தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ளலாம்?
பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அதேவேளையில் சரியான அளவில் உட்கொள்வது வளர்சிதை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
ஆண்கள் ஒரு நாளைக்கு 9 டீஸ்பூன் (36 கிராம் அல்லது 150 கலோரிகள்) அளவுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளக்கூடாது. பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு (25 கிராம் அல்லது 100 கலோரிகள்) அதிகமாக சர்க்கரை உட்கொள்ளக்கூடாது.
டீ, காபி, இனிப்பு பலகாரங்கள் உள்பட சாப்பிடும் மற்ற உணவுப்பொருட்களில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிட்டு அதற்கேற்ப தினமும் உட்கொள்ளும் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.
முதலில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் பின்னரே மற்ற இனிப்பு பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியத்துக்கும், ஆயுளுக்கும் நல்லது.
- அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது.
- மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்தும் அதிகம்.
பழங்களில் இயற்கையான இனிப்பும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாக விளங்குகின்றன. இருப்பினும் எல்லா பழங்களையும் விரும்பிய நேரத்தில் சாப்பிடக்கூடாது. சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. அந்த பழங்கள் பற்றியும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம்.
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொண்டால் சிலருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அதிக அமிலத்தன்மை வயிற்றின் குடல் பகுதியை எரிச்சலடைய செய்து செரிமான பிரச்சனைகள் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அசிடிட்டி, இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் கொண்ட நபர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
அன்னாசி:
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது. இந்த நொதி செரிமானத்திற்கு உதவும். அதே வேளையில் அன்னாசி பழத்தை அதிகமாகவோ, வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பையில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
அதிலும் தூங்குவதற்கு முன்பு அன்னாசி பழம் சாப்பிடும்போது புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரணம், வீக்கம், வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.
மாம்பழம்:
மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்தும் அதிகம். உறங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு விரைவாக அதிகரிக்கக்கூடும். தூக்க முறையும் சீர்குலையும்.
மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் நிலையில், வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் அதனை இரவில் அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தர்பூசணி:
நீர்ச்சத்து நிறைந்த இந்த பழம் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஊட்டக்கூடியது. ஆனால் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.
இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் தூக்கம் தடைபடும். குறிப்பாக இரவில் அதிக அளவு தர்பூசணி சாப்பிட்டால் அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் போராட வேண்டியிருக்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், இயற்கை சர்க்கரைகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும், உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும்.
தூங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை தரும் என்றாலும் அதிகமாக உட்கொள்வது அசவுகரியத்தை உண்டாக்கும்.
- பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
- சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் ஒரு சுவையான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மலிவான விலையில் கிடைக்ககூடிய பழமாக விளங்குகிறது.
ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்சத்து, 15 கிராம் சர்க்கரை, 422 கிராம் பொட்டாசியம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி ஆகியவையும், மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும், கேட்டிசின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

ஒரு வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 31 முதல் 62 வரையிலும், கிளைசெமிக் லோட் 11 முதல் 22 வரையிலும் வேறுபடலாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் அதிகமாக இருக்கும்.
ஆனால் அதே சமயம் குறைவாக பழுத்த வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் குறைவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பச்சை நிறத்தில் உள்ள சற்று பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
ஏனெனில் குறைவாக பழுத்த வாழைப் பழத்தில் இருக்கும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் இன்சுலின் எதிர்மறை நிலையை குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வாழைப்பழம் பழுக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் (மாவு சத்து) சர்க்கரையாக மாறுகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிகமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து, உணவு சாப்பிட்ட உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தாமதப்படுத்துகிறது.

வாழைப் பழம் பழுக்கும் போது அதனை திடமாக வைத்திருக்கும் பெக்டின் அளவு குறைந்து அதனை மிருதுவாக மாற்றுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பெக்டின், குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் குடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஆற்றல் உடையது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் குளுக்கோஸ் அளவு அதிகம் உள்ள பூவன்பழம், ரஸ்தாளி போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. அதிக நார்ச்சத்து உள்ள குறைவாக பழுத்த பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம்பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மலச்சிக்கலுக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சிறிய அளவிலான, குறைவாக பழுத்த வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
- நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம்
- எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் வொர்க் லைஃப் அமைச்சர் பவுலினா பிராட்பெர்க் [Paulina Brandberg]. இவருக்கு வாழைப்பழங்களைக் கண்டால் பயம் ஏற்படும் போபியா [Phobia] உள்ளது.
உயரமான இடங்களைக் கண்டு பயப்படுவது Acrophobia, ரத்தத்தைக் கண்டு பயப்படுவது Hemophobia என பல போபியாக்கள் இருப்பது போல் வாழைப்பழங்களைக் கண்டு பயப்படுவதற்கு பெயர் bananaphobia ஆகும்.
இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தனது அலுவலகத்தில் தான் கலந்து கொள்ளும் மீட்டிங்களில் வாழைப்பழங்கள் தனது கண்ணில் படவே கூடாது என்று ஸ்டிரிக்டாக தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்டிரிக்ட்டாக உத்தரவு போட்டுள்ளார்.

அவருக்கும் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையிலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்கள் லீக் ஆனதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்பிரசென் [Expressen] செய்தி நிறுவனம் இந்த ஈமெயில்களை பொதுவெளியில் வெளியிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் தேதியிட்ட ஈமெயில் ஒன்றில், ஸ்வீடன் சபாநாயகர் அலுவலகத்தில் தான் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் வாழைப்பழகளுக்கான எந்த தடையும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி என்று பவுலினா தெரிவித்துள்ளார்.
பவுலினா கலந்துகொள்ள உள்ள மற்றொரு மீட்டிங் தொடர்பான ஈமயிலில், நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல ஈமெயில் உரையாடல்கள் வெளியாகி அந்நாட்டில் பேசுபொருளானது.

இதையடுத்து பவுலினாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் [Ulf Kristersson], பவுலினாவின் போபியா அரசு நிர்வாக செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, போபியாக்களால் அவதிப்படும் மனிதர்களையும் அவர்களின் சிரமங்களையும் நான் மதிக்கிறேன், அதை கிண்டல் செய்யக் கூடாது, கடினமாக உழைக்கக்கூடிய ஒரு அமைச்சரை மக்கள் கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
- இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் இதை உருவாக்கியுள்ளார்
- தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என அவர் பெயர் சூட்டினார்
எல்லாவற்றையும் கலைநயத்தோடு பார்க்க வேண்டும் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த சமபவம் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. அதாவது, சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது கலைப்படைப்படைப்புதான் இது. அமெரிக்காவின் நியூயார்க் ஏல மையத்தில் சுவற்றில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.

மொரிசியோ கட்டெலன்
இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டாலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும். இந்த ஏல விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பேசுபொருளாகியுள்ளது.

ஜஸ்டின் சன்
இந்த படைப்பை உருவாக்கிய கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.
அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை பார்வைக்கு வைத்தார்.
தன்னுடைய இந்த படைப்புக்கு 'காமெடியன்' என அவர் பெயர் சூட்டினார். அவரது இந்த படைப்பு ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் எடுக்கப்பட்ட வாழைப்பழம் மக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள், அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
ஆனால் ஒருநாள் அந்தக் கண்காட்சிக்கு வந்த பிரபல கலைஞர் டேவிட் டதுனா, வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே சுவற்றில் வாழைப்பழத்தை டக்ட் டேப் போட்டு ஒட்டுவது [ காமெடியன்] தனது அறிவுசார் உடைமை என்ற உரிமத்தை கட்டெலன் வாங்கி வைத்தார். இதனால் தற்போது அதேபோன்று சுவற்றில் டக்ட் டேப் போட்டு அவர் ஒட்டிய வாழைப்பழமே தற்போது நியூயார்க் ஏலத்தில் ரூ.52 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பின் சாராம்சம் வாழைப்பழத்தில் இல்லை என்றும் அந்த ஐடியா தான் இதில் விஷயமே என்று கட்டெலன் கூறுகிறார். இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோ உலகங்களை இணைக்கும் படைப்பு என்று வாங்கியவர் தெரிவித்துள்ளார்.
- கணவனும் மனைவியும் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.
- கிருஷ்ணர் குழந்தை வடிவில் வீட்டிற்குள் நுழைந்தார்.
குருவாயூரில் ஒரு கிராமம். அங்கு ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். எப்பொழுதும் வேலை முடித்ததும் கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணர் மீது பக்திப் பாடல்கள் பாடி அவனை பூஜிப்பார்கள். ஒருநாள் இரவு கணவன் வெளியே சென்றிருந்த சமயம் அது. கிருஷ்ணர் குழந்தை வடிவில் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். மனைவிக்கு அதிர்ச்சி கலந்து ஆச்சரியம். கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே பால கிருஷ்ணனுக்கு ஒரு ஆசனமளித்து அமர வைத்தாள் அவள்.

தட்டில் சில பழங்களைக் கொண்டு வந்தாள்! பக்தி மிகுதியால் வாழைப்பழத்தை உரித்து, பழத்தைத் தட்டில் வைத்து விட்டு பழத்தின் தோலைக் கண்ணனுக்கு அளித்தாள். கண்ணன் அவளது பக்தியில் மனம் கரைந்து இருந்தான். அவனும் தோலை வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் சென்றதும் கணவன் வீட்டிற்குள் நுழைந்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மனைவியைக் கடிந்து கொண்டான். அவளும் சுய நினைவுக்கு வந்தாள். இருவரும் குழந்தை கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
தங்கள் வீட்டில் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். உணவு தயாரானது. கண்ணனுக்குப் பரிமாறினார்கள். கண்ணனும் சாப்பிட்டான். கணவன் கண்ணனிடம், "கண்ணா சாப்பாடு சுவையாக இருக்கிறதா?'' என்று கேட்டான்.
அதற்கு கண்ணன், "உன் மனைவி நான் வந்தவுடன் தந்தாளே வாழைப்பழத்தோல்!....அதைவிட இந்த விருந்தில் சுவை குறைவாகத்தான் இருந்தது' இறைவனுக்கு என்ன தருகிறோம் என்பதை விட எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்.
இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆகும், காலைக்கடன் எந்த சிரமமும் இல்லாமல் கழியும் என்று கூறுவதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். யாரெல்லாம் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடலாம் என்பதிலும் கட்டுப்பாடு உள்ளது. 12 வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம்.
இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயதானவர்களும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.