search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவிடம்"

    • மோடியுடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர்.
    • காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார்.

    மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர். கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.

    இது மோடியின் உலகத் தலைவர் பிம்பத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்று முன் தினம் நடந்த என்.டி.ஏ கூட்டத்திலும் மோடி இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார்.

    இந்நிலையில் இன்று [ஜூன் 9] இரவு 7.15 மணி அளவில் மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தற்போது டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்.

    அந்த வகையில், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் நினைவிடமாக சதைவ் அடலுக்கு சென்று அதன்பின்னர் தேசிய போர் நினைவுச்சின்னம் அமைத்துள்ள இடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். 

    • 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்.
    • ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைப்பு.

    சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தையும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் என்றாலே போராட்டம்தான்.

    அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.
    • அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.

    சென்னை:

    மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.

    அப்போது, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தொண்டர்கள் வழிபடும் நினைவிடமாக மாற்றப்படும். அந்த நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை பிரேமலதா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.

    அந்த இடத்தில் மணி மண்டபம் அமைத்து எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் வைக்கப்பட்டு உள்ளது போல் அணையா ஜோதி வைக்கப்படுகிறது, விஜயகாந்த் உருவப்படமும் அதில் இடம் பெறுகிறது.

    நினைவிடத்துக்கு வரும் தொண்டர்கள் மணிமண்டபத்தை சுற்றி வந்து விஜயகாந்த் உருவப் படத்தை வணங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இறந்து 5-வது நாளில் செய்யப்படும் சடங்குகள் நாளை மறுநாள் (திங்கள்) செய்யப்படுகிறது. அதன் பிறகு பணிகள் தொடங்க உள்ளது. இதற்கிடையில் நினைவிட வரைபடமும் தயாராகிவிடும் என்றனர்.

    பணிகளை தொடங்கி ஒரு மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கோயம்பேடு ரோட்டில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையிலும் அமைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
    • சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

    அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வழிபாடு நடந்தது. அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார்.

    என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜாவின் சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    • மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினர்.
    • கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன், கோபி, கருணாகரன், சேவியர், தசரதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • 65-வது நினைவு தினத்தையொட்டி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினை விடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர். முதலில் இமானுவேல்சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி தலைமையில் பேரன்கள் சக்கரவர்த்தி, சந்திரசேகர், பேத்திகள் சுந்தரி, ரிஸ்வானா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், கயல்விழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் இன்று காலை இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் சுர்ஜித் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 டி.ஐ.ஜி.க்கள், 24 எஸ்.பி.க்கள், 26 ஏ.டி.எஸ்.பி.க்கள், 60 டி.எஸ்.பி.க்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் 150 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மேலும் 3 டிரோன் காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கமுதி பகுதியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் சென்று வந்தன.

    • முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-வது ஆண்டு நினைவு தினம்
    • காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களும் வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில் அவரது மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மகன்கள் விஜய் வசந்த் எம்.பி., வினோத்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களும் வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    • மேலூர் அருகே மேலவளவில் கொலை செய்யப்பட்ட 7 பேர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த முருகேசன் உட்பட 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.

    அதனை அடுத்து மேலவளவில் விடுதலை களம் அமைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனுக்கு சிலை மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று அவர்களுடைய 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதில் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு, நிர்வாகி ஆற்றல் அரசு மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மாவட்ட அமைப்பாளர் இ.எ.பாசறை, அரச. முத்துப்பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 



    மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 

    அவரது உடலுக்கு பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    ×