என் மலர்
நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள் பறிமுதல்"
- சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
- கைது செய்யப்பட்ட யசோதா மீது சுமார் 15-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கு உள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி பஸ் நிலையம் அருகே திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களை பெண் போலீசார் சோதனை செய்தபோது 2 பெண்கள் காலில் டேப்புகள் அணிந்து புதுவையில் இருந்து 240 மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவர்கள் செஞ்சி பகுதியை சேர்ந்த யசோதா (77), சின்ன பாப்பா (44) ஆகியோர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மதுபானங்களை கடத்தி செஞ்சி பகுதிக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட யசோதா மீது சுமார் 15-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கும் சின்ன பாப்பா மீது சுமார் 20-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னாள் கணுவாய்ப்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் நடத்திய சோதனையில் கருவேப்பிலை மூட்டையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 132 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது
- வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேண் ஒன்று வந்த போது போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வாகனத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுராந்தகம்:
புதுச்சேரியில் இருந்து மதுராந்தகம் அருகே சூனாம்பேடு வழியாக காரில் அதிக அளவு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் சூனாம்பேடு அருகே உள்ள வேலூர் கிராமம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 1248 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதையடுத்து காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- போலீசார் சோதனையில் சிக்கியது
- 10 பாட்டில்கள் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயசூ ரியன் மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம், வட் டார வளர்ச்சி அலுவலகம், கொண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப் போது கொண்டாபுரம் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசு மது பாட் டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வ தாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்த போது, கள்ளத்தன மாக அரசு மதுபாட்டில். களை பதுக்கி அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த 10 மது பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மணி (வயது60) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
- சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்கு பதியபட்டது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, தென்னிலை, குளித்தலை, மாயனூர், தோைகமலை பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் மரவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு உள்ள டாஸ்மாக் பகுதியில் மது விற்றதாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தோகைமலை அருகே உள்ள தெற்குபள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (வயது 31) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.
தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி மம்பத்தையூரை சேர்ந்த ரவி (48) என்பவர் தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம்:
தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு, மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு விழுப்புரம் மண்டல உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையில், தலைமை காவலர்கள் இளந்திரையன், கவிராஜா, மகாமார்க்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் அருகில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 4128 மதுபாட்டில்களை (725 லிட்டர்) காரில் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேட்டைக்கு காரில் கடத்தி வருவதை அறிந்தனர். அந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது போலீசார் மீது மோதுவது போல் வந்த அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தனர். அதில் புதுவை மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.
அந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புதுவை மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பதும் அவரது காரை ஓட்டி வந்தவர் வானூர் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது.
இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயர்ரக மது பாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார், ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்ன காமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வ நாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டானூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து செய்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பால முருகன் (25) என்பதும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரியை சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
- 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.
உளுந்தூர்பேட்டை:
புதுவையில் இருந்து மினிலாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்வாணன் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் இன்று காலை உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை பின்னால் ஜீப்பில் விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் அந்த மினிலாரி மற்றும் காரை மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரி மற்றும் காரில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். பின்னர் லாரியில் சோதனை நடத்திய போது அதில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
அந்த மதுபாட்டில்கள் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி செல்வது விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சமாகும். மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(வயது42), புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(46),சதீஷ் (31) மற்றும் பண்ருட்டி தட்டாம்பாளையத்தை சேர்ந்த ரங்கா(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- 175 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளுர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் உள்ள பூசனம் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு அவர் தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசனத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைதான பூசனத்தை போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபாட்டி ல்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பகுதியில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதன் பேரில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் கான்டிபன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருச்சுழியில் கருப்பசாமி (வயது 55) என்பவர் போலி மதுபாட்டில்கள் மறைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவரை பிடித்து, ராஜபாளையம் மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வீரன் மூலமாக திருமலை புரத்தைச் சேர்ந்த மூவேந்தன் (33), என்பவர் விற்பனைக்காக 1,566 மதுபாட்டில்கள் வாங்கப்பட்டு காரில் எம்.ரெட்டியபட்டி பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சாத்தான்குளம் வீரன், திருச்சுழியைச் சேர்ந்த கருப்பசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முனியசாமி (31), மதுரையை சேர்ந்த சந்தானம் (32), மூவேந்தன் ஆகிய 5 பேர் மீது எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்பசாமி, மூவேந்தன், முனியசாமி, சந்தானம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய வீரனை தேடி வருகின்றனர்.
மதுபாட்டில்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபாட்டில்களை வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சுழி பகுதியில் போலி மதுபாட்டில்கள் உலா வருவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.