என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திரா காந்தி"

    • 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.
    • இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம்.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து சிம்லா ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் ரத்து செய்தது.

    சிம்லா ஒப்பந்தம்:

    1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை மீட்டெடுப்பதையும் உறவுகளை இயல்பாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, சிம்லா ஒப்பந்தம் ஜூலை 2, 1972 அன்று கையெழுத்தானது.

    போரில் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக மாறியது. கிழக்கு பாகிஸ்தானில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் - இந்தியா போர் நிறுத்தம் ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

    ஒப்பந்தத்தின் முக்கிய விதிகள்:

    டிசம்பர் 17, 1971 அன்று ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை இரு நாடுகளும்  முன்நிபந்தனைகளும் இல்லாமல் மதிக்கும். இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம் என்ற வாக்குறுதிகள் இதில் அடங்கும்.

    இந்த ஒப்பந்தத்தின்படி, போரின் போது கைப்பற்றப்பட்ட 13,000 சதுர கிலோமீட்டர் நிலம் இந்தியாவிடம் திரும்ப வழங்கப்பட்டது. சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு நிறுவப்பட்டது.

    இந்த வழித்தடத்தை ஒருதலைப்பட்சமாக மாற்ற எந்த முயற்சியும் இருக்காது என்றும் ஒப்பந்தம் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் வரையறுப்பதற்கும் சிம்லா ஒப்பந்தம் ஒரு முக்கிய ராஜதந்திர மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது

    கரூர்:

    முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவுநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு, இந்திரா காந்தி திருஉருவப்படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில சேவா தள செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், மாவட்ட சேவா தள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகேஸ்வரன், சின்னையன், நகரத்தலைவர் பெரியசாமி, தெற்கு நகரத்தலைவர் வெங்கடேஷ், கிழக்கு நகரத்தலைவர் சண்முக சுந்தரம் மற்றும் அனைத்து 

    துறை சார்ந்த தலைவர்களும் நிர்வாகிகளுக்கும் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

    • இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு நடந்தது
    • அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்

    அரியலூர்

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜ் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேகர், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து செலுத்தினர். இதே போல், புங்கங்குழி ஆதனூரிலுள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர். சுரேஷ், மாநகர, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபு மண்கொண்டார், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலா ளர்சசிகலா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், சுவிதா ஞானப்பிரகாசம், செந்தில்குமார், ஐ.என்.டி.யூ பொறுப்பாளர்கள் பாரதிதாசன், மணிவா சகன், சம்பத்குமார், சண்முகநாதன், முகிலன், சிவா, கோபாலய்யர், வி.எஸ்.மாதவன், வரகூர் மீசை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
    • கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட்சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், அருள்ராஜ், பிறைட், ஸ்டாலின், மரிய அருள்தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    என் பாட்டி(இந்திரா காந்தி)தான் என் பலம். நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்த இந்தியாவை நான் எப்போதும் பாதுகாப்பேன். உங்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடன் என் இதயத்தில் இருக்கின்றன' என்று பதிவிட்டு அவர் குறித்த ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மரியாதை
    • கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட் சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி பேரூராட்சி காங் கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், ராஜகிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்.
    • நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,

    "இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி, நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "தேர்தல் விதிமீறலை காரணம் காட்டி இதே காரணத்திற்காக தான் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த அரசு விமானத்தை ஒருவேளை பாஜக வாடகை எடுத்திருக்கலாம். ஆனால் மற்ற தலைவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த விவிஐபி ஹெலிகாப்டரை பயன்படுத்தும் போது பிரதமர் மட்டும் விமான படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்கான தேவை என்ன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான செய்தியை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும், இதற்காக 1975 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆனால் இன்று மோடி அரசு பணத்தையும், அரசு ஏஜென்சிகளையும், அரசு ஊழியர்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார்" என்று பதிவிட்டுள்ளார். 

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

     

    ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார். 

    • ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீது பாஜக இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது
    • காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்டது

    மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு வடமாநிலங்களில் பலமான தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மீது தொடங்கத்திலிருந்தே கடுமையான விமர்சனங்களை முனைவைத்து வருகின்றனர்.

    தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் இல்லாமல் சுதந்திரத்துக்குக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீதும் இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்கள் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபடத்தையும் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மோகன் பகவத் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர், காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு சுதந்திரத்துக்கு பாதை அமைத்தது என்றும் நாட்டுக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட ஏராளமான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கி அளித்து, இன்றளவும் நமக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

     

    ஒவ்வொரு இந்தியனையும் காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்துக்காகப் போராடத் தூண்டியது என்று பேசியுள்ளார். கடந்த மே 22 ஆம் தேதி பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது. மோகன் பகவத் பேசிய வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே இது என்பது குறிப்பிடத்தக்கது

    ×